இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் விழுந்து விட்டேன் ....!!!

காதலின் அழகு ... காதலர் பார்வையில் தெரியும் .... காதல் வெறும் பார்வையில்லை .... ஆயுள் பார்வை ....!!! புவியீர்ப்பால் பொருட்கள் ... கீழே விழும் ... உன் விழி ஈர்ப்பால் .... காதலில் விழுந்து விட்டேன் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 05

கண்ணில் இருந்து மின் சக்தி ....

ஆயிரம் ... கண்ணுடையாள் ... மாரியாத்தா என்பார்களே ....!!! உன் இருகண்ணின் .... மகிமை தெரியாதவர்கள் .... கண்ணில் இருந்து மின் சக்தி .... நிச்சயம் கண்டுபிடிக்கும் ... விஞ்ஞானம் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 04

எனக்கு உயிர் கொல்லி ...

இதயத்தில்.... மறைந்திருக்கும் காதலை .... விழிக்க வைத்தது உன் ... பார்வை .....!!! என்னவளே .... உன் பார்வைதான் ... எனக்கு உயிர் கொல்லி ... புரியவில்லை அன்று ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 03

நொடிப்பொழுதெல்லாம்...

நீ பார்த்துகொண்டிருக்கும் ... நொடிப்பொழுதெல்லாம்... இறந்து கொண்டிருக்கிறேன் ....!!! நீ தூங்கிகொண்டிருக்கும் ... நொடிப்பொழுதெல்லாம்... கல்லறைக்குள் இருக்கின்றேன் ....!!! + கண் ஈர்ப்பே - காதல் - 02

கண் ஈர்ப்பே - காதல்

என்னில் உன் விழியும் ... உன்னில் என் விழியும் .... இடம் மாறியதே -காதல் ...!!! நீ என்னை பார்க்கும் ... போதெல்லாம் என் ... கண் வலிக்கிறது ... என் விழி .... உன் விழியில் ...!!!

நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

பொய் சொல்லவத்தில்லை.... ஆனால் நடந்த தெரிந்த புரிந்த .... உண்மையை மறைத்திருகிறோம்.... இதை விட கொடுமை பாதி உண்மை.... பேசியிருக்கிறோம் - கொடுமையில்.... கொடுமை பாதி உண்மைபேசுவது... இதை எல்லாம்செய்து விட்டு நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் .....!!! தப்பு என்று தெரிந்து கொண்டு... தப்பு செய்திருக்கிறோம் .... மற்றவர்கள் செய்யாத தப்பையா....? நான் செய்கிறேன் -சமுதாயத்தை அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் .... நன்றாக நடிக்கிறோம் .... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! ஊன் உண்ணாதே களவெடுக்காதே... சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்.... பாடம் -  மாமிசம் உண்போம்.... பசு கன்றின் பாலை களவெடுத்து.... குடிப்போம் - கேட்டால் சொல்வோம்.... அவையெல்லாம் எமக்காக படைக்கபட்டவ

என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!

கவிதையை ரசிக்கிறாய்  கண்ணீர் விடுகிறாய்  காதலை வெறுக்கிறாய்  உயிரே ...!!! என் காதல் வரிகள்  எழுத்துக்கள் அல்ல -உன்னை  நினைத்து எழுதும் ஆத்மாவின்  உயிர் வரிகள் ....!!! ########## அவளுக்கு எப்படி இரக்கம் இருக்கும் ..? அவள் இதயம் என்னிடமல்லவா இருக்கிறது .. தயவு செய்து அவளை திட்டாதீர் எல்லா நினைவுகளையும் என்னிடம் தந்து விட்டு ஒரு பிணமாக இருக்கும் அவளுக்கு எப்படி வலிக்கும் ..? அவளின் வலியையும் சேர்த்து நானே சுமக்கிறேன் ...!!! ###########   உன் நினைவுகளால் .... இந்த நொடிவரை இதயம் ... துடிக்கிறது ......!!! உன் நினைவுகள் தான் ..... இந்த நிமிடம்வரை ... கவிதை எழுத வைக்கிறது .... என் கவிதையும் நீ காதலும் நீ ....!!! ###########

நடுவரின் தீர்ப்பே இறுதி

நன்கு விபரம் தெரிந்த வயது ..... விடிந்தால் மாவட்ட விளையாட்டு ... பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ... பலருடன் போட்டிபோடும் .... மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!! நாள் முழுவதும் கற்பனையில் .... முதலிடத்தை பிடித்ததாய் .... கனவும் வேறு வந்துதுலைத்தது..... திடீரென திடுக்கிட்டு எழுந்து ..... மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!! ஆரம்பமானது ஓட்டப்போட்டி ..... மைதானம் வானை தொடும் வரை ... கரகோஷம் நான் வெற்றிபெற ... முகம்தெரியாதவர்கூட கத்தும் .... என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!! எல்லை கோட்டை நெருங்கும் .... ஒருசில நொடியில் யார் முதலிடம் .... யார்...? இரண்டாம் இடம் ...? முடிவை தெரிவிக்க தடுமாறும் .... நடுவரின் பரிதாப நிலை .....!!! நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...? நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ... கண் பார்வையும் மனசாட்சியும் .... தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ... நான் இரண்டாம் இடமாம் .....!!! நானும் பொறுப்பாசிரியரும்.... இயன்றவரை போராடினோம் ..... முதலவாது வந்தமாணவன்..... முதன்மையானவரின் மகனாம் .... தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!! நடுவரின்

தப்புதான் உயிரே ....!!!

என்னை தயவு செய்து ..... மரணமாக்கி விட்டு .... நீ மௌனமாக இரு ...!!! காதலையும் ..... காதலியையும் ...... மலரோடு ஒப்பிட்டது ... தப்புதான் உயிரே ....!!! உன் நினைவுகளால் ... துருப்பிடித்து விட்டது ... என் இதயம் - திருத்துவதும் துரத்துவதும் உன் கையில் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;795

எங்கிருந்தாலும் வாழ்க .

உன் சிரிப்பால் மலர்ந்த ... காதல் - ஊர் சிரிக்கும்படி ஆகிவிட்டது ....!!! ஓட்டபந்தயத்தில் ... இறுதிநேரத்தில் இரண்டாம் ... இடத்தை அடைந்ததுபோல் ... என் காதல் ....!!! என்னோடு வாழ்வாய் ... என்றிருந்தேன் ... எங்கிருந்தாலும் வாழ்க .. என்று வாழ்க என வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;794

ஏன் வாடி விழுந்தாய் ...?

உலகமே காதலால் ... இயங்குகிறது .... அப்படிஎன்றால் நம் காதல் தோற்றதேன் ...? பூவை தந்து காதல் செய்த நீ - ஏன் வாடி விழுந்தாய் ...? அழவும் ஆசையாய் இருக்கிறது - நீ சுட்டுவிரலால் கண்ணீரை துடைத்து விடுவதுபோல் .. உன் நினைவால் ...!!!  + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;793

கண்ணீரால் அணைக்கிறேன் ....!!!

காதல் தோற்றத்துக்கு  குற்றம் சொல்லேன் ... உன்னை படைத்த ... இறைவனை நிந்திக்கிறேன் ...!!! என் கவிதைகள்  உன்னை பற்றிய தீ  பந்தங்கள் - கண்ணீரால்  அணைக்கிறேன் ....!!! நீ அழகு ... உன் காதல் ..... அழகாகவில்லை... காத்திருப்பேன் -உன்  அழகு மறைந்தாலும்  காதலுக்காய் ....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;792

காதலே விழுந்துவிட்டதே ...

என் கவிதையின் விசிறி எழுத்து - நீ விசிறி விட்டு போய் ... விட்டாய் .....!!! விட்டு கொடுப்பது நல்லது ... என்னை விட்டு கொடுத்தது ... தப்பாய் போயிற்றே ...!!! காதலில் விழலாம் ... காதலே விழுந்துவிட்டதே ... நமக்கு ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;791

நாக தோஷம்

படம்
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும் வந்துசெல்வர் ...!!! திருமணமாக விட்டால் நாகதோஷம் .... குழந்தைகள் படிக்காவிட்டால் நாகதோஷம் .... குடும்ப சண்டைக்கு நாகதோஷம் .... ஊரில் மழைபெய்யாவிட்டால் நாகதோஷம் .... நித்திய பூசைகள் ,அபிஷேகம் பல செய்தும் ... ஊரின் நாக தோஷம் தீரவில்லை .... ஊராரின் தோஷங்களும்

கடவுளும் கவிதையும் ....!!!

கடவுளும் கவிதையும் ....!!! உணர்வதே கடவுள் என்கிறார்கள் .... உருவமே கடவுள் என்கிறார்கள் .... உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ... உருவமாக பார்த்தால் உணர்வில்லை .... கவிதையும் இப்படிதான் .... யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...  கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ...... கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!! கடவுள் என்றால் என்ன ....? உணர்ந்த ஞானிகள் மத்தியில் ... ஏராளமான பல்வேறு விளக்கம் ... உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!! கவிதை என்றால் என்ன ....? விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை .... உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் .... விளங்கபடுத்த முடியும் ....? ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் ..... ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை .... கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ... கல்லாதவனும் கவிதை எழுதுவான் .... உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ... சிந்தனையாளனுக்கு கவிதை பொது ... கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை ..... கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை .... இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....  இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் .... இருவருமே விரும்புவது கவிதை ... எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ... செயலின்

காதல் எனக்கு பிடிக்காது ...

காதல் எனக்கு பிடிக்காது ... என்றாய் சந்தோசப்படுகிறேன் ... என்னை பிடிக்கவில்லை என்று ... சொல்லாமல் காதல் பிடிக்கவில்லை ... என்றுதானே சொன்னாய் ...!!! + கே இனியவன் அணுக்கவிதை

கே இனியவன் அணுக்கவிதை

என்னை பிடிக்கவில்லை ... என்று சொல் நான் ஏற்கிறேன் ... காதலே பிடிக்கவில்லை ... என்கிறாயே - காதல் உனக்கு என்ன செய்தது ...? + கே இனியவன் அணுக்கவிதை %%%%%% காலமெல்லாம்  காத்திருப்பேன் -உன் .. கரம் பிடிக்கவல்ல ... உன் காதலுக்காக ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை

காதலித்து கொண்டிருப்பதழகு ...!!!

காதலி அழகு ....!!! அதைவிட அழகு காதல் .... அதையும் விட அழகு ... காதல் காணாமல் போகாதிருக்க ... காதலித்து கொண்டிருப்பதழகு ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை

பிரிவும் காதல் தான் ...!!!

எண்ணங்களும் வர்ணங்களும் ஒன்றுதான் ... நிலைத்து நிற்காது ...!!! உனக்கும் எனக்கும் உள்ள உறவும் காதல் பிரிவும் காதல் தான் ...!!! என் இதயத்தை பலூனாக நினைத்து... ஊதி விளையாடுகிறாய் ... கவனம் உள்ளே இருப்பது ... நீ ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;790

தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!

நான் வீதி நீ வீதி விளக்கு செயல்படுவோம் காதல் விபத்தை தவிர்ப்போம் ......!!! காதலில் இறுதி கட்டம் ... மாலையா ....? மரணமா .......? உன் கையில் ....!!! உன்னை காதல் தீபமாக நினைத்தேன் தீப்பந்தமாக எரிகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;789

நம் காதலுக்கும் உண்டு ....!!!

இறைவா என்னை மன்னித்துவிடும் இவளை தெரியாமல் ... காதலித்து விட்டேன் ....!!! சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை இருப்பதுபோல் -நம் காதலுக்கும் உண்டு ....!!! கண்ணே என்று உன்னை ... வர்ணித்த என்னை ... கண்ணீரில் நீந்த வைத்து ... அழகு பார்க்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;788

அணுக்கவிதை

காதலித்து பார் ஆரம்பத்தில்  இதயத்தில் பன்னீரும்  இறுதியில் கண்ணீரும் வரும் ...!!! கே இனியவன்  அணுக்கவிதை %%%%%%% சொர்க்கமும் நரகமும்  தீர்மானிக்கும் காரணி  காதல் ...!!! + கே இனியவன்  அணுக்கவிதை

புதுக்கவிதை

அகோர மழை ----------------------- சாதாரண  துளியுடன் ஆரம்பித்தது ... கொட்டி தீர்த்த  அகோர மழை ....!!! வீதியோரகடையொன்றில் கூரையில் ... கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை.... பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!! வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ... எவையும் தெரியாமல் நிரம்பிவழிய ..... சிற்றாறொன்று  சிறுவீதியால் திசை ... திரும்பி வந்ததோ என வாயை ..... பிளக்கும் பெருவெள்ளம் .....!!! தள்ளுவண்டியில் காய்கறிகாரன் ..... தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ... காய்கறிகளைகாணோம்...... பள்ளத்திலா குழிக்குள்ளா....? தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!! நடைபாதையருகில் பெட்டிக்கடை ... பழவியாபாரி தான் நனைந்தபடி .... பழங்களுக்கு போர்வை போத்து ... இழந்த வருமானத்தை வரண்ட ... மனத்துடன்  காத்திருக்கும் நிலை ...!!! சிரித்தபடி வந்த  காதல் ஜோடியின் ... மோட்டர்சைக்கிள் செயலிழக்க ... உயிரை கொடுத்து உதைக்க .... இயங்கமறுக்கும் சைக்கிளை .... கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!! என்னருகில் நின்ற சிறுபையன் ... மழையில் நனைய ஆசைப்பட்டு .... தாயின் கையை உதறியபடி கூரை ... தண்ணீரை ஏந்த - அதைமறுத்தார்

என்னை முறைப்பாயா ...?

யாரையும்  எதையும் கேட்காமல் .... செய்வது மகா குற்றம் .... கேட்டால் தரமாட்டாய்.... விடவும் மாட்டாய் ....!! நான்  உன்னைமீறி தந்தால்... என்னை முறைப்பாயா ...? வெறுப்பாயா - ஆனால் .. என் மனசு குற்றமற்றது ... காதலை தவிர வேறொன்றுமில்லை

அதையும் திருடி விட்டாய் ...

களவு  என்பது கையால் தானே .... திருடுவார்கள் - நீ எப்படி ..? இதயத்தை கண்ணால் ... திருடினாய் ....? என்னிடம் இருந்த ஒரே ... சொத்து இதுவரை யாரையும் ... நினைக்காத மாசில்லா மனசு ... அதையும் திருடி விட்டாய் ... இப்போ என்னிடம் ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

அணு அணுவாய் காதல் கவிதை - 02

காதலோடு பயணம் செய்து .... பாருங்கள் ... சாதாரண வண்டி கூட ... புஷ்பக விமானம் ஆகிவிடும் ....!!! @@@ காதலுக்காக அலையக்கூடாது ... காதலால் அலைந்துபார் ... வாழ்க்கை ஆனந்தம் தான் ...!!! @@@ காதல் என்று உன்னிடம் ... மலர்கிறதோ ... அன்றுதான் பூரண மனிதன் ... ஆகிவிடுகிறாய் ....!!! @@@ ரகசியத்தில் பிறந்து ... பரகசியமாகும் ... காதல் ....!!! @@@ இன்பமான திருமண வாழ்கை இன்பமான காதலில் இருக்கிறது ... இன்பமான குடும்பமும் இதுதான் ...!!!

அணு அணுவாய் காதல் கவிதை

அணு அணுவாய் காதல் கவிதை  காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின்  உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து  விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து  விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு  காதலே பிடிக்காது  என்பவர்கள் ... காதலை பயத்தோடு  பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய்  ஆசைப்பட்டால்  எந்த நேரமும் காதல் செய் ...!!!

சித்திரை ஆண்டு வாழ்த்துக்கள்

படம்

உன் நினைவுகளே என் கீதம் ...!!!

நான் இருப்பதற்கு உன் ... இதய அறையில் இடம் ... தரவேண்டும் .... தூங்குவதற்கு  நினைவுகள் .. கீதமாக படவேண்டும் .... தூங்காமல் இருக்க உன் ... கனவுகள் வரவேண்டும் ....!!! நான் உண்ணும் உணவின் .... ஆறு சுவையும் -நீ என் மூச்சு இதுவரை துடிக்க ... காரணமும் நீ .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 07

எப்போ ..? முள்ளானாய் ....?

காதல் பூவானால்.... காயத்தை குணமாக்கும் ... பூவாக இருந்த நீ -எப்போ ..? முள்ளானாய் ....? எப்போது நீ காதலித்தாய் ...? மறந்தே விட்டேன் ... நீ தந்த காதல் வலியால்....!!! என் காதல் செடியின் வேர்கள் கருகிகொண்டு வருகின்றன ... கண்ணீரால் எப்படி ...? வளரமுடியும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;787

கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

நம் காதல் ... பன்னீராக இருக்கும் ... கனவாக போனது ... உன் கண்ணீரால் ....!!! தனிமையில் இருந்து ... தவறி விழுந்தேன்  காதலில் - இப்போ ... தனியே தத்தளிக்கிறேன்... காதலால் ....!!! இதயத்துக்குள் என்னை ... காதலாய் வைத்திரு ... கைதியாய் துன்புறுத்தாதே ....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;786

எதை பார்த்தாலும் ...

பிறவி  பயன் இறைநிலை .... அடைவதே - ஞானிகள் கூற்று ...!!! இறைநிலை கூட காதலே ....!!! இறைவா ... உன்னை உணராமல் -நான்  இறப்பதில்லை ... உன்னை உணர்வதே  முத்திநிலை .....!!! கூட்டி கழித்து பெருக்கி ... வகுத்து எதை பார்த்தாலும் ... காதலை தவிர வேறொன்றுமில்லை...!!!

என்னிடம் குவிந்திருக்கும்

என்னிடம் குவிந்திருக்கும் .... நினைவுகளையும் .... கனவுகளையும் உன்னால் ... மட்டுமே உணர முடியும் .... அத்தனையும் நீ தந்தவை ... உயிரே ....!!! நீ  எதை கேட்கிறாயோ ... அத்தனையும் நான் தருவேன் ... எனக்கு காதலை தந்த நீ ... எதை கேட்டாலும் தருவேன் ... ஒருவனின் பிறப்பின் உன்னதம் ... அன்பான காதல் கிடைப்பது ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

காதலை தவிர வேறொன்றுமில்லை

உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!

அம்மா கடுகு கவிதை

இந்த உலகு புவி சுற்றால்... இயங்க வில்லை -தாயின்  .. தூய அன்பால் சுற்றுகிறது ... தாயின் தூய அன்பில்லை.... என்றால் இந்த புவியிருந்து ... என்னபயன் ....? புவி இருக்கத்தான் முடியுமா ...? + + அம்மா கடுகு கவிதை

நீ தான் கடவுள் ....!!!

நான் இப்போ எல்லாவற்ரையும்.. வெறுக்கிறேன் ... எல்லோரையும் வருகிறேன் ... நீ - எனக்கு காதலாக ... கிடைத்ததால் ....!!! உளப்பயிற்சி தியாணமாம் ... அதைதான் செய்கிறேன் தினமும் உன்னை நினைத்து ... கடவுள் வருவரோ ..? எதையும் தருவாரோ ...? தெரியாது -நீ காதல் தந்தாய் .. நீ தான் கடவுள் ....!!!   + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 06

உன் ஒரு சிரிப்பில் ..

ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு அழகு இருக்கிறது உயிரே - உன் ஒரு சிரிப்பில் .. எல்லா அழகும் குவிந்து ... இருக்கிறது ....!!! காதலின் அத்திவாரமே ... சிரிப்பு என்னும் பூதான் ... நீ சிரித்தாய் - நான் பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 06