இடுகைகள்

ஜனவரி 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் வேண்டும் அதுவும் ...

உன் உண்மையான காதலை ... உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ... வார்த்தை ஜாலம் இல்லை ... உன்னோடு வாழும் வாழ்கை ... காலம் தான் உண்டு ...!!! காதல் வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... வாழ்க்கை வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... மரணம் வேண்டும் அதுவும் ... உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!

உயிரே என்னை காதல் செய்

உயிரே என்னை காதல் செய்.... உன்னை தவிர யாரும் என்னை ... காயப்படுத்த வேண்டாம் ... காயப்பட்டால் கூட அது ... உன்னால் இருக்கட்டும்   ....!!! தோல்வியும் வெற்றியும் ... உன்னால் ஏற்பட்டும் ... அதுவே என் வாழ்க்கையாக ... மாறட்டும் .... என் இதயத்தின் பௌர்ணமியும் அமாவாசையும் நீதான் ...!!!

கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை

நானும் ஒரு சாதனையாளன் .... என்னை விட இழப்புகளை ... யாரும் சந்தித்திருக்க முடியாது .... உன்னையும் சேர்த்துதான் .... சொல்கிறேன் .....!!! நினைப்பது போல் நீ .... இருந்திருந்தால் கடலை ... தோண்டி கருவாடு போட்டிருப்பேன்  - இப்போ ... நான் கருவாடாகிவிட்டேன் ...!!!