இடுகைகள்

ஜனவரி 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை - உறக்கம்

அதிசயக்குழந்தை - உறக்கம் -------- ஏய் குழந்தாய் நேரமாகி விட்டது உறங்கவில்லையா ....? உறக்கம் என்றால் என்ன ....? நானே சொல்கிறேன் ஆசானே ....!!! மூளை ஓய்வெடுப்பது உறக்கம் .... மூளை செயல் இழப்பது மரணம் .... கண்ணை மூடுவது உறக்கமில்லை.... கண் மூடுவது என்பது சாதாரண ... விடயமும் இல்லை மிக கடின வேலை....!!! அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...? வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ... கடினமில்லை .இரண்டு இமையும் இணைத்தால் போது அது கண் மூடல் ... என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் .... தவறு கண்மூடினால் ஒன்றுமே .... தெரியாமல் இருப்பது மட்டுமல்ல .... ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே .... உண்மை கண் மூடல் .....!!! புருவத்தின் மத்தியில் நினைவை கொண்டுவந்து கண்மூடி உள்ளே ... பாருங்கள் உங்களை நீங்கள் .... அறிவீர்கள் உங்களின் அத்துணை ... குணமும் படமாய் ஓடும் ..... என்று அந்த படமெல்லாம் ஓடி ... கலைத்து வெறும் திரை கண் முன் ... வருகிறதோ அன்றே நீங்கள் .... உண்மையான கண் மூடல் அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் .... வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ... இப்படி கண்மூடிபாருங்கள் .... சொர்க்கம் தெரியும் என

காயங்கள் மட்டுமே மாறுகிறது

மஞ்சள் நிறத்தில் ... காதல் செய்தேன் ... குங்குமம் என்னை ... பிரித்து விட்டது ...!!! வற்றி போகும் நதியில் ... முத்து குளிக்க சொல்கிறாய் .... செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!! எல்லோர் காதல் வலியும்.... ஒன்றுதான் -காயங்கள்... மட்டுமே மாறுகிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 945

என்னையே நினைப்பதில்லை....!!!

என் மூளையை ... பரிசோதிக்க வேண்டும் ... என்னையே நினைப்பதில்லை....!!! என் கண்ணீர்த்துளிகள் .... உனக்கு முத்துகள் ... மாலையாய் கோர்கிறாய் ...!!! சின்ன துவாரத்தை ... அடைக்காமல் விட்டேன் ... இதயத்தை விட்டு ... வெளியேறிவிட்டாய் ....!!!   ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 944

உனக்கும் எனக்கும் இடைவெளி

உன்னை காதலிக்கவேண்டும் என்பதற்காகவே காணாமல் போனவன் ...!!! காதலித்தபோதுதான்.... உன் சுயரூபம் கண்டேன் ... தவிக்க விடவே காதல் .... செய்திருகிறாய்....!!! உனக்கும் எனக்கும் இடைவெளி ... ஒன்றால் மட்டுமே .... இணையும் -காதல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 943

நீ தண்ணீராய்

நீ தண்ணீராய் .... இருந்தால் போதாது ... தாகத்தையும்..... தீர்க்க வேண்டும் ...!!! பிறர் துன்பத்தில் கண் கலங்கும் நீ என் துன்பத்தில் பங்குகொள் ......!!! நீ காதல் மலராகவும் ... துரத்தி குத்தும் .... தேனி வண்டாகவும் ... இருகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 942

கண்ணீரால் பேசுகிறாய்

உன் உணர்வுகளையும் என் உணர்வுகளையும் தொலைத்து பெற்றதே காதல் ....!!! நீ கண்ணீரால் பேசுகிறாய் நான் கவிதையாய் எழுதுகிறேன் ....!!! ஒருதலை காதல் வலி இருதலை காதல் வலி இக்கரைக்கு அக்கறை பச்சை .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 941