இடுகைகள்

டிசம்பர் 16, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு

வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு -------------- இழிவு ஒன்றிருந்தால் ... உயர்வு ஒன்று இருக்கும் .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! இறக்கம் ஒன்றிருந்தால் ... ஏற்றம் நிச்சயம் இருக்கும் ... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! பள்ளம் ஒன்றிருந்தால் ... மேடு ஒன்றிருக்கும் வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! தோல்வியொன்றிருந்தால் .... வெற்றி நிச்சயம் உண்டு .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

என் கவிதை

படம்
கவிதை ...........!!!  தனியே வரிகளல்ல  தனியே வலிகளல்ல  தனியே வார்த்தையாளமல்ல  தனியே உணர்வல்ல  தனியே உணர்ச்சியுமல்ல ...  தனியே தனி தேவையுமல்ல  தனியே தனி விருப்பமுமல்ல ....  தனியே அனுபவமுமல்ல ...  தனியே அறிவுமல்ல ....  தனியே இன்பமுமல்ல  தனியே துன்பமுமல்ல ....  தனியே ஆசையுமல்ல ....  தனியே மோகமுமல்ல ...  தனியே ரசனையுமல்ல  தனியே கற்பனையுமல்ல ...  தனியே உண்மையுமல்ல  கவிதை .....!!!  ஆத்மாவின் வெளிப்பாடு ...  ஆத்மாவின் உந்தல்  ஆத்மாவின் உணர்வு  ஆத்மாவின் செயற்பாடு ...  ஆத்மாவின் தொழிற்பாடு  ஆத்மாவின் கடமை  ஆத்மாவின் தேவை  ஆத்மாவின் தேடல்  ஆத்மாவின் ஆரம்பம்  ஆத்மாவின் முடிவு ........!!!  கவிதை ......!!!  எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ ....  அதை எழுதுகிறேன் இது கருத்தாகவும் ...  இருக்கலாம் கருதற்றும் இருக்கலாம் ....  ஆத்மா என்றால் யாருக்கு தெரியும் ...  அதன் விளக்கமும் நிறைவும் .....?

நெஞ்சு பொறுக்குதில்லையே

படம்
நெஞ்சு பொறுக்குதில்லையே  -------------  இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ...  அதிகமாய் இயற்கை வளத்தை ....  சுரண்டும் மனிதரை பார்த்தால் ....  நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  என்ன துன்பம் வந்தாலும் ....  எவர் சொத்து அழிந்தாலும் ....  என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் ....  கிடைத்ததை சுருட்டும் மனிதனை ....  கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் ....  இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ...  அரசியல் வாதிகளையும் ....  கிடைத்த பொருளை பங்கிட்டு ....  வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ...  முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ...  நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  தந்தையுடன் மகள்செல்லும்போதும் ....  கணவனுடம் மனைவி செல்லும் போதும் ....  ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்....  சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,,  இளைஞனை பார்த்தால் மனமே ....  நெஞ்சு பொறுக்குதில்லையே ...  நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  மகளாய் கருதவேண்டிய பெண்மையை ....  தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை....  தாயாய் வணங்கவேண்ட

சுற்றுசுழல் மாசுபாடு கவிதை

படம்
சுற்றுசுழல் மாசுபாடு கவிதை சூழலை மாசுபடுதுவோம் ....  புதிய புதிய நோய்களை ....  பெற்றிடுவோம் .....  வேறென்ன சொல்ல கவிதையில் ....  குழந்தைக்கும் புரிந்திடும் ....  சூழலை பாதுகாக்கணும் ....  சமுதாயமே உனக்கேன் ....  புரியவில்லை சூழலை பாதுகாக்க ...?  மரத்தை .....  வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!!  குளத்தை ....  மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!!  பொலித்தீனை ....  எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!!  காறி துப்புகிறோம் ....  பழக்கவழக்கம் இல்லாமல் ....!!  குப்பையை ....  தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!!  வீடுக்கொரு மரம் நடுவோம் ....  தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் ....  பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் ....  குப்பையை தொட்டிக்குள் போடுவோம் ....  இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ...  வாழ்வோம் .....!!!

மரம் வளர்ப்போம்

படம்
மரம் வளர்ப்போம்  -----  மரம்  அஃறிணையில்லை....  உயர்திணை உணர்ந்தவன் ....  எவனோ அவனே மனிதன் ...!!!  ஒரு  மகனை வார்ப்பது ....  அவன் குடும்பத்துக்கே ....  பயன் தரும் .....  ஒரு மரத்தை வளர்ப்பது ....  அவன் சந்ததிக்கே ....  பயன் தரும் .....!!!  ஒரு குழந்தை....  அவதரிக்கும் போது ...  ஒரு மரமும்நடுவோம் ..  மரமாக பாராமல் .....  குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!

இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்

படம்
பச்சை புல்வெளி ------- பச்சை புல் வெளியில் ..... உச்சி வெய்யிலில் நின்றாலும் .... உச்சி குளிரும் மனிதனே .... உச்சி குளிரும் .....!!! கண் ...... எரிச்சல் உள்ளவர்கள் .... கண் கூச்சம் உள்ளவர்கள் .... பச்சை புல் வெளியை .... உற்று பார்த்துவந்தால்..... கண்ணின் நோய்கள் தீரும் .... மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!! அதிகாலை வேளையில்.... பனித்துளி பன்னீர் துளிபோல் ... சுமர்ந்துகொண்டு அழகை ... காட்டும் பச்சை புல்வெளியில் .... ஒருமுறை கை நனைத்துப்பார் .... குளிர்வது கை மட்டுமல்ல .... மனமும்தான் மனிதா....!!! பூமிக்கு இயற்கை கொடுத்த ..... பச்சை கம்பளம் புல்வெளி .... துணிப்புல்  மேயும் முயல் .... அடிப்புல் வரை மேயும் மாடு .... பறந்து திரியும் பட்டாம் பூச்சி .... பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!

காதல் வேண்டாம்....

காதல்  வேண்டாம்.... காதல் வேண்டாம் .... நீ இல்லாவிட்டால் .... காதல் வேண்டாம் ....!!! நீ வேண்டும் நீயேவேண்டும் ... உன்னில் காதல் இல்லையெனில் .... நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!! என்னை சுற்றி இருந்த .. இருளை நீக்கியவள் -நீ அணையப்போகிறேன்.... அன்று அடம்பிடிக்கிறாய்... நானோ கவிதை என்ற... சுவரால் பாதுகாக்கிறேன்... நீ வாயால் ஊதி.. அணைக்கப்போகிறேன்... என்கிறாய் -நான் என்ன ... செய்யமுடியும் ...??? 

புரியுதா காதல் அழகு ....!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..... காதலின் அழகு நடத்தையில் தெரியும் .... உனக்கு புரியுதா காதல் அழகு ....!!! + மூன்றுவரி கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

காதலே வெளிப்படுத்தும் ....!!!

ஒருவனிடம்  இருக்கும் நல்ல குணம் .... மறைந்திருக்கும் கெட்ட குணம் காதலே வெளிப்படுத்தும் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மூன்றுவரி கவிதைகள்

நானே உன்னை நினைத்தேன்.... நீ எப்படி என்னை காதலித்தாய் ....? காதல் இறைவனின் இணைப்பு ...!!! + மூன்றுவரி கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

பசிக்கொடுமை - குறுங்கவிதை

பசிக்கொடுமை - குறுங்கவிதை குழந்தைக்கு பசிவந்தால் ...... தாயின் வயிறு எரியும் .... தந்தையின் மனசு புகையும் ..... வீட்டில் இருக்கும் .... எல்லோர் வயிறும் வெந்து .... சிவக்கும் .......!!! -------- வீட்டில் அடுப்பெரியாத .... போதெல்லாம் விறகுகள் .... ஓய்வெடுக்கும் .... அகப்பைகள் நடனமாடும் ..... எலும்புகள் விறகாகும் .... நரம்புகள் சாம்பலாகும் ....!!! -------- செல்வந்தன் வீட்டில் .... ஜீரணமாகாமல் அவதிப்படுகிறான் .... வறியவன் வீட்டில் .... ஜீவனை காக்க அவதிப்படுகிறான்...!!!