இடுகைகள்

ஜூலை 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் என்றால்புரிவதில்லை...!

நீ அருகில் ... இருக்கும் போது ... காதல் என்றால்... புரிவதில்லை...! பேசுவேன் ..... தொடர்பில்லாமல் ..... தொடர்ந்து பேசுவேன் ..... உன்னை பிரிந்திருக்கும் ..... ஒவ்வொரு நொடியும் .... காதலை தவிர வேறு ஏதும் தெரிவதில்லை...! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மனிதன் எங்கே எங்கே ..??

உன்னில் இருக்கும் மனிதன் எங்கே எங்கே ..?? அதை வெளியில் தேடுகிறாய் ...??? மனிதம் என்ற பொருள் தெரியாது .. மாறி மாறி ஆடையை ..... மாற்றுகிறாய் ...!!! நீ மனிதனை..... காணவில்லை என்கிறாய் ...!!! மனித நீ மனிதம் ஆகும் வரை...... மனிதனை தேடிக்கொண்டே ...... இருப்பாய் ...!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் 

உன் அணையாத நட்பில் ....!!!

தென்றல் காற்றின் சுகம் ..... அர்த்தமுள்ள கவிதை சுகம் .... அறியாத பொருள் இதம் ..... கலையாத கனவு இன்பம் .... இன்னும் எவ்வளவோ... அத்தனையும் கண்டேன்.... உன் அணையாத நட்பில் ....!!! விழுந்தவுடன் மறைந்து விட நாம்  மழைத் துளி அல்ல... இறுதிவரை நம்முடன் ..... இருக்கும் கண்ணீர் துளி...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

சில நட்பை நாம்

அனுபவத்தால் வந்த கவி ... ******************** சில நட்பை  நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம்.....!!!! சிலரை, நாம் வெறுப்பதால் புரிந்து கொள்ளமறுக்கிறோம்...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

நட்பே நீ மட்டும் .....

உலகுக்கு ஒளி தரும் ..... சூரியனே.. கடமையை .... முடித்து விட்டு ..... உறங்க சென்று விட்டது...! என் ..... உயிருக்கு ஒளி தரும் .... நட்பே நீ மட்டும் ..... ஏன் விழித்திருக்கிறாய்.....? போய் கண் உறங்கு...! உனக்காக நானும் ..... எனக்காக நீயும் .... விடியல் நமக்காகத்தான் ...!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 

நட்பு ஆழ்கடல் போன்றது...

உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளதைப் புரிந்து கொள்ள நண்பா உன் ஓர் உறவுபோதும்...!!! நட்பு ஆழ்கடல் போன்றது... கரையில் தேடினால், சிப்பிகள்  கிடைக்கும்... மூழ்கி தேடினால் தான் உன்னைப் போல... முத்துக்கள் கிடைக்கும்....!!! + கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை