இடுகைகள்

செப்டம்பர் 10, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....

கு ப்பையில் போட்டாலும் .... கு ண்டுமணி மங்காது ..... கு டிசையில் வாழ்ந்தாலும் .... கு டிகள் போற்றும்படி வாழ்.....!!! கு டி குடியை கெடுக்கும் .... கு ணம் கெட்டாலும் குடி கெடும் ..... கு ப்பை கூடினாலும் குடி கெடும் .... கு ருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!! கு ம்பிடு பெற்றோரை கும்பிடு ..... கு ரல் கொடு அநீதிக்கு குரல் கொடு .... கு றிப்பெடு படிப்பில் குறிப்பெடு..... கு றள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!! கு ற்றம் செய்யாதே தலை குனியாதே .... கு ன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே .... கு றிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே .... கு ருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!

தூக்கி எறிய முடியவில்லை ....!!!

அவளுக்காக நான் எழுதிய அத்தனை கவிதைகளையும், கிழித்தெறிந்து விட்டேன், ஆனால் வரிகளை தான் மறக்க முடியவில்லை....!!! அவள் தந்த நினைவு .... பொருட்கள் எல்லாம் .... தூக்கி எறிந்து விட்டேன் .... நினைவுகளை தூக்கி .... எறிய முடியவில்லை ....!!!

எனக்கேன் காதல் வரவில்லை ...?

முள்ளை முள்ளால் தான் ..... எடுக்கவேண்டுமென்றால் .... வலியை வலியால் தானே .... விலக்கவேண்டும் .....? பணமிருந்தால் குணமிராது .... குணமிருந்தால் பணமிராது .... உன்னிடம் இரண்டுமிருந்தும் .... எனக்கேன் காதல் வரவில்லை ...? என்னுள் இன்னொருத்தியின் ... வலி வலித்துகொண்டிருகிறது....!!!

ஒரு இதயத்துக்கே சுமை ....!!!

காதல் அலைகள் ஓய்வதில்லை... என்னைப் பற்றிய நினைவுகள்.... உன் மனதிற்குள்ளும் அலையும் .... உன்னைப் பற்றிய நினைவுகள் என் மனதிற்குள்ளும் அலையும் ....!!! கரையிருந்தால் இறங்கிவிடலாம் .... காதலுக்குதான் கரையே இல்லையே..... துடுப்பை கவனமாய் வலித்துகொள் .... கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!! காதல் இன்பமாய் இருந்தால் .... இதயத்தின் சுமையோ சமன் ..... காதல் தோல்வியாய் அமைந்தால் .... ஒரு இதயத்துக்கே சுமை ....!!!

அருகில் இருப்பாயா ...?

வளர்த்துவிட்டேன் ..... உன் மீது காதலை .... என்னை கடிகாரம்போல் .... உன்னையே சுற்றிவருகிறது ....!!! ஆதரவின்றி அலைகிறேன் .... புரியாமல் தவிக்கிறேன் ..... கண் மூடி தவமிருக்கிறேன் .... கண் திறந்தவுடன் -நீ அருகில் இருப்பாயா ...?