இடுகைகள்

ஆகஸ்ட் 18, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீராய் வெளியேறுகிறாய்...?

உணர்வைப்போல் உனக்கும் வரைவிலக்கணம் இல்லை ....!!! உடலில் எங்கு இருக்கிறது உயிர் ...? இதயத்தில் எங்கு இருக்கிறாய் நீ ....? என் கண்ணில் இருக்கும் நீ ஏன் கண்ணீராய் வெளியேறுகிறாய்...? கஸல் 370

அதில் காதலர்கள்

தெரிந்தும்  தொலைவதுதான்  காதல் ....!!! நினைவுகள் அழியாது  கனவுகள் குலையாது  உண்மைக்காதல் ...!!! உலகமே நாடக களம்  அதில் காதலர்கள்  காமடி நடிகர்கள் ....!!! கஸல் 369

நீ வைரக்கல்

நீ வைரக்கல் வடிவாகவும் விசமாகவும் இருக்கிறாய் ....!!! ஞாபங்கள் எனக்கு கற்கள் -உனக்கு பஞ்சு .....!!! நீ  என்னை விட்டு விலகமுதல் -உன் நினைவுகள் என்னிடம் உறங்கிவிடுகின்றன ....!!! கஸல் ;368

காற்றுக்கு நன்றி

காற்றுக்கு நன்றி சொல்வேன் என் கண்ணீரை அவள் காணமுன்னர் ஆவியாக்கியதற்கு ....!!!

உன்னோடு பழகிய

உறக்கத்தை தொலைத்து இத்தனை இரவுகள் ஏன் என்பதை கண்டறிய என்னும் எத்தனை நாட்களோ ...? உன்னோடு பழகிய நாட்கள் வரையும் தொடரும் போல் ...!!!

இன்றைய ஹைக்கூகள்

கடவு சீட்டில்லாமல் உலகை சுற்றிவரும்         பறவை ************************* மலர் ஈசல்   ஒருநாள் ஆயுள் ************************** இரண்டு குரலை இணைக்கும் தரகர்      தொலைபேசி