இடுகைகள்

ஜனவரி 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழையாக என்னை நனைத்துவிடு

என்னை குப்பை ... என்கிறாய் .... அப்போ கூட்டி அள்ளி ... எடுத்துவிடு என்னை ....!!! ஒவ்வொரு..... திருமணத்துக்கு ..... பின்னாலும் ஒரு கண்ணீர் கதை திரைப்படமாய் .... ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!! காதல் ஓட்டை வீட்டில் .... இருக்கிறேன் .... மழையாக வந்து என்னை .... நனைத்துவிடு .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 934

எனக்கு நேராகவே இரு ....!!!

சூரியன் கிழக்கே .... தோன்றி மேற்கே .... மறையுமாம் .... நீயும் முகத்தில் .... தோன்றி -அகத்தில் ... மறைந்தாய் ....!!! நீ ஒரு விலாங்கு மீன் எனக்கு தலையையும் ... குடும்பத்துக்கு .... வாலையும் காட்டுகிறாய் ....!!! நீ கலங்கரை விளக்கம் .... நான் கப்பல் .... உன் உதவியில்லாமல் .... கரைசேர முடியாது ..... விட்டு விலகி விடாதே .... எனக்கு நேராகவே இரு ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 933

கவிப்புயல் இனியவன் கஸல் - 932

காதலில் மேதை ... ஆனவனும் உண்டு .... போதையானவனும் உண்டு .... நீ என்னை பேதையாக்கி  விட்டாய் .....!!!! காதல் தேன் கூட்டை ... கட்டியதும் நீ  கல்லெறிந்ததும் நீ  காதல் தேன் போல் .... வழிந்தோடுகிறது .....!!! பொருள் காணாமல் ... போனால் களவு .... மனம் காணாமல் ... போனால் காதலாம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 932

மௌனம் காதலை வெட்டும் .....!!!

இதயத்தின் ஈரம்  வற்றி துடிக்கும்  மீன் ஆனேன் ....!!! வைரம்  கண்ணாடியை .... வெட்டும் ... மௌனம் காதலை ... வெட்டும் .....!!! நீ......  எப்போதும்...  மென்மையானவள்....  கண்ணீர்  மென்மையானது  உன்னைப்போல் .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 931