இடுகைகள்

ஆகஸ்ட் 15, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் .... நீ என் நினைவுகளை மறந்து .... நான் உன் நினைவுகளை மறந்து ..... வாழவே முடியாது - காதல் பிரிவை...  ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 02

ஐந்து வரி கவிதைகள் ......!!!

மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... உன் இதயம் வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 01

ஓவியம் போல் மனதை அழகாக்கு....

ஓ கோ என்று வாழ ஆசைப்படாதே ..... ஓ ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே .... ஓ டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே ..... ஓ டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!! ஓ ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் ..... ஓ ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் .... ஓ ரம்போய் மக்களை விற்காதீர் ..... ஓ லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!! ஓ வியம் போல் மனதை அழகாக்கு.... ஓ சையின் சொற்களை இனிமையாக்கு .... ஓ லை போல் விழுந்தாலும் பயன் கொடு ..... ஓ ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!! ஓ ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் .... ஓ ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே.... ஓ தல் மூலம் உலகை விழிப்படைய செய் ... ஓ ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

வறண்ட நதியில் ...

காதலில் நான் சூரிய உதயம் -நீ அந்திவானம் ....!!! வறண்ட நதியில் ... கப்பல் ஓட அலைகிறாய் ... நான் எப்போது காதல் ... மழை பொழியும் ....? காத்திருக்கிறேன் ....!!! உண்மை காதல் என்ற ஒன்று இருக்கவே ... கூடாது என்று நினைத்து ... விட்டாயோ ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;839

என் இதய நரம்பு ....

என் இதய நரம்பு .... முற்களாய் மாறுகிறது .... நீ பூக்களின் மீது .... தூங்குகிறாய் ....!!! என் கண்ணில் நெய் .... இருப்பதாய் நினைகிறாய் .... இப்படி உருக்குகிறாய் ....!!! காதலின் தோல்விக்கு ... தண்டனை -உன்னை தலைகுனிந்து வாழ ... வைப்பதே .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;838   

காயமடைந்து விட்டேன் ....!!!

பூவுக்குள் இருக்கும்... தேன் போல் நீ .... மறைந்திருகிறாய் .... நான் அலைகிறேன் ....!!! கண்ணாம் பூச்சி ... விளையாட்டை .... காதலிலும்..... விளையாடுகிறாய் ....!!! உன் கண்ணோடு.... என் கண் மோதுபட்டு .... காயமடைந்து விட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;837

காதலும் விழுந்தது ....!!!

வெண் முகிலின் நிலாவே .... உன்னை அண்ணாந்து .... பார்ப்பதுபோல் தான் ... என் காதலும் .....!!! காற்றில்லா பட்டம் .... தள்ளாடி தள்ளாடி ... விழுவதுபோல் என் ... காதலும் விழுந்தது ....!!! உனக்கு என்னில் .... அக்கறையில்லை ... அதுதான் நீ காதலில் ... அக்கரையில் நிற்கிறாய் ....!!!   + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;836