இடுகைகள்

அக்டோபர் 28, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் மீது - நீ

உன் வெட்கம் என்னை .... தலை குனிய வைக்கிறது .... உன் பார்வை என்னை .... மனிதனாக்கியது....!!! என் காதல் மீது - நீ ... ஏறிநின்று குதிக்க ஆசைப்படுவதேன் ...? காதலில் .... வலி -ராகம் .. கண்ணீர் - மது .... பிரிவு - வாழ்கை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 880

அணைந்து விடாதே ....!!!

எட்ட முடியாத காதலர் நாம் ..... சூரியனும் சந்திரனாய் ... வானமும் நிலமுமாய் ...!!! காதலை விதைத்தேன் ... வதையாகும்  உணர்ந்தேன் ... காதல் ஆழ்கடல் -நீ துறைமுகம் ....!!! நான் வெறும் நெருப்பு ... நீயே வெப்பம் ... நீயே ஒளி.... நீயே கரி .... நீ தணல் ..... அணைந்து விடாதே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 879

பனி மழையாக தூவி

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

விதி மதி இரண்டும் இழப்பாய் ....

வானவில்லில் ஏழுநிறம் .... வானத்து அழகியே உனக்கும் ... வானவில் குணமோ ....? வா என்கிறாய்  போ என்கிறாய் ....? விட்டில் பூச்சியை .... விளக்கம் காட்டினேன் .... விதி எனக்கும் சரியானது .... விதி மதி இரண்டும் இழப்பாய் .... காதலித்துப்பார் ....!!! வீறாப்புடன் .... வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் .... வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ... காதல் கண்னை மறைக்கும் ... உறவையும் மறக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 878

காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு தா .... கிள்ளி விட்டு போனபோது .... கிள்ளியது என் இதயம் என்பதை .... கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது .... கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!! காத்திருந்தேன் கவிதை வந்தது .... காணாமல் போனாய் கவிதை வந்தது .... காதல் பைத்தியம் என்றார்கள் .... காதலித்து பாருங்கள் புரியும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 877

ஆருயிரே என்றாய் ....

இறந்த காலம் தான் .... இனிமையான காலம் .... இனிமையாய் நீ பேசி .... இளமையை ரசித்தேன் .... இப்போ தனிமையில் ....!!! உனக்காய் வாழ்வேன் ... உறுதியாய் கூறினாய் .... உயிரை மறந்து வாழ்ந்தேன் ..... உயிர் வலிக்கிறது இப்போ ....!!! அன்பே என்றாய் .... அனைத்தையும் இழந்தேன் .... ஆருயிரே என்றாய் .... ஆவியாய் அலைகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 876

நண்பன் -வாழ்த்தியது

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

படம்
 by  நேசமுடன் ஹாசிம்  Today at 11:35 + கவிதைக் களஞ்சியமாய்  தொட்டதெல்லாம் கவிதையாக்கி  உலகவலம் கவிதைகளால் உருவாக்கி தமிழுக்கு ஆற்றும் தொண்டினை  பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000 உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்  தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன்  எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில்  நன்மை செய் பலனை எதிர்பாராதே  இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்