சனி, 21 செப்டம்பர், 2013

நினைவுகள் முள்ளாய்

கவலைப்படாமல் -அவள்
இதயத்தை திருடினேன்
திருடிய குற்றத்துக்காக
காதல் தோல்வி-என்னும்
சிறையில் வாழுகிறேன்
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!

வரி

குதிரைக்கு அழகு 
மக்களுக்கு சுமை 
வரி

காதல் நம்மை மீட்கும் ...!!!காதலை கம்பி எல்லையால் 
தடுத்து விட முடியாது 
கலங்க்காதே கண்ணே ...
காதல் நம்மை மீட்கும் ...!!!

பனிக்கட்டியாவேன் ....!!!பனிக்கட்டியையே உருகவைக்கும் 
காதல் - என்னை விட்டுவைக்குமோ ..?
எத்தனை முறையும் அவளுக்காக 
பனிக்கட்டியாவேன் ....!!!

விடியபோகும் இரவுவிடியபோகும் இரவு 
நாம் விடியலாக இருக்கட்டும் 
வரப்போகும் கனவு 
இனிமையாக இருக்கட்டும் 
பகலில் கழுகுகளின் கண்ணில் 
பாடுகிறோம் -இரவிலாவது 
சந்தோஷமாக சந்திப்போம்...!!!
*
*
* 
போடா -இரவு ஆந்தைகளும் 
இருக்க தான் செய்கின்றன ....!!!

கண்ணீர்கண்ணீர் என்ற ஒன்று 
இல்லாவிட்டால் காதல் 
தோல்விக்கு முடிவு 
மரணம் தான் -நல்ல 
வேளை இறைவன் கண்ணீரால் 
கவலையை அழித்துவிடுகிறான்

ஆனதடி சிகப்பாய் ....!!!நீ தரும்போது ரோஜா வெள்ளை 
நிறம் என்று உனக்கு தெரியும் 
நீ தந்த வலிகளால் ஆனதடி 
சிகப்பாய் ....!!!

காதலில் தோற்றவன்காதலில் தோற்றவன் 
இப்படித்தான் -இணையாத 
தண்டவாளம் போல் 
தனியாக 
செல்லவேண்டியது தான் ...!!!

(காதல் படமும் கவிதையும் )

நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

நீ
தூங்கும் அழகை ரசிக்கிறேன்
அப்படி என்ன அழகு இருக்கிறது
என்று கேட்கிறாயா ...?
நீ தான் தூக்கம் என்று
நினைக்கிறாய் ...!!!
உன்
கண் மட்டுமே மூடியுள்ளது
இதயம் என் பெயரை சொல்லி
துடிப்பதை நான் அறிவேன்
மூச்சு என்னிடம் வந்து வந்து
போவதை நான் அறிவேன்
இத்தனை  இன்பத்தை யார்தான்
இழப்பார்கள் ...???
நீ நன்றாக தூங்கு
நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

(கதை கதையை கவிதையாய் )

வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!!

போடி கள்ளி -நீ
வேண்டுமென்றே அழுகிறாய்
என் தோலில் சாய்வதற்காக
வீண் சண்டை
போட்டு அழுகிறாய் ....!!!
நானும் வேண்டுமென்றே
முகத்தை திருப்பி
வைத்திருக்கிறேன்
நீ அழுவதை கடைக்கண்ணால்
ரசித்தபடி .....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

சேலை எடுத்து விட்டதே ....!!!

நீ
சேலையுடன் வந்தபோது
அழகோ  அழகு
என்றாலும் சுடிதார்
உனக்கு சூப்பரோ சூப்பர்
எனக்கு ஒரு கவலை
உன்னை அன்பால்
கட்டிவைத்தேன் -சேலை
உடலால் கட்டிவைத்துவிட்டது
என்னுடைய சந்தர்ப்பத்தை
சேலை எடுத்து விட்டதே ....!!!

இருநிலையில் ...?

உன்னை பார்ப்பதே என்
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!

என்னிடம் இடமில்லை ....!!!

நல்ல வார்த்தையால்
உன்னை வர்ணித்தேன்
நீ போதாது என்கிறாய்
எனக்கு கேட்ட வார்த்தை
வராது ....!!!
காதலை புனிதமாக
பார்க்க முடியுமே தவிர
காம உணர்வுக்கு என்னிடம்
இடமில்லை ....!!!

காதல் போய் விட்டது ...!!!

எனக்கு தெரியும்
உனக்கு பொருத்தமானவன்
நான் இல்லை என்று -உனக்கு
காதல் விளையாட்டு எனக்கு
நீயே உயிர் ....!!!

புகையிரதத்துக்கு இருபக்கம்
இயந்திரம் போல் நீயும்
இருபக்கம் பேசுகிறாய் ...!!!

எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது
இருந்த
காதல் போய் விட்டது ...!!!

கஸல் 490

இதய வலிக்கு தண்ணீர் தருகிறாய் ....!!!

நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்

காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!

நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!

கஸல் ;489

காதல் ஒரு கண்ணாடி

உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!

என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது

காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!

கஸல் 488

கண் முன் நீ தந்த வலி

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை

வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை

நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி

கஸல் 487

காதல் தோற்றது என்கிறாய்

காதல் வலி என்றால் 
என்ன என்று மனதில் 
கேட்டேன் -பதில் வந்தது 
நீ தான் என்று ....!!!

நான் கடல் நீ 
தோனி -துடுப்பு 
உடைந்த கடல் 
பயணம் ....!!!

காதல் 
தோற்பதில்லை 
காமம் தோற்றால் 
காதல் தோற்றது என்கிறாய் 

கஸல் ;486


சிறப்புடைய இடுகை

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ...