இடுகைகள்

அக்டோபர் 9, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் வலிக்கும் தான் ...!!!

என்னைபோல் நீயும் .... காதலித்துப்பார் .... உனக்கும் வலிதெரியும் ... காதல் என்றால் வலி .. வேண்டும் -அதுவும் உன்னால் தரமுடியும் ... காத்திருக்கிறேன் .. காதலுக்கு மட்டுமல்ல .... உன் வலிக்கும் தான் ...!!!

என்றும் காத்திருப்பேன் ....!!!

உனக்காக வடிக்கும் .. கண்ணீர் வலியானது... ஆனால் அழகானது .... அழகான நினைவுககளை .. நினைத்தல்லவா கண்ணீர் வடிக்கிறேன் ....!!! மீண்டும் நீ கிடைப்பாய் .. உனக்காக என்றும் ... காத்திருப்பேன் ....!!!

உனக்காக காத்திருப்பேன்

தள்ளி தள்ளி விடுகிறாய் .... தளராமல் மீண்டும் வருகிறேன் .... என்னை  வெறுக்கிறாயே ... தவிர என் காதலை வெறுக்க .. உன்னால் முடியவில்லை ... காலம் எல்லாம் காத்திருப்பேன் உனக்காக அல்ல உனக்காக ... மட்டும் ....மட்டுமே ....!!!

உனக்கு புரியவைப்பேன்

என்னவனே ...!!! உனக்கு நான் காதல் ... எனக்கு நீ காற்று ... பிரிந்த பின்னும் உன்னையே .. நினைக்கிறேன் - மன்னிக்கவும் சுவாசிக்கிறேன் .....!!! மூச்சை அடக்கி சில நிமிடங்கள் இருந்திருக்கிறேன் ... உன் நினைவுகள் இன்றி ... ஒரு நொடி கூட இருக்க.. இதயத்தால் முடியவில்லை ....!!! ஏன் பிரிந்தாய் என்னவனே ...? புரியவை இல்லையேல் .. உனக்கு புரியவைப்பேன்   ... நிலையான வலியை....!!!

காதல் மன முறிவு

அவள் தனக்காக .. காதலிக்க வில்லை ... எனக்காகவும் காதலித்தாள்...!!! கல்லூரிக்கு தனக்காக உணவு கொண்டுவருவதில்லை ... எனக்காகவும் கொண்டு வருவாள் ....!!! அழகான பொருளை கண்டால் தனக்கு மட்டும் .. வாங்குவதில்லை எனக்கும் ... வாங்குவாள் .....!!! எல்லாமே எனக்காக ... செய்தவள் காதல் மனமுறிவை... தனக்காக மட்டுமே செய்து ... சென்றுவிட்டாள்....!!! என்னவளே ... நீ செய்யாத ஒன்றை நான் ... உனக்காக செய்கிறேன் ... உன் வலியையும் சேர்த்து ... நானே சுமக்கிறேன் .....!!!

குழந்தைகள் கவிதைகள்

ஆயிரம் துயரங்களுடன் ... வீடு வரும் போது .... அத்தனையும் காற்றோடு பறந்துவிடும் அன்பு குழந்தையின் சிரிப்பால் ... அது சிரிப்பல்ல .... இறைவனின் வரம் ....!!! $$$$$ இல்லத்தில் ஆயிரம் ... பூக்கள் மலரலாம் ... உள்ளத்தால் மலரும் .. குழந்தையின் சிரிப்புக்கு ... குளிர்ந்திடும் இல்லத்தில் ... அன்பு என்னும் வாடாத பூ ....!!!