இடுகைகள்

ஜூலை 31, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன் 

கனவில் வர நான் தயார்

இந்த சுகம் போதும் அன்பே ------------- அதிகாலை வேளை.... அகிலமே அமைதியாய் ... இரு விழியை அகன்றேன் ... வான் குருவிகள் வானிசை .. சில்லென்ற காற்று உடல் பட ... எனைமறந்து உன்னை ..... நினைத்தேன் ... (இந்த சுகம் போதும் அன்பே ...) தண்ணிரை மோர்ந்தேன் .... பன்னீரை போல் உன் மென்மை.. ஒருதுளி உடலில் பட ... இணைந்துவிட்டேன் உன் ... நினைவில் ...... (இந்த சுகம் போதும் அன்பே ...) ஒற்றையடி பாதையிலே ஓற்றைசடை முடி தேடி ... பற்றைக்குள் பதுங்கி இருக்க ... பற்றை செடிகள் ஆடியது ... காற்று அசைக்க வில்லை .. என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!! (இந்த சுகம் போதும் அன்பே ...) கண் மூடினால் கனவாய் .. கண் திறந்தால் நினையாய் ... கனவில் வந்து நினைவை இழப்பதா ...? நினைவில் வந்து கனவை இழப்பதா ...? வந்தது உன் குறுஞ்செய்தி ... நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..? கனவில் வர நான் தயார் என்று ...!!! (இந்த சுகம் போதும் அன்பே ...) & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை