இடுகைகள்

மே 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

உரிமைக்காக போராடிய போராட்டம் .... உலகறிய செய்த நம் போராட்டம் .... உலகமே உற்று பார்க்கும் போராட்டம் ..... உயிரை தியாகம் செய்த போராட்டம் .... உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!! தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு ..... தன்மானத்தை இழக்கமாட்டான் .... தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் .... தன் உறவுகளை விற்கமாட்டான் .... தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!! வலிக்குதடா இப்போ இதயம் ..... கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் .... பேதைகளை போதையாக பார்ப்பதும் .... போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை .... மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை +02

வலிக்கும் கவிதைகள்

என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால்  ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது  கொடியது ... மனிதபிறவி கொடியது  ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை 

நான் சொல்லும் தீர்ப்பு ....!!!

படம்
கொடுமை கொடுமை .... காட்டுமிறான்டிகளின் உச்ச கட்ட கொடுமை .... ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... கொடூரமாய் கொல்லப்படும்... கொடூர கொடுமை ......!!! அந்நிய படையின் ஆதிக்கத்தில் ... கற்பிழந்த ஈழச்சிகள் .....! ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... செம்மணி வெளியில் .... வேம்படி மாணவி ....!!! வெறி நாய்களிடம் அகப்பட்ட ... வெள்ளை முயல்போல் .... புங்குடுதீவில் வித்தியாவின் .... கொடூர கொலை ...!!! நான் சொல்லும் தீர்ப்பு ....!!! வெறிகொண்ட .... காட்டுமிறாண்டிகளை.... உடன் கொல்ல கூடாது .... அணுவணுவாய் அனுபவித்து .... சாகவேண்டும் .....!!! இவர்கள் பெற்றெடுத்த பெண் .... குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... பாதுகாக்க வேண்டும் ....!!! இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!! பெண் குழந்தை இருந்தால் ... இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ... காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ... என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!! சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை பறிக்க வேண்டும் ......!!! தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ... பறிக்க வேண்டும் ....!!!