இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலே கவனம் ....!!!

உயிரை சுமப்பது பிறப்பு ... உயிரை பரிமாறுவது காதல் ... உயிராக மாறுவது வாழ்க்கை ...!!! உயிரே ... உண்மை காதலை நேசித்து ... உண்மையாக வாழ்வோம் வா ... உயிர் போகும் வரை உயிராய் ... உறவோடு வாழ்வோம் வா ...!!! காதல் உயிரையும் தரும் உயிரையும் பறிக்கும் காதலே கவனம் ....!!!

மாற்றி விடாதே ...!!!

இடைவெளி காதலுக்கு வேண்டும் ...! கவனம் உயிரே ... இடைவெளியே காதலாக ... மாற்றி விடாதே ...!!! நீ ஆயிரம் முறை கோபித்தாலும் நான் சிரித்தே அதை மறக்கிறேன் ... காதல் விட்டு கொடுப்பின் சிகரம் ...!!!

என் காதலை சொல்ல ...

உன்னிடம் என் காதலை சொல்ல ... வார்த்தையில்லை ....!!! காதல் வர்ணிக்கும் விடயமில்லை ... சொர்க்கத்துக்கும் சமனில்லை ... நரகத்தை கூட சொர்க்கமாக்கும் ... சொர்க்கத்தை நரகமாக்கும் ...!!! உணர்ந்தால் காதல் உணராமல் விட்டால் சாதல் ... சாதல் உடல் அல்ல உள்ளம் ...!!!

ஏனடி வலிக்கிறது ....!!!

நீ தந்த ரோஜா மலர் மென்மை.... நீ பேசும் வார்த்தைகள் மென்மை ... காதல் ஏனடி வலிக்கிறது ....!!!

மூச்சு திணறுகிறேன் ...

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ... நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை .... அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!

கொல்லாதே ....!!!

ஒன்றில் என்னை ஏற்று கொள் ... இல்லை என்றால் நிராகரித்து கொள் ... தயவு செய்து கொல்லாதே ....!!!

தர மறுக்கிறாய் ....

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் .... நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ... நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!

காதல் ....!!!

கருவறையில் வெளிவந்து ... கல்லறைவரை  தொடர்வது ... காதல் காதல் காதல் ....!!!

நீ தான் கண்ணீர்....!!!

கவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் ..... உன் காதலால் வந்த கண்ணீர்தான் .... கண்ணில் இருக்கும் நீ தான் கண்ணீர்....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

என் மூச்சை அடக்கிறாய் ....!!!

மூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ... சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ... பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

போயிடும் மூச்சு ....!!!

நீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ... நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்... பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

என் கவிதைகள் வரிகள்

உனக்கு என் கவிதைகள் வரிகள் .... எனக்கு என் கவிதைகள் வலிகள் ... வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!! கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

உன் மடியில்

உன் மடியில் இறக்க தயார் -உயிரே உன் மடியே எனக்கு மரண குழியானால்.. மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!! கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

அப்பா கவிதை

மார்பையே .... என்னை சுமக்கும் சுமை ... தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ... என் அருமை தந்தையே ....!!! யாருக்கும் அடிபணியாதே .... யாருக்கும் தலை குனியாதே ... யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே .... யாருக்காவவும் உன்னை இழக்காதே ... அத்தனையும் பொன்மொழிகள் ... வாசித்து பெறவில்லை ... என் தந்தையின் வாழ்க்கையில் ... பெற்றேன் ....!!! உலகில் அனைவருக்கும் ... சிறந்த முன்மாதிரியாளன் ... தந்தை பண்போடு இருக்கும் தந்தை ... என் தந்தை எனக்கு கிடைத்த ... எல்லை அற்ற பொக்கிஷம் ....!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அப்பா  கவிதை )

குடும்ப கவிதைகள்

என் தாயே ... உன் பாத திருவடியே ... உலகில் அத்தனை ஆலயங்களின் ... திறவு கதவு ....!!! என் தாயே .... உன் கருணை கொண்ட பார்வையே .... நான் வணங்கும் இறைவனின் ... கருணை பார்வை ....!!! என் தாயே .... என்னை விட்டு நீங்கள் இறை ... பயணம் சென்றாலும் .... உன் திருப்பாதத்தின் நினைவுகள் ... தான் நான் வணங்கும் இறைவன் ...!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )

உன் தோளில்....!!!

தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு .... தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ... மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

ஒரு கனவாகும் போது....!!!

ஆயிரம் மழை துளிக்கு நிகர் .... உன்னை நினைத்து விடும் கண்ணீர் ... வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan