இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளும் ஒரு நாள் மலரும்

மலர்போல் வந்து .... முள்ளாய் போன  காதலும் உண்டு....!!! முள்போல் வந்து .... மலராய் மலர்ந்த ... காதலும் உண்டு....!!! காதலை காதலால் ... காதல் செய்தால் ... முள்ளும் ஒருநாள் ... மலராகும் ....!!! ^ முள்ளும் ஒரு நாள் மலரும்  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

சிலுவை சுமக்கும் மனிதன்

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........சிலுவை சுமக்கும் மனிதன்....... ^^^^^^^^^^^^^^^^^ மனிதனின் எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... எல்லா விளைவுகளும் ஆணியாக.... அறையப்படுகின்றன....!!! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! கல்வி, பதவி, என்னும் .... சிலுவையை சுமக்கிறான் ..... அதிகாரம் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! உழைப்பு, வருமானம் எனும் ... சிலுவையாய் சுமக்கிறான் .... விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! போட்டி வெற்றி என்னும் .... சிலுவையாய் சுமக்கிறான் .... பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! அத்தனை சுமைகளையும் .... சுமக்கும் மனிதனுக்கு .... விடுதலை ஒன்றே விடுதலை .... ஓடும் புளியம்பழம் போல் .... வாழ்வதே விடுதலை .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

தப்புக்கணக்கு

தப்புக்கணக்கு  ----- தூரத்தில் இருப்பதிலும் .... மறை பொருளாய் இருப்பதிலும் .... எப்பவுமே மனித மனத்துக்கு ..... ஒரு இச்சையுண்டு....!!! எனக்கு அது விதிவிலக்கல்ல .... நிலாமீது ஒரு காதல் .... விண்மீன்கள் மீது மோகம் .... இரண்டையும் ரசிப்பதற்கு .... கனவு விமானத்தில் ... விண் மண்டலம் சென்றேன் .....!!! நிலவருகே சென்றேன் .... வா என்று அழைகவில்லை ..... அவள் மென்மை அழகில் .... மயங்கினேன் என்னை .... மறந்து கவிதை எழுதினேன் .....!!! மெல்ல சொன்னது நிலா .... அதிகம் என்னில் காதல் .... கொள்ளாதே - எனக்கும் ... இருட்டு உண்டு என்னுள் ... இருளும் உண்டு .......!!! நிலா அருகில் துடித்து .... நடித்துகொண்டிருந்த .... விண் மீன்கள் கண்களை ... சிமிட்டி சிமிட்டி என்னை .... அழைத்துக்கொண்டிருந்தன ..... அருகில் சென்றேன் ..... தள்ளி போய்விடு என்று ... கத்தியது .....!!! திகைத்து நின்றேன் .... நீதானே என்னை கண்ணால்... சிமிட்டி சிமிட்டி வா வா ... என்றாய் இப்போ திட்டுகிறாயே ....? போடா மூடனே .... என் குணவியல்பு அதுவே .... நீ தப்பாக நினைத்தது -என்  தப்பில்லையே ...??? மனித மனம் இப்படித்தான் ... அருகில் உள்ள அழகை ரசிக்காது ...

காரணம் சொல்வேன்

உன்னையேன்.... எனக்கு பிடிகிறது ... என்பதற்கு ஆயிரம் ... காரணம் சொல்வேன் ...!!! உன்  ஒவ்வொரு செயலும் .... எனக்கும் பிடிக்கும் ... நேற்று ஒருகாரணம் ... இன்று ஒருகாரணம் ... சொல்கிறாயே என்கிறாய் ....!!! நீயும் அப்படிதானே .... நேற்று ஒரு செயல் .... இன்று ஒரு செயல் .... செய்துகொண்டிருகிறாய்....!!! ^ என் காதல் பைங்கிளியே -05 காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

உன் மீது நான் வைத்த காதல்

நீ ... எத்தனை...  முறை திட்டுகிறாயோ...? அதன் இருமடங்கு உன்னை ... நான் திட்டுவேன் .... நிச்சயம்  உனக்கு கோபம் வரும் .... அதுதான் எனக்கு தேவை ....!!! கோபம் தணிந்தபின் .... நிச்சயம் என்னை நினைப்பாய் .... அப்போது புரியும் .... உன் மீது நான் வைத்த காதல் ,,,,!!! ^ என் காதல் பைங்கிளியே -04 காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

இனியவா என அழைதுப்பார்

ஒருமுறை என்னை .... இனியவா என அழைதுப்பார் .... உன் இதயத்தில் ஆயிரம் .... பூக்கள் பூக்கும் அழகை பார் ....!!! என்னை நீ  அழைக்கும் நாள் வெகு .... தூரத்திலில்லை .... அன்று நான் இறந்து ... பிறப்பேன் உனக்காக ...!!! ^ என் காதல் பைங்கிளியே  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

என்னை காதலித்துப்பார்

நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

என் காதல் பைங்கிளியே

நீ  எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க....  எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என்  காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே  காதல் கவிதை  கவிப்புயல் இனியவன்

பிறப்பும் இறப்பும் சமன்

பிறப்பும் இறப்பும் சமன் --- இறந்த பிணத்தை ..... இறக்கப்போகும் பிணங்கள் .... ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!! இறந்த பிணம் ...!!! கோபத்தில் பேசத்தொடங்கியது ...... இறக்கபோகிறவர்களே.... வாருங்கள் இறக்கபோவதற்காக....? பிறப்பு இனிமையானது .... இறப்பு கொடுமையானது .... என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் .... பிறப்பு இயற்கை தந்த பரிசு .... இறப்பு இயற்கை தந்த கொடை..... புரிந்து கொண்டவனே ஞானி ....!!! எல்லா உயிரும் ஒருநொடி .... தொடக்கம் எல்லா உயிரின் .... அடக்கமும் ஒரு நொடி தான் ..... அந்த ஒருநிமிடத்தில் தான் .... உலகமே இயங்குகிறது ......!!! ^^^ ஒரு நிமிட உலகம்  ...............வாழ்வியல் கவிதை  ** பிறப்பும் இறப்பும் சமன் ** + கவிப்புயல் இனியவன்

சிந்திக்க ஹைக்கூக்கள்

மூக்கை பொத்துகிறான் மனம் முழுக்க குப்பையுடன் சாக்கடை சிரிக்கிறது ^ ஆன்மீக ஹைக்கூ கவிதை @@@ நச்சுகளை உள் வாங்கி அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம் பசுமை மரங்கள் ^ இயற்கை ஹைக்கூ கவிதை @@@ ஆசீர் வாதம் பெற்றவள் ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள் விதவை பெண் ^ சமூக ஹைக்கூ கவிதை @@@ வானத்து நீரை வடிகட்டி உள்ளே எடுக்கிறது ஓட்டை குடிசை ^ வறுமை ஹைக்கூ கவிதை @@@ சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது ஊழியச்சுரண்டல் ^ பொருளாதார ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

முடிவு சாதனையாக இருக்கும்

காகித கப்பலை பார்த்தபின்... தான் உண்மை கப்பலை... பார்க்கிறோம் -ஆரம்பம்.... சிறிதாகவே இருக்கும் .... முடிவு சாதனையாக ..... இருக்கும் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் 

காட்டு மரமும் வீட்டு மரமும்

காட்டு மரமும் வீட்டு மரமும் ----- வேகமாக வெட்டப்பட்டு .... வருகின்றன காட்டு மரங்கள் ... விறக்குக்காக அல்ல .... கோடரிக்கு பிடிகளாக .... கூடி போராடமுடியாத .... காட்டு மரங்கள் முடிவுக்கு .... வீட்டு மரங்களுடன் .... கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!! காட்டு மரங்கள் கொஞ்சம் .... வீரம் நிறைந்தவை வலிமையானவை  ... அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே .... கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ... வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ... காரணமாக இருக்குமோ ....? வீட்டு மரங்கள் மிகவும் .... மென்மையானவை வீரமும் ... வலிமையையும் குறைந்தவை .... மனிதர்கள் மத்தியில் வளர்வது .... காரணமாக இருக்குமோ ....? காட்டு மரம் வீட்டு மரத்தை .... பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ... பயத்தால் நடுங்கின மௌனமாகின .... நாங்கள் உங்களோடு கலப்பு ... திருமணம் செய்ய விரும்புகிறோம் ... எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!! வீட்டு மரங்கள் கடுமையாக .... எதிர்த்தன உங்களை மணந்தால் ... நாங்களும் இறக்க நேரிடும் ... முடியாது முடியவே முடியாது ..... காட்டு  மரம் கவலை படவில்லை .... மனிதர்கள் மத்தியில் வளரும் ... வ

ஒரு நிமிட உலகம்

கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!! இறப்புக்கு முன்னரே .... மனிதனும் மிருகமும் .... இறந்துவிட்டால் எல்லாமே ... சடலம் தானே .....! எல்லா உயிரினத்தின் வாழ்வும் ... அடுத்த ஒரு நிமிடம் கூட .... உத்தரவாதம் இல்லை ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **கூடு திறந்தால் காடு ** + கவிப்புயல் இனியவன்

அந்தரங்க கட்டிலுக்கு

அந்தரங்க கட்டிலுக்கு அதிகம் ஆசைப்படுபவன் ... ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ... அனுமதி கேட்கிறான் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் 

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் 

என்னவளின் பக்கம்- 18

பள்ளி பருவத்தில் .... கல்வி சுற்றுலா போனோம் ..... மற்றவர்கள் எல்லோரும் .... சுற்றி பார்த்தார்கள் ... நீ என்னை சுற்றி சுற்றி .... வந்தாய் ,,,,,,,!!! எனக்கு சிறிதாய்  காலில் கல் அடிபட்டது .... துடித்துப்போனாய் .... இன்று உன் இதயத்தில் ... காயத்தை தந்துவிட்டேன் .... என்ன பாடுவடுவாய் .... மன்னித்து விடு மன்னவா ....!!! ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 18 கவிப்புயல் இனியவன் 

காதல் ஆடையை எறிந்து விடாதே

உன்னிடம் என்னை .... தந்துவிட்டேன் .... தயவு செய்து என்னை ... தொலைத்துவிடாதே ,,,,!!! உன்னை காதல் ஆடையால் ... அழகுபடுத்தி பார்க்கபோகிறேன் .... காதல் ஆடையை கழற்றி ... எறிந்து விடாதே ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

அழைக்கமாட்டாயா

எத்தனை நாள் ... உன் வீட்டோர வீதியில் ... அலையவைப்பாய் ...? ஒருமுறை உள்ளே வா ... அழைக்கமாட்டாயா ....? உன் இதயக்கதவு.... பூட்டியிருப்பதுபோல் ... படலைக்கதவும் பூட்டி .... வைத்திருக்கிறாயா....? & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

இரக்கமானவர்களுக்கு புரியும்

என் கவிதையை பார்ப்பவர்கள்  .... தங்கள் காதல் கதைபோல் ... உங்கள் காதல் கதையும் .... மனமுருகி ஆறுதல்... சொல்கிறார்கள் .....!!! உண்மை தான் ..... காதல் எல்லோருக்கும் .... ஒரே உணர்வைத்தான் .... ஏற்படுத்தும் -காதலர் ... தம் எண்ணப்படி-காதலை ... காயப்படுத்துகிறார்கள் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

நீ நிச்சயம் அழுவாய்

நீ நிச்சயம் அழுவாய் ... என்னை நினைத்தல்ல .... உன்னை நினைத்து .... இத்தனை நல்லவனை .... இழந்துவிட்டேனே ....? உன் கண்ணீரின் ஒவ்வொரு .... துளிகளும் என் இதயத்தை .... வேலாய் குத்தும் ... அப்போதும் உன்னையே ... காதலிப்பேன் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!

ஒவ்வொரு மனிதனும் .... அதிஷ்டத்தோடு பிறக்கிறான் .... கண்டு கொள்ளும் அறிவை .... ஒருசிலரே பெற்றுள்ளனர் ...!!! உண்மை அதிஷ்டம் .... ஒருவன் தன்னை தானே .... உணர்வதுதான் ..... நிறை குறை இரண்டையும் .... சமமாக தூக்கி பார்க்கும் .... திறன் கொண்டவன் ....!!! அதிஷ்டசாலி ....!!! ^ அர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....!!! கவிப்புயல் இனியவன்

உருக்கமான காதல் கவிதை

நீ எத்தனை நியாயங்கள்.... சொன்னாலும் கேட்டாலும் ... அத்தனைக்கும் விடை தேட ... என்னால் முடியாது ...!!! விடை தேட முற்பட்டால் ... அது காதலுமாகாது....!!! நான் உன் கண்ணாய் இருக்கவே ... ஆசைப்பட்கிறேன் .... நீ கண்ணீராய் இருக்கவே ... ஆசைப்படுகிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 04

இருள்தான் எனக்குப்பிடிக்கும் +++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04 +++ வெளிச்சத்தை கண்டு .... மயங்கி நின்றது வெளி மனசு ....!!! சூரியன் மலரில் விழும் ... அழகோ அழகு .....!!! மதிய சூரிய ஒளி அழகு .... அந்தி வானத்தில் வானவில் ... அழகு இன்னுமொரு அழகு ....!!! இரவு நேர சந்திர ஒளி அழகு.... விட்டு விட்டு மின்னும் விண் அழகு ... இத்தனை அழகும் ஒளியே ... அழகு - மயங்கியது வெளி மனசு ...!!! உள் மனசு உரத்து சொன்னது .... வெளி மனசே நான் சொல்வதை ... சற்று கேள் நான் கூறுவதே ... உண்மை நிச்சய உண்மை ....!!! இருளே அழகு அதற்கு நிகர் ...... உலகில் எதுவுமில்லை .... இருளுக்கு ஏற்றத்தாழ்வு .... தெரியாது - சமத்துவத்தை ... இருளால் தான்சொல்லமுடியும் .... இருளுக்குள் மனிதன் நின்றாலும் .... மரம் நின்றாலும் ஒன்துதான் ....!!! உலகின் எல்லா உயிர் தோற்றமும் .... இருளில்தான் ஆரம்மமாகும் .... இருளில்தான் முடிகிறது .... கருவறையும் இருட்டுதான் .... கல்லறையும் இருட்டுத்தான் .... விதையை சுற்றி இருக்கும் .... ஓடு இருட்டை வழங்குவதால் .. விதை விருட்சமாகிறது ....!!! இருள் இருப்பதாலேயே ...

இனியவன் ஐந்து வரி கவிதைகள்

ஆன்மீக கவிதை  ----- மின் விசிறி சுற்றியது .... தரைநிலம் சுத்தமானது ..... சிலர் வாழ்க்கை இது .... பிறரை சுத்தமாக்கி .... தம்மை குப்பையாக்குவர் ....!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 37

சமூக அவலக்ஹைகூக்கள்

அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் 

அரசியல் ஹைகூக்கள்

தொண்டன் தீக்குளிப்பு தலைவர் சோகத்தில் மூழ்கினார் கட்சி ஒரு வாக்கினால் தோல்வி ^^^ காகித துண்டுக்கு ஆயிரம் பொற்காசுகள் வாக்கு சீட்டு விற்பனை ^^^ பொய்மையே வெல்லும் உண்மை சிறையில் அடைக்கப்படும் அரசியல் ^^^ அரசியல் ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன்

உன்னை மறக்க சொல்லாதே ..

உன்னை ... மறக்க சொல்லாதே ... என்னை... மடியச்சொல்... மடிந்து விடுகிறேன் ....!!! உன் நினைவுகளில் நான் பாம்புவாயில் சிக்கிய தவளை ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

காதல் இருவழிப்பாதை ஒருவழி ... தடைப்பட்டால்....? சிறகு ஒன்றுடைந்த.... பறவை .... நான் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

தவிர்க்கும் நான்

உன் எண்ணங்களை... சுமந்து ... தவிர்க்கும் .... நான் .....!!! வலையில் சிக்கி தவிக்கும் மீன் .....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

நீ இல்லாத ... பொழுதில்  ... நான் ....!!! நீர் இல்லாத இடத்தில் மீன் ....!!! ^^^ ஒரு வார்த்தை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சாய அனுமதிப்பாயா ....?

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ... காதலை மறுத்துவிடாதே...!!! நீ காதலை சொன்னவுடன் ... ஒரே ஒரு முறை உன் .... தோளில்சாய ...... அனுமதிப்பாயா ....? + கவிதையால் காதல் செய்கிறேன் 27 கவிப்புயல் இனியவன்

ஒரே ஆளில் பார்க்கிறேன்

ஒருவரைப்போல் .... ஏழுபேர் இருப்பார்கள் ... சொல்லக்கேள்வி .... நீ மட்டும் ஒவ்வொருநாள் ... ஒவ்வொரு அழகில் வருகிறாய் ... ஏழு அழகிகளை ஒரே ... ஆளில் பார்க்கிறேன் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 26 கவிப்புயல் இனியவன்

கணபடும் பாடு சொல்கிறது .

தலை வாரும்போது .... முடியில் உள்ள சிக்கலை ... கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்.... உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ... என்னை எப்போது மீட்பாய் ...? + கவிதையால் காதல் செய்கிறேன் 24 கவிப்புயல் இனியவன் ----- ஏய் ... கூட்டத்தில் கூட்டமாய் ... செல்கிறாய் எல்லோரையும் ... பார்பபோதுபோல் யாரை .... தேடுகிறாய் .....? தேடுவது வேறு என்னை ... தேடுவது வேறு உன் கண் .... படும் பாடு சொல்கிறது ...!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 25 கவிப்புயல் இனியவன்

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன்  காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே  உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலோடு எழுந்திருங்கள்

காதலை காதலியிடம் ... பெற்று காதலிக்கு ... காதலையே கொடுங்கள் ....!!! காதலுக்கு காதலை .... பரிமாறிய காதல் தோற்றதே இல்லை ....!!! காலை எழுந்தவுடன் .... காதலோடு எழுந்திருங்கள்   ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 03

காதலில் கள்வர் தோன்றலாம்

எனக்கொரு காதலி .... இருக்கிறாள் என்பது .... அழகில்லை .... எனக்காக ஒரு காதலி .... இருக்கிறாள் என்பதே .... அழகு ......!!! கவலை படாமல் இருக்கவே ... காதல் வேண்டும் ..... கவலைபட காதல் வேண்டாம் ....!!! காதலில்  கள்வர் தோன்றலாம் களவுகள் .... தோன்றக்கூடாது ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 02

காதலால் காதலியை காதலி...!!!

இதயத்தில் காதல் .... தோன்றக்கூடாது ... இதயமாக காதல் .... தோன்ற வேண்டும் ....!!! புற அழகில் காதல் .... தோன்றக்கூடாது .... அக அழகில் காதல் .... தோன்ற வேண்டும் ....!!! காதலியை காதலுக்காக காதலிக்காதீர் .... காதலால் காதலியை காதலி ...!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 01

கவிதையால் காதல் செய்கிறேன்

உலகின் ஒவ்வொரு உயிரினதுக்கும்... ஜோடி படைக்கபடுகிறது.... எந்த மூலையில் இருந்தாலும் .... இணைந்தே தீரும் -நீயும் இணையாமலாவிடுவாய்....? சுய புத்தி இருந்து பயனில்லை காதல் புத்தி வரவேண்டும் ... காதல் செய்வதற்கு ....! + கவிதையால் காதல் செய்கிறேன் 22 கவிப்புயல் இனியவன் + பிரபஞ்சமே .... எனக்கு ஒரு சக்தி கொடு .... பார்க்கும் பொருளெல்லாம் .... என்னவளாக தோன்றவை .... கேட்கும் ஓசையெல்லாம் .... என்னவளின் குரலாய் ... இருக்கவேண்டும் .....!!! தூக்கம் தொலையவேண்டும் .... தூக்கத்தில் கனவாய் வரவேண்டும் .... நினைவுகளால் இறக்கவேண்டும் .... நினைவுகளேவாழவைகவேண்டும் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 23 கவிப்புயல் இனியவன்