இடுகைகள்

ஜூலை 8, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!! ---- பஞ்ச வர்ணகிளியே.... தினமும் அணியும்.... ஆடைகள் உன்னை... அப்படி அழைக்க... தூண்டுதடி ...!!! பச்சை கிளிக்கு... முன்னால் வந்து விடாதே... உன் கொவ்வை இதழை... கொத்திவிட்டு சென்று.... விடும் .....!!! என்னை பொறுத்த... மட்டில் நீ ஒருகாதல்... முத்து ....!!! ஒருதுளி மழைநீர்.... சிப்பிக்குள் முத்தாகிறது.... உன் சின்ன சிரிப்பு..... என் இதயத்தில் காதல் முத்தானாய் ...!!! & கவிப்புயல் இனியவன்

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!! ---- தயவு செய்து பேசு.... பேசாமல் இருக்கும் நொடி.... இறந்து கொண்டிருக்கிறேன்.... பேசினால் நிற்கப்போகும்.... மூச்சு துடிக்கும் .....!!! மறவர்களுக்கு காதல் நமக்கு மூச்சு தான் காதல் மறந்துவிடாதே .... உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்......!!! கண்ணால் செய்யும் காதலை காட்டிலும் எண்ணத்தால் செய்யும் காதல் அழகு ...!!! அருகில் இருக்கும் காதலை காட்டிலும் தொலைவில் இருக்கும் காதல் அழகு ...!!! பேசிகொண்டு இருக்கும் காதலை காட்டிலும் மௌனத்தால் செய்யும் காதல் அழகோ அழகு ..... அதற்காக காதல் ..... மௌனித்து விடக்கூடாது .....!!!

நானும் காதல் அவதாரம் தான் ....!!!

நீ கண் திறந்தபோது  எரிந்தேன் நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் நானும் காதல்  அவதாரம் தான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ நீ வேறு நான் வேறு இல்லை உணர்வுகளும் காதலும் வேறு இல்லை வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன்

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 02

காதலித்து உன்னை சுத்தமாக்கு.... கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு... இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ உலகில் போதை கொடூரம்   உன் கண் போதையை விட கொடூரம் காதல் ஒரு தடுமாற்றம் .....!!! ^ கவிப்புயல் இனியவன் 

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை

இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்