இடுகைகள்

ஜனவரி 29, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் வானில் பறப்போம்

உருவத்தால் வேறுபாடு நிறத்தால் வேறுபாடு எண்ணத்தால் வேறுபாடு இருந்தாலும் காதல் வேறுபடகூடாது....!!! ஒருபக்கமாக இருந்து பயனேது வா அன்பே காதல் வானில் பறப்போம் ---------- எல்லாம் உனக்குத்தான் அன்பே 05

ஆயிரம் கண் கொண்டவள் -நீ

நான் கண்ட கண் அழகி -நீ ஆயிரம் கண் கொண்டவள் -நீ சிறு வயதில் ஆத்தா சொன்ன ஆயிரம் கண்ணுடைய ஆத்தா என்று சொன்னது -இப்போ நினைவு வருகிறது -நிச்சயம் ஆத்தா சொன்னது உண்மைதான் ...!!! ------------- எல்லாம் உனக்குத்தான் அன்பே 04

என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!

உயிரே - நீ திடீரென என்னை பார்த்த பார்வையில் விபத்துக்குள் சிக்கி அவசர சிகிச்சையில் இருக்கும் நோயாளி போல் ஆகிவிட்டேன் ...!!! குற்றுயிரும் குறை உயிருமாய் இருக்கும் என்னை ஒருமுறை மீண்டும் பார்த்து விடு என்னை உயிர்ப்பித்துவிடு ...!!! ------------- எல்லாம் உனக்குத்தான் அன்பே -03

உன் கண் மின்சாரத்தில் ...!!!

ஒற்றை கண்ணால் பார்த்ததில் நான் பித்தன் ஆனேன் -இரட்டை கண்ணால் பார்த்திருந்தால் செத்தே போயிருப்பேன் உன் கண் மின்சாரத்தில் ...!!! இப்போ நான் ஒரு தலையாக காதலிக்கலாம் -நிச்சயம் நீ என்னை இரட்டை கண்ணால் பார்ப்பாய் ....!!! ---- எல்லாம் உனக்கு தான் அன்பே 02

எல்லாம் உனக்கு தான் அன்பே

நீ காதலித்தாலும் நீ காதலிக்கா விட்டாலும் எனக்கு ஒன்றும் கவலையில்லை என் உயிர் உள்ளவரை உன்னை காதலிப்பேன் -இதயம் முழுக்க நிறைந்திருக்கும் -நீ உயிராய் துடிக்கிறாய் என் மூச்சு நிற்கும் போது என் காதல் நிற்கும் -இந்த கவிதை எல்லாம் உனக்கு தான் அன்பே - என் கவிதைகள் உன்னை காயப்படுத்த கூடாது என் இதயம் காயப்படட்டும் ...!!! ************************ குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும் இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!! தொடரும் இந்த வலிகள் ............................

நமக்கே காலம் மலரும்

பருவமடைந்த காலம் முதல் பக்குவமாய் உன்னை காதலிக்கிறேன் பக்கத்தில் நீ வரும் போது பட்டாம் பூச்சியாய் பறக்கிறது இதயம்....!!! பயம் ஒரு பக்கம் ஆசை ஒரு பக்கம் படாத பாடு படுகிறது -மனசு பட்டுப்புழுவாய் துடிக்கிறது மனசு ....!!! பண்பாக வாழவிரும்பும் காதலை பெற்றோர் பண்புடன்  ஏற்றுக்கொள்வர் பொறுத்திரு அன்பே நமக்கே காலம் மலரும்

தூண்டில் போட்டு என்னை

தூரத்தில் நின்றே சிரித்தவளே தூக்கத்தை என்னிடம் பறித்தவளே தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!

தவுடு பொடியாக்கி விட்டது

காலமெல்லாம் காத்து வைத்திருந்தேன் காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது

காதலித்து பார் ....!!!

தூக்கத்தை வரவழைக்க தூக்க மாத்திரை போடு தூக்கத்தை தொலைக்க காதலித்து பார் ....!!!

காய் தான் கிடைத்தது

காத்திருந்தால் காதல் கனியும் என்றார்கள் காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!

காதலால் காதல் செய் 07

காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில் அவள் / அவன் திடீரென பார்த்தால் ...? " உன் கண்ணும் என் கண்ணும் " " பட்டு தெறித்த போது காதல் மின்னல் " "பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் " " நான் பறந்தேன் "

காதலால் காதல் செய் 04

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும் என்று காதலனின் ஏக்கம் . "உன்னை பார்க்காமல் இருக்கும் " "ஒவ்வொரு நொடியும் என் பார்வை " " மங்கிக்கொண்டு போகிறது " "என் விழித்திரை நீ " தொடரும்

காதலால் காதல் செய் 03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா சொல்லவே முடியாது ....!!! " நீ வருகிறாய் என்றவுடன் " " எனக்கு அருள் தரப்போகிறாய் " " என் இதயம் " '' உனக்கும் சேர்த்து துடிக்கிறது " ''என் இதயம் " "எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே " தனி கவிதை தொடரும்

காதலால் காதல் செய் -02

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!! " நீ தலை குனிந்து செல்லும் போது " " என் தலையே வெடித்து சிதறுகிறது " " நம்பிக்கையுடன் காத்திருக்கிறது " " என் இதயம் ஒரு சொல்லுக்காக " தொடரும்

காதலால் காதல் செய்

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல . அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!! " மனத்தால் உனக்கு அபிசேகம் செய்கிறேன் - என் இதயத்தில் தெய்வமாக நீ இருப்பதால் " இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!! தொடரும்