இடுகைகள்

நவம்பர் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையால் காதல் செய்கிறேன் 10

ஆசையை குறை குறை ..... என்கிறார் என் குருஜி .... குறைத்து கொள்ளப்போகிறேன் .... உன் மீது இருக்கும் ஆசையை ... குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .... சொன்னது உண்மைதான் ..... உன்னை  நான் கண்டதில்லை  .... என் அகத்தில் இருக்கும் உன்னை ... நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 10 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 09

நான் மருத்துவனாக .... மாற ஆசைப்படுகிறேன் .... இதயத்துக்குள் உன்னை .... எப்படி அடைப்பது என்று ..... கண்டறிய போகிறேன்....!!! எனக்கு எந்த பூவையும் .... பிடிக்கவில்லை .... உன்னை காணும்வரை .... எதையும் விரும்ப போவதில்லை .... எதை விரும்பினாலும் -உன்  மீதிருக்கும் காதல் குறைந்து .... விடுமோ என்ற பயம் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 09 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 08

இந்த நிமிடம் வரை .... உனக்கே தெரியாமல் .... உன்னை காதலிக்கிறேன் .... என்றோ ஒருநாள் நிச்சயம் .... காதலிப்பாய் .....!!! சூரியனின் ஒளியில் .... பூக்கள் மகிழும் ..... என் சூரியனும் -நீ சந்திரனும் -நீ இரவு பகல் எல்லாம் - நீ + கவிதையால் காதல் செய்கிறேன் 08 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 07

சற்று முன் வீதியில் .... உன்னைப்போல் ஒருத்தி .... சென்றிருப்பாளோ ...? என்று சந்தேகப்பட்டேன் .... இருக்காது இருக்காது .... என்னை நீ பார்க்காமல் .... போயிருக்க மாட்டாய் ....!!! எப்போது உயிரே -நீ திருடியாவாய் -என் இதயம் ஏங்கிய படியே .... காத்திருகிறது ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 07 கவிப்புயல் இனியவன்

கவிதையால் காதல் செய்கிறேன் 06

உயிரே உனக்கு .... என்ன நடந்தது ....? பிரபஞ்ச்சத்தில் .... சிலநிமிடம் காற்றே .... வீசவில்லை .....? அப்போ நீ மூச்சு .... விடவில்லை என்றுதானே ... அர்த்தம் .....!!! உயிரே உன் காதலை .... சொல்லமுன் என்னை விட்டு .... பிரிந்து விடாதே ..... என்னிடம் காற்றே இராது ..... நீ இல்லாத போது ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 06 கவிப்புயல் இனியவன்