இடுகைகள்

டிசம்பர் 17, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

படம்
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை  ---------- ஒளி கொண்ட தேவனின் .... கருணை கொண்ட தேவனின் .. பிறந்த நாள் - கிறிஸ்துவின்  பிறந்த நாள் .....!!! தனக்காக  வாழாமல் பிறருக்காய் .... வாழ்தவரின் பிறந்தநாள் .... கிறிஸ்துவின் பிறந்த நாள் .....!!! எனக்காக தேவனே .... இவர்களின் தவறுகளை ... மன்னித்தருளும்பரமபிதாவே .... இரங்கிகேட்டவரின்... பிறந்தநாள் - கிறிஸ்துவின் .... பிறந்த நாள் .....!!! தேவனின் பிறந்தநாளை ... அன்புடன் கொண்டாடுவோம் ... அருளுடன் கொண்டாடுவோம் .... பண்புடன் கொண்டாடுவோம் ... கருணையுடன் கொண்டாடுவோம் ....!!! உலகில் கருணை பெருகிடவும் .... மனித நேயம் ஓங்கிடவும் .... அன்புவெள்ளம் பாய்ந்திடவும் .... கிறிஸ்துவின் நாளை கொணாடிடுவோம் ... உலகில் மாற்றத்தை ஏற்படுத்துடுவோம் ....!!!  கிறிஸ்மஸ் இறை விழாவை ... கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் ... இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....!!!

எப்படி வில் உடைந்தது ,,,?

வானவில்லைபோல் .... காதல் அழகாயிருந்தது ,,,, எப்படி வில் உடைந்தது ,,,? உன் முக அழகை விட .... உன் காதல் அழகு .... பிறப்பின் புனிதத்தை ... பெற்று விட்டாய் ...!!! சோதிடமும் காதலும் .... ஒன்று தான் புரிந்துகொள் .... ஒருவனை கொஞ்சம் கொஞ்சமாய் .... கொல்லும்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 920

பாகப்பிரிவினை

என்று ஆதாம் ஏவாள் ... தோன்றினார்களோ ... அன்றே காதலும் .... ஏவல் ஆகிவிட்டது ...!!! காதலிலும் ... பாகபிரிவினை ... உடல் என்னிடம் ... உயிர் உன்னிடம் .....!!! பூக்களின் காதல் தோல்வி பனித்துளி ,,,, மேகத்தில் காதல் தோல்வி மழைதுளி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 919

முகவரியை மாற்றி விட்டாயா ...?

ஜென்ம பாவத்துக்கு .... பரிகாரமாய் நீ காதலாய் வந்தாய் ....!!! ஏன் முகம் திருப்புகிறாய்... தவறு மனதை உறுத்துதா ..? உனக்கு அனுப்பிய ... காதல் கடிதங்கள் .... திரும்பி எனக்கே வருகிறது .... முகவரியை மாற்றி விட்டாயா ...? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 918

விட்டில் பூச்சியாய் கருக்கி விட்டாய்

பட்டாம் பூச்சியாய் ... பறந்த என்னை ... விட்டில் பூச்சியாய் ... கருக்கி விட்டாய் ....!!! கண்ணீர் கடலைவிட .... சோகமானது .... உவர்ப்பதில் இரண்டும் ... ஒன்றுதான் ...!!! நான் மூச்சுவிடுவதால் .... நீ வாழுகிறாய் ..... போதும் அது காதல் ... இல்லாவிட்டாலும் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 917

முள் மெத்தையில் உறங்குகிறேன் ....!!!

உன்னை காதலித்து பஞ்சு மெத்தையில் ... உறங்காமல் முள் மெத்தையில் .... உறங்குகிறேன் ....!!! நினைவுகள் ... நீர்குமிழியை இருக்கலாம் குங்கும சிமிழாய் இருக்கலாம் சோகத்தின் பாதையில் .... வருகிறேன் நீயும் நிச்சயம் வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 916

காதலுக்கு தண்ணீர்

காதலில் ஏற்ற இறக்கம் .... நீ அமர் முடுகளில் .... நான் ஆர்முடுகளில் ....!!! என் ..... தலையெழுத்தை .... நீ காதல் ரேகையால் ... வரைந்து விட்டாய் ....!!! எப்போது கண்ணீர் விட்டேன் ....? காதலுக்கு தண்ணீர் ... தெளித்தல்லவா விட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 915

இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!!

என்னவளின் டயறியிலிருந்து ...12 ----- எனக்கும் உனக்கும் .... திருமணம் ஆகாவிட்டால் ..... கவலையில்லை - என்  தோழியின் கல்யாணத்தில்.... நான் மணப்பெண்ணாகவும் ... நீ மாப்பிள்ளையாகவும் ... காட்சி தந்த அந்த அழகு .... இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!!  + இப்படிக்கு உன்னால்  உருகும் இதயம்  இனியவள்  என்னவளின் பக்கம் 12

என் சாமி நீ துன்ப பட்டதால்

என்னவளின் டயறியிலிருந்து ...11 ------ அன்று நான் கோயிலுக்கு .... செல்லும்போது தூரத்தில் .... இருந்து அருகில் வந்து ... ஏதோ சொல்ல எத்தனித்தாய் .... அதற்குள் அப்பா அருகில் ... வந்ததால் நீ துடித்த துடிப்பை .... நினைக்கும்போது கவலையா ... இருந்ததடா - சாமியை கூட .... வணங்க மனம் வரவில்லை .... என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!! + இப்படிக்கு உன்னால்  உருகும் இதயம்  இனியவள்  என்னவளின் பக்கம் 11

சந்திர மண்டலத்தில் அருவி

நீ  அருவிக்கு அருகில் எடுத்த ... புகைப்படத்தை பார்த்தேன் .... இரண்டு அருவிகள் போட்டி ... போடுவதுபோல் இருந்தது ... என்றாலும் நீ தான் அழகு .... சந்திர மண்டலத்தில் அருவி ... அழகுதானே ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 25

எனக்கு அழகு இருக்கா ....?

எனக்கு அழகு இருக்கா ....? இல்லையா என தெரியாது .... உன்னை காதலிக்கும் அளவு ... உள்ளம் அழகாய் அழகாய் .... இருக்கிறது .....!!! இல்லையேல் ... உடல் அழகை எனக்கு தா ... உள்ளத்தின் அழகை நான் .... தருகிறேன் காதல் என்றால் .... பரிமாற்றம் தானே ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 24

பூக்களின் ஆரவாரத்திலிருந்து

ஆம்  நீ வீட்டில் இருந்து .... வந்துகொண்டிருகிறாய்.... வீசும் காற்றிலிருந்து .... கேட்கும் ஓசையிலிருந்து .... பூக்களின் ஆரவாரத்திலிருந்து... பட்டாம் பூச்சிகளின்  படபடப்பிலிருந்து,,,,, புரிந்துகொண்டேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 23

திருவாயால் அழைதுவிடு

நீ காலில் முள் குத்தி ..... "ஐயோ" என்று கூச்சலிட்டாய் .... எனக்கோ "ஐயோ" என்றது ... "என்னையோ" அழைகிறாய் ... என்று இதயம் துடித்தது .... "ஐயோ" என்னை ஒருமுறை.... உன் திருவாயால் அழைதுவிடு ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 22

ஏன் தயங்குகிறாய் ....?

நம்பினால் நம்பு ..... உன்னை நினைத்து கவிதை .... எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ... கடதாசி பூவில் ஒரு இனம் .... புரியாத வாசனை ..... செயற்கை மலரே என்னை .... காதலிக்கும் போது .... என் இயற்கை பூ நீ .... ஏன் தயங்குகிறாய் ....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 21