இடுகைகள்

டிசம்பர் 9, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளே என் கவிதை 15

உனக்கு எழுதிய கவிதையை .... பார்த்துவிட்டு - தங்களுக்கும் ... கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ... என்கிறார்கள் ....!!! கவிதை  எழுத பழகதேவையில்லை  காதலித்தால் போதும் கவிதை ... அருவியாய் கொட்டும் என்றேன்... நான் என்ன கவிஞனா ....? இல்லையே - காதலித்தேன் .... எழுதுகிறேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 15

என்னவளே என் கவிதை 14

ஏய் என் கவிதைகளை .... காகிதக்கப்பல் செய்து .... விட்டிருக்கிறாய் போலும் .... இரண்டு கப்பல்களும் ... ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!! தயவு செய்து அவற்றை ... பிரிக்காதே - நானும் நீயும்  அல்லவோ அவை ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 14

என்னவளே என் கவிதை 13

பாம்பின் வாயில் அகப்பட்ட .... தவளைபோல் வாழ்கிறேன் ... உன்னை பார்க்காமலும் ... பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!! நிச்சயம் சொல்வேன் .... நான் போதைபழகத்துக்கு .... ஆளாகமாட்டேன் .... போதையாக நீ இருப்பதால் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 13

என்னவளே என் கவிதை 12

எனக்கு காதல் பிடிக்காது .... காதல் என்றாலே கசப்பு .... வேலையில்லாதவன் .... செய்யும் வேலையே காதல் ....!!! இப்படி சொல்பவரெல்லாம் .... உன்னை பார்க்காதவர்கள் .....!!! உன்னை பார்த்தபின் காதல் .... வரவில்லையென்றால் ... பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 12

என்னவளே என் கவிதை 11

நீயும் நானும் .... காதல் பாதயாத்திரை .... செல்வோம் வாராயா ....? உன் பெயரை நானும் .... என் பெயரை நீ .... உச்சரிப்பதே நம் ... காதல் பஜனை கீதம் ...!!! என்னை நீ பார்ப்பதும் ... உன்னை நான் பார்ப்பதும் .... காதல் ஆராதனை ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 11

ஒரு சொல் கவிதை -குடும்பம்

ஒரு சொல் கவிதை -குடும்பம் மூலக்கடவுள்  மூலமந்திரம்  தந்தை  @ நேரில் கடவுள்  அருள்தரும் கடவுள்  தாய்  @ சுருங்கிய தோல்  அனுபவமுதிர்ச்சி  தாத்தா  @ வாழ்கை பொக்கிஷம்  பொக்க வாய்  பாட்டி  @ குடும்ப சுமை  தலைமைத்துவம்  அண்ணன்  @ குறும்புத்தனம்  கூறிய அறிவு  தம்பி  @ என் கட்சி  என் பக்கம்  தங்கை

எல்லாமே எனக்கு காதல்

எல்லாமே எனக்கு காதல்  ------- எண்ணம் - காதல் & எழுத்து -காதல் & பார்ப்பது -காதல் & கேட்பது -காதல் & தூக்கத்தில் -காதல் & துக்கத்தில் - காதல் & இன்பத்தில் -காதல் & துன்பத்தில் -காதல் & அருகில் - காதல் & தொலைவில் -காதல் & நினைவில் - காதல் & கனவில் -காதல் & உண்ணும்போதும் -காதல் & உடுக்கும்போதும் -காதல் & ஊர்வனவில்  - காதல் & பறப்பனவில்  -காதல் & மிருகங்களில் -காதல் & மரங்களில் -காதல் & பெற்றோரில் -காதல் & உடன் பிறப்புகளில் -காதல் & நட்பில் -காதல் & உறவுகளில் -காதல் & குழந்தையில் -காதல் & முதியோரில் -காதல் & உழைப்பில் -காதல் & இதில் சொல்லாதவற்றிலும் -காதல் & எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல் & காதலே - இறைவன் காதலே - வாழ்கை காதலே -மூச்சு காதலே -முடிவு .....!!! & காதலித்துப்பார் -மனிதனாவாய் காதலோடு வாழ் -ஞானியாவாய் காதலே இறைவன் காதலே உலகம் எல்லாவற்றையும் காதல் செய் ....!!!

என்னவளே என் கவிதை 10

எத்தனை நாள் .... இடியுடன் கூடிய மழை .... பொழிந்தாலும் ..... என்னவள் கண்சிமிட்டும் ... நொடியில் என் இதயம் .... காணும் இடியின் ஓசையை .... என்னவள் என்ன பார்க்கும் ... கணப்பொழுதில் ... என்னில் தோன்றும் மின்சாரம் .... எதுவுமே நிகரில்லை ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 10

என்னவளே என் கவிதை 09

ஆயிரம் கவிதைகள் .... ஆயிரம் பின்னூடல்கள் .... ஆயிரம் கவிரசிகர்கள்..... பலநூறு சிறப்புகவிதை ....!!! அத்தனையையும் .... தாண்டிய சிறப்புகவிதை ..... என்னவள் கவிதையை ... ரசித்து என் கையில் .... முத்தமிட்ட ஆசை என்று .... சொன்ன அந்த ஒரேகவிதை ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 09

என்னவளே என் கவிதை 08

சூரியன் திரும்பும் .... திசையில் சூரியகாந்தி பூ .... திரும்புமாம் .....!!! நீ  சற்றே திரும்பிப்பார் .... எத்தளை சூரியர்கள் .... திரும்புவார்கள் .....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 08

என்னவளே என் கவிதை 07

எல்லோர்  தலையை சுற்றியும் .... இரவில் நுளம்புதானே ..... வட்டமிடும் ...... உன் தலையை சுற்றி .... பட்டாம் பூச்சிகள் .... பறக்கின்றனவே ....? இரவு பூந்தோட்டம் நீயோ ...? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 07

என்னவளே என் கவிதை 06

நீ  வீதிவழியே வருகிறாய் .... கற்களும் முற்களும் .... தானாகவே விலகுகின்றன .... உன்னை குத்தி ஜென்மபலியை.... ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!! மலர்ந்த பூக்கள் கூட முகம் .... சுழிக்கின்றன உன் அழகை ... பொறுக்கமுடியாமல் கோபம் .... கொண்டுவிட்டனபோலும் ....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 06