இடுகைகள்

ஜூன் 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னோடு வந்துவிடு .....!!!

உன் நினைவுகளின் .... எண்ணங்களோடு .... தூங்கினேன் -நீ கனவில் கூட வரவில்லை ....!!! காதல் நிறைந்த இடத்தில் .... வாழ பொருத்தமில்லாதவள் .... காதலே இல்லாத இடத்தில் .... உன்னை சேர்த்து விடுகிறேன் .... என்னோடு வந்துவிடு .....!!! நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1027

இதயத்தை முள்ளாய் வைத்திராதே

உன்முகம் ..... பூரண சந்திரன் .... வார்த்தைகள் சூரியன் ... நம் காதல் சிலவேளை குளிர்கிறது  ..... சுடுகிறது .....!!! இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! காதல் குயவன் .... கையில் பானைபோல் .... அழகாக வடித்தால்.... அழகுதான் ,.........!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1026

உன்னை பார்க்க மாட்டேன்

உன்னை பார்க்க மாட்டேன்... என்று கண் மூடியது .... பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ... அவள் உன்னை விட்டு .... விலகப்போகிறாள்.... சீக்கரம் பார் என்று .... கண்ணை சுறண்டுது .... இதயம் ...!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நிறுத்தி விடாதே ...

என் .... சின்ன கவிதை... உன் சின்ன சின்ன ... செல்லசண்டையால் .... வருகிறது.... நிறுத்தி விடாதே ... செல்லகுறும்பு .... சண்டையை ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & சுவாசிக்கும் மூச்சாய் -நீ பேசும் பேச்சாய் -நீ சிரிக்கும் சிரிப்பாய் -நீ காணும் கனவாய்-நீ விடும் கண்ணீர்- நீ இத்தனையும் -நீயாக அத்தனையும் -நானாக காதல் எப்படி நீவேறு ... நான் வேறாகியது ....? & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!! ------ தின பத்திரிகையை வாசித்து .... உலக நடப்பை விவாதித்து .... கொண்டிருந்த இருவரை பார்த்து .... தோளில் இருந்த துணியால் .... வாயை பொத்திய படி சிரித்த .... வழிப்போக்கன் ........!!! பேசத்தொடங்கினான் ....!!! விசித்திர உலகமையா ...... உண்மை உலகை ஒருமுறைசுற்றி..... வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி ..... வந்து விடுகிறது - இதுதான் இன்றைய ..... உண்மையின் இன்றைய நிலை ....!!! இதனால் தான் ..... தீர்ப்புக்களும் தீர்வுகளும் ..... காலம் கடந்தே போய்விடுகிறது ..... உண்மையை நிரூபிக்க முன் .... பொய் உண்மையை கொஞ்சம் .... கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!! உலகை ஏமாறுவதர்காக ..... இன்றைய சட்டங்களும் விதிகளும் ..... உண்மையும் பொய்யும் கலந்த .... சட்டத்தில் இயங்கி வருகின்றன ...... எல்லோருக்கும் நல்லவனாக ..... சட்டம் வேஷம் போடுகிறது ......!!! உலகில் ஒருபக்கம் அழிவு ..... மறுபக்கம் ஆனந்த கூத்து ...... இதற்கெல்லாம் காரணம் ...... சட்டம் "உண்மை பாதி" ..... " பொய் பாதி" ஆக இருப்பதே ..... வேதனை என்வென்றால் ..... உண்மையை  நியாயப்படுத்த .... முன்னர் பொய் அதனை

வழிப்போக்கனின் கவிதை

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம்  ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம போவத்தில்லை ..... பணம் படைத்தவன் வயிறும் .... மனமும் நன்றாக நிரம்புகிறது ..... அவர்கள் பார்த்து நமக்கு .... படைத்தால் தான் நம் வயிறு ...... நிரம்ப முடியும் ..........!!! அதுசரி உமக்கும் புத்தனுக்கும் ..... அப்படியென்ன அரசமரத்தில் .... காதல் - எங்கெல்லாம் அரசு  முளைக்கிறதோ அங்கெல்லாம் .... இருவரும் அரசை பிடிப்பதுபோல் .... அரச மரத்தை பிடிக்கிறீர்கள் ..... அரசை