இடுகைகள்

நவம்பர் 26, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் புதிர் ...!!!

என்னை கொஞ்சம் ... கொஞ்சமாக வருத்தவே ... கவிதை எழுதுகிறேன் ....!!! நீ  புரிய முடியாத புதிர்  நான் புரிந்தும் புரியாத  காதல் புதிர் ...!!! நீ என்னோடு ... நடந்து வந்த தூரம் ... பாதையில் குழி வரவில்லை .. இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ... நெருப்பு மூட்டியது அறிவு  நீ என் கண்ணை... உரசி காதல் தந்தாய் ... அதுதான் சாம்பலானதோ...? எனக்கும் உனக்கும் .... உறவும் காதல் தான்....  பிரிவும் காதல் தான் ....!!! சீ ....உனக்கு காதலிக்க கூட  .. தெரியாது என்று ... இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;754

உன்னை நினைத்து

உன்னை நினைத்து  அன்பாகத்தான் கவிதை ... எழுதுகிறேன் ... எப்படியோ வலியாக... மாறி விடுகிறது ...!!! காதலுக்கு  மரணம் இல்லை ... எப்படி நம் காதல்  புதைகுழிக்குள்  நடக்கிறது  ....!!! என்னை விட உலகில்  ஏழை யாரும் இல்லை  இன்ப வரிகளே  வருகுதில்லை ......!!! கே இனியவன் கஸல்  கவிதை ;753

கற்றுக்கொண்டேன் ...!!!

உன்னை  காதலித்ததில் .... நன்றாக அழுவதற்கு ... கற்றுக்கொண்டேன் ...!!! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...!!! உனக்காக  காத்திருந்த இரவுகளால்  என் கருவிழி ... வெண்மையாகிவிட்டது ...!!! கே இனியவன் கஸல்  கவிதை ;752

கண்ணீர் வரவைகிறது ...!!!

காற்றை போல் உனக்கு ... வாசமுமில்லை  நிறமுமில்லை ..... காதலில் பயன்  படுத்தாதே .....!!! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...!!! நான்  உன் கண் இமையை.... ரசிக்கிறேன் நீயோ ... அழித்து விடுகிறாய் ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;751