இடுகைகள்

ஏப்ரல் 18, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நிமிட உலகம்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....? ----- குழந்தை பிறந்தது .... பேர் சூட்டும் விழா .... உறவினர் வந்தனர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! ஆண்டு .... ஒன்று நிறைவு .... பிறந்தநாள் வைபவம் .... கேக் வெட்டினர் .... பாட்டு பாடினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! திருமண அழைப்பு .... உறவுகள் குவிந்தன .... ஆசீர் வாதம் வழங்கினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! மரண அறிவிப்பு .... உறவுகள் கூடினர் .... ஒப்பாரி வைத்தனர் ... ஓலமிட்டனர் .... சோகத்தில் நின்றனர் ....!!! எல்லா நிகழ்விலும் .... சிரித்த மனிதன் ... மரணத்தில் மட்டும் .... அழுவதேன் .....??? அடுத்து தனது மரணம் ... பயத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலமும் ... உதவிய ஓருவன் இறந்துவிட்டானே .... ஏக்கத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலம் அத்துணை .... இன்பத்தை தந்தவன் .... இறந்துவிட்டானே -என்ற ... வருத்தத்தால் அழுகின்றானா ....? மொத்தத்தில் மரணத்தில் அழுகை ... சுயநலத்தின் ஒன்றாய் தான் இருக்கவேண்டும் ...... பிறப்ப

கவிதையாய் வருகிறாய் ...!!!

மோகத்தால் ... வரும் சோகத்தை .... விட்டில் பூச்சியிடம் ... கற்று கொண்டேன்....!!! என் இதயம் ... எப்போதெல்லாம் .... கலங்குகிறதோ.... அப்போதெலாம் .... கவிதையாய் வருகிறாய் ...!!! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் .... காதல் கவிதை ....!!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 999

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....!!!

இன்னும் காதலை -தா என்று கேட்கவில்லை ... வலியை தா இன்னும் ... உன்னை ஆழமாய் ... காதல் செய்ய ...!!! மறந்துபோய் .... நினைத்துவிட்டேன் .... உன்னை மறந்துவிடு ... என்று நீ சொல்லியதையும் ... மறந்து ....!!! உனக்கும் எனக்கும் .... நிறைய ஒற்றுமை .... காதல் தான் நமக்குள் ... வேறுபாடு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 998

உன் வலி இருக்கும் ...!!!

காதல் கண்ணாடியை .... உடைத்துவிட்டாய் ... உடைந்த துண்டுகளில் ... உன் முகம் ....!!! நான் உன்ன ஞாபகம் ... அதுதான் அடிக்கடி ... என்னை மறக்கிறாய் ...!!! தேன் வேண்டுமென்றால் .... தேனியிடம் வலியை.... பெற வேண்டும் ... காதல் வேண்டுமென்றால் ... உன் வலி இருக்கும் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 997

என் நினைவுகள் உனக்கு ....!!!

நம் காதல் அழகு ... நிலா போல் தூரத்தில் .... இருந்து பார்க்கும்போது ....!!! குருவி தன் குஞ்சை .... பொத்தி பொத்தி .... வளர்த்தாலும் -ஒருநாள் .... உன்னைப்போல் விட்டு .... பறக்கத்தான் போகிறது....!!! காதலில் நீ காண்டாவன வெயில் .... இடை இடையே ... சிறு மழை போல் .... என் நினைவுகள் உனக்கு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 996