இடுகைகள்

செப்டம்பர் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் பொறுக்கி.....!!!

நான் எழுதும் கவிதை உனக்குவிளங்கினால் போதும் சங்கதமிழ்  தமிழ் பித்தனுமில்லை முத்தமிழ்  நக்கீரனும் இல்லை கண்ட இடத்தில் கண்டதை பொறுக்கும்  தமிழ் பொறுக்கி.....!!! கவிதை உணர்வுகளின் சுகம் .... உணர்வுகள் உணர்பவர்களுக்கே .... உணரமுடியும் ......!!!

என்னை உயிராய் நினைப்பாய்"

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன் நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன் நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன் நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..? "எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான் எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்" @@@ நிமிடத்துக்கு  துடிக்கும் ..... என் இதயம் ..... எதிர்பார்த்து நிற்கையில் பலமணி  துடிக்க விரும்புகிறது .... உன்னை கண்டவுடன் ...... ஜென்மம்  துடிக்க விரும்புகிறது .... துடிப்பது என் இதயம்,,, உனக்கு எப்படி விளங்கும் நீ என்னை விட்டு செல்லும் ..... நிமிடத்தில் இறங்குமுகமாய் .... துடிக்கிறது .....!!!

மூன்று வரிக்கவிதை

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ...... கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!! + மூன்று வரிக்கவிதை கே இனியவன்

போராட்ட கவிதை

காற்றோடு போராடுவது -பஞ்சின் வாழ்க்கை நினைவோடு போராடுவது-காதலின் வாழ்க்கை பசியோடு போராடுவது-ஏழையின் வாழ்க்கை பூனையுடன் போராடுவது-எலியின் வாழ்க்கை கடனோடு போராடுவது-விவசாயியின் வாழ்க்கை சூரியனோடு போராடுவது-பூவின் வாழ்க்கை தமிழோடு போராடுவது- கவிதையின் வாழ்க்கை உரிமைக்காய் போராடுவது தமிழன் வாழ்க்கை உயிர் வாழ போராடுகிறது மனித வாழ்க்கை ....!!!