செவ்வாய், 27 ஜனவரி, 2015

என் உயிர் நண்பனை போல் ...!!!

நான் சிரிக்கிறேன் ...
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான்   ....!!!

நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!

ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

அழுது கொண்டு இருந்தேன் ....
அமைதியின்றி இருந்தேன் ....
யாராவது உதவுவார்களா ....?
துன்பத்தை பகிர்வார்களா ...?
ஏக்கத்தோடு இருந்தேன் ....!!!

என் தோளில் ஒரு கை ...
எப்போதுமே நான் அறியாத கை ...
சற்று திரும்பி பார்த்தேன் ....
இனம்புரியாத பிணைப்பு ...
பிறந்தது அன்றிலிருந்து நட்பு .....!!!

இப்போ என் சுமையை ...
அவனும் அவன் சுமையை ...
நானும் சுமக்கிறோம் ....
துன்பம் மட்டுமல்ல இன்பமும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

உன் வருகையில் தான் ...

உன் நினைவால் ...
துடித்து துடித்து ...
என் இதயம் துடிப்பே ....
இல்லாமல் .....
போகப்போகிறது .....!!!

நான் விடும்  மூச்சு ....
அது உன் பேச்சில் ...
தான் தங்கியிருக்கிறது ....
இன்றைய இன்ப துன்பம் ...
உன் வருகையில் தான் ...
தங்கியிருக்கிறது ....!!!

கற்று தாருவாயா ...?

அன்பே எனக்கும் ....
கற்று தாருவாயா ...?
சிரித்து விட்டு முறைத்து ...
கொண்டு போவதற்கு ....?

காதலித்துவிட்டு  ....
காதலே தெரியாததுபோல் ....
குனிந்து செல்வதற்கு ....
எனக்கும் கற்றுத்தா....
நானும் உன்னைப்போல் ....
வாழ்வதற்கு ....!!!

காதலி ஒரு மாயை ....

நான்
வரும் போது - நீ
மறைகிறாய் - நீ
வரும்போது நான்
மறைகிறேன் - காதல்
சூரிய சந்திர உதயமோ ...?


கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!


காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;770

மெழுகுதிரியால் எழுதப்படுகிறது ....!!!

என் 
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!

நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!

இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;769

எனக்கே பாவமன்னிப்பு ...

உன்னை காதலித்த ...
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!

உன்
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!

என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;768

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...