இடுகைகள்

ஜனவரி 30, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு சமூக கண்ணோட்டத்துடன் பார் சமூக பொறுப்பு நம்முடையது சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில் சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!! இரங்கி கேட்பவர்களுக்கு -நீ இரக்கத்துடன் பிச்சை போடாதே யாருக்கு யார் பிச்சை போடுவது ..? எல்லோரும் ஒருவகையில் பிச்சை காரரே ....!!! அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே முதியோர் இல்லத்தில் வாழும் பெற்றோருக்கு பிள்ளை அன்பும் பிச்சையே உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும் ஒருவகையில் பிச்சையே ...!!! கண் இழந்தோர் .கால் இழந்தோர் பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும் இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும் திடகார்த்தமான வலுவும் உள்ள நீ பிச்சை எடுக்கிறாய் .....!!! நீ பிச்சை எடுக்க தகுதியானவன் பொருளாதார பிச்சை -அல்ல தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து நில் துணிந்து செல் - உடம்பை வருத்து நீயும் ஒரு சாதனையாளனே இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர் ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

பெற்றோரே ஒருமுறை வாரீர்

வெளி நாட்டு மணமகன் வெளிநாட்டில் தான் திருமணம் சுற்றத்தார் மத்தியில் புகழாரம் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!! சுற்றத்தாரின் பேச்சில்லை உற்ற நண்பியின் ஆதரவுமில்லை ஆறுதல் வார்த்தை சொல்ல ஆனந்தமாய் வார்த்தை சொல்ல அருகில் யாரும் இல்லை .....!!! நான்கு சுவருக்குள் இன்பம் அதே சுவருக்குள் துன்பம் மாறி மாறி வாழும் சுவர் வாழ்க்கை தான் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!! உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை சித்திமகளின் காதுக்குத்து இல்லை மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!! ஊரில் நல்ல வரன் வந்தும் என் பிள்ளையை வெளிநாட்டில் தான் வாழவைப்பேன் என்று பெருமை போடும் பெற்றோரே ஒருமுறை வாரீர் மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!! என்று தணியும் இந்த வெளிநாட்டு மோகம் எப்போது நம்புவர் -இவர்கள் உள்ளூர் உற்பத்தி நன்று என்று கூடி வாழ்ந்த சமூகம் இப்போ சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்

எனக்கு உயிர் நண்பன் இல்லை உயிராய் இருந்தவனும் முதுகில் குற்றி விட்டான் - பதிலாக இதயத்தில் குற்றியிருக்கலாம் என்னை கொண்றிருக்காலாம்...!!! வந்தாய் நீ தந்தாய் அன்பை உன் அன்பை என்றாலும் சற்று சந்தேகம் -நீ நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..? சற்று தடுமாறியது மனம் ....!!! உணர்ந்தேன் உன் அன்பை என்னை விட என் குணங்களை நன்றாக புரிந்து கொண்டாய் எனக்கே இருந்த குணத்தை எனக்கே தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!! உள்ளத்தால் உண்மை சொன்னாய் உள்ளத்தால் அன்பு தந்தாய் உள்ளத்தால் கண்ணீர் விட்டாய் உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய் உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!! உன்னுடைய  அன்பால் உயிர் பெற்றேன் உயிரே போகும் வரை உன்னுடம் உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன் உயிர் போனால் அது உன்மடியில் போக உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!

என்னை வதைக்கிறது ...!!!

கவிதை எழுதுகிறேன் சில நேரம் அவள் வருகிறாள் சில நேரம் கவிதை வருகிறது இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!

நீ எங்கு இருக்கிறாய் ...?

உன்னிடம் காதல் கொண்டு பழகினேன் என்னிடம் உன் காதலும் சேர்ந்து இருக்கிறது நீ எங்கு இருக்கிறாய் ...?

உணர்வு நான் வெளிப்பாடு நீ

நான் எழுதும் கவிதையில் வரிகள் நான் வார்த்தைகள் நீ ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ உணர்வு நான் வெளிப்பாடு நீ

என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!

நிச்சயமாக எனக்குள் நீ உனக்குள் நான் இருந்தும் நமக்குள் ஏன் இடைவெளி ..? நான் காதலில் துடிக்கிறேன் என்றால் துடிக்க பண்ணியது -நீ என்னை வதைக்கும் அளவுக்கு என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!

நினைவால் இறப்போம் ...!!!

உன்னை நினைக்காத நேரம் நான் இறந்த நேரம் வா ,,,இருவரும் நினைவால் இறப்போம் ...!!! கணணி திரையில் உன் முகம் நிலையாக இருக்க மனத்திரையில் அசையும் படமாகும் ....!!! இதயத்தில் இரத்தோட்டம் நீ எனக்கோ இரத்த சோகை...!!! கஸல் 635

நினைவில் கோலம் போட்டேன்

அன்பை தந்தேன் காதலை தந்தாய் தண்ட வாளத்தில் காதல் பயணம் ....!!! காதல் சுவர் நீ காதல் படம் நான் தூசி பிடிக்கிறது காதல் நினைவில் கோலம் போட்டேன் -கனவில் புள்ளி போட்டேன் கண்ணீர் கோலத்தை அழிக்கிறது ....!!! கஸல் 634

கண்ணீரால் முடிந்தது ...??

இதயமும் இதயமும் சேர்ந்தால் காதல் உன் கணக்கில் பிழைக்கிறதே...??? பன்னீரால் காதலிக்கிறேன் கண்ணீரால் விடைதருகிராய் காதல் நீரும் நெருப்பும் கண்ணிலே தோன்றி இதயத்தில் முடியும் காதல் -எப்படி ..? கண்ணீரால் முடிந்தது ...?? கஸல் 633

ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!!

தாமரை இலை நீ காதல் தடாகம் நான் தாமரை இலையில் தண்ணீர் நம் காதல் ...!!! சமுத்திர ஆழம் காதல் சமுத்திர கப்பல் நாம் ஓட்டை விழுந்த படகில் பயணம் செய்கிறோம் ...!!! எறும்பு ஊர கற்குழியும் என் நினைவுகள் ஏற ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!! கஸல் 632

என்னை சிறையில் வை

என் கண்ணீரால்   காதல் வளர்கிறது   சந்தோசம் உன் காதல்   மரம் வளர்கிறது நீ அருகில் நின்றால்   பேசுவத்தில்லை நான் போசும் போது   நீ அருகில் இல்லை   உன் கண்கள் காவல்   செய்யும் போது   நான் கள்வனாகிறேன் என்னை சிறையில் வை   கஸல் தொடர் 22