இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை வைத்திருந்த வலி புரியும் ....!!!

ஆயிரம் கவிதையை .... வலியோடு எழுதினாலும் .... அரைவாசி வலியையே.... எழுத முடிகிறது .....!!! கடுமையான வலியை.... எழுத மனம் துடிக்கும் .... வரிகள் போட்டி போடும் .... இதயம் தடுக்கும் ..... அதற்குதானே உன்னை .... வைத்திருந்த வலி புரியும் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

நானும்  சிறந்த பாடகன் .... குழியல் அறைக்குள் ..... குழிக்கும் போதுவரும்.... நடுக்கத்தால் புதிய புதிய .... சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!! துணிவாக பாடுகிறேன் .... அரை குறை துணியோடு .... பாடுகிறேன் -உள்ளே வந்து .... துவசம் செய்ய மாட்டார்கள் ...... என்ற நம்பிக்கையுடன் ..... பாடுகிறேன் ......!!! பக்கத்து குழியல் அறையில் .... எதிர் பாட்டு கேட்கிறது ..... குழித்த அரைகுறையுடன் .... எட்டிப்பார்த்தேன் -பாடகர்  குளியல் அறைக்கு .... கதவில்லாததால்  பாடுகிறார் ....!!! & நகைசுவை கவிதை  கவிப்புயல் இனியவன் 

இயற்கை கவிதை

சடைத்து நிற்கும் மரத்தை ....... சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் ..... பார்த்தேன் .............!!! இலைகளின் அசைவில் சிரிப்பொலி..... உதிர்ந்து விழும் இலையின்.... தியாகம் ...... துளிர்க்கும் இலையின் .... துடிப்பு ........ மற்றையை இலையோடு....... உரசும் காதல்..... ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!! குடைபோல் நிழல் கொடுக்கும் ...... உழைப்பு...... குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்..... அரவணைப்பு....... முறிந்து விழுந்தாலும் விறகாகும்.... புகழ்......... கனியை கொடுத்துதவும்..... அற்புதம்...... தன்னை அழிக்கவருபவனுக்கும்...... உயிர் கொடுக்கும் வள்ளல்.....  நினைத்துப்பார்த்தால் ........ மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!! கெட்டதை உள் வாங்கி......  நல்லதை வெளிவிடும் அறிவு...... கண்ணுக்கு தெரியாத காற்றை.... உணர்வைக்கும் அழகு...... இத்தனை அற்புதங்களை.... கொண்ட மரத்தை அகுறிணையாக ...... கருதாமல் உயர்திணையாக.... மதிப்போம்.....!!! & கவிப்புயல் இனியவன் இயற்கை கவிதை

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

நீ தந்தவலிகலால்.... உன்னை எப்போதோ .... பிரிந்திருப்பேன் ....!!! நல்லவனாக உனக்கு ... தெரியும் காலத்தில் ..... நான் பிரிந்தால் -நீ காலமெல்லாம் கவலை ... படுவாய் என்பதால் .... என்னை கெட்டவனாக .... நீ நினைக்கும் காலத்தில் .... பிரிகிறேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

கண்ணால் பேசிவிட்டு .... காலமெல்லாம் .... காத்திருக்கவைக்க .... என்னவளால் தான் .... முடியும் .....!!! சில நொடிதான் .... பார்த்தாள்.... சிதறி விட்டது இதயம் ....!!! ^ என் காதல் பைங்கிளியே -06 காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

என் .... சோகம் என்னோடு ..... இருந்துவிட்டு போகட்டும் .... எல்லாம் முடிந்துவிட்டது   ... என்று மனத்தால் நினைத்து .... வாழ்ந்துகொண்டிரு .....!!! காதல் இல்லாத இடத்தில் ... காதல் சொன்னால் ..... கல்லெறி விழத்தான் செய்யும் ...!!! & நீ காதலை இழந்து வாழ்கிறாய் நான் காதலோடு வாழ்கிறேன் நம்மை வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!! ^ கவி நாட்டரசர் கே இனியவன்

கவிப்புயல் இனியவன்

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன் நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன் நீ நினைக்கும்  அளவுக்கு ஒழுக்கமில்லாதவன் நீ எதற்காக என்னை காதலிக்கிறாய் ..? காதல் செய் பதில் ... வருமென்றாள்.....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கவிஞனின் சின்ன கிறுக்கல்

பகலை சுமையாக்கி இரவை கண்ணீராக்கினால் காதல் தோற்றுவிட்டது & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன் & இன்று என்னை ........பிரிந்தாலும்..! மறந்தாலும்..!! .......என்றாவது நீ என்னை நினைக்கும்.... ..... நாள் நிச்சயம் வரும் அப்போது நான் உன்னில் ... .....கண்ணீராக இருப்பேன் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல் கே இனியவன்

காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

உன்னோடு ..... பேச சந்தர்ப்பம் கிடைத்த.... போதெல்லாம் உன்னை.... பார்த்துகொண்டிருந்தால்.... போதும் என்று பேசாமல்.... போய்விடுவேன்.....!!! தனியாக .... சந்திக்கும் வாய்ப்பு... கிடைத்தபோதெல்லாம்.... உன்னை சிந்தித்தாலே.... போதும் என்ற சிந்தணையில்... சென்றுவிடுவேன்.....!!! விளைவு ..... இன்னொருத்தியுடன் நானும்.... இன்னொருவனோடு நீயும்.... காதலை இழந்து வாழ்கிறோம்....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

இதயத்தை ... கொஞ்சம் மென்மையாக்கி.... ஒருமுறை மெல்ல கண் மூடி ... என்னை நினைத்துப்பார் .... உன் விழியோரத்தில் .... நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!! உன்னை ஒவ்வொரு நாளும் .... பார்த்த குற்றத்துக்காய் ..... என் கண் தன்னையே.... வருத்தி விடும் வலியின் .... திரவமே கண்ணீர் ......!!! + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வர வைத்தவள் -நீ

காதலால் கண்ணீர் .... வருகின்றது எனில் ... காதல் தூசு  போல் .... மாறிவிட்டதோ ....? உன்னை நினைத்து ... அழுவது என்ன என் .... கடமையா ....? உன்னை நினைக்கும் .... போது கண்ணீர் வர ... வைத்தவள் -நீ + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

கண்ணீர் கவிதை

நீ என்னை வெறுத்துவிட்டாய் .... அதை நினைத்து நான் கண்ணீர் .... சிந்தவில்லை ....!!!! நீ வெறுக்கும் அளவுக்கு .... நான் உன் காதலை .... வேதனை படுத்திவிட்டேன் ... அதை நினைத்தே கண்ணீர் .... வடிக்கிறேன் ....!!! + கண்ணீர் கவிதை இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

தோல்வியே இல்லை

தோள் கொடுக்க.... உயிர் காதலாய் .... இருக்கும் வரை தோல்விகள்.... தோல்வியல்ல .....!!! தோல்விகள்.... ஆயிரம் ஆயிரம்... தோன்றினாலும்... துவண்டு விழேன்.... என்றிருந்த என்னை ... விழ வைத்துவிட்டாய் .... உன்னை இழந்ததை விட ... தோல்வியே இல்லை....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் உணர வில்லை ....?

உனக்கு  எழுதிய .... கவிதைகளையெல்லாம் காகித கப்பல் செய்து விளையாடி விட்டாய் ....!!! நீ எனக்கு தந்த வலிகளின் அடையாளம் .... ஏன் உணர வில்லை ....? காதலும் கவிதையும்... யார் யாருக்குஎன்று .... புரிந்துகொள்ள வேண்டும் ...!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

வேண்டும் என்கிறது கண்

வேண்டாம் என்கிறது இதயம் ... வேண்டும் என்கிறது கண் ....!!! கண் செய்த தவறுக்கு ... தண்டனையாக ... அனுபவிக்கிறது .... கண்ணீராய் ....!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மூன்று வரி கவிதை

காதலின் சின்னம் ............. ஆரம்பிக்கும் போது ரோஜா.... முடியும் போது முள் ..... & மூன்று வரி கவிதை 06 கவிப்புயல் இனியவன் & காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ... கல்லறைவரை இன்பமாக இருக்கவே .... காதல் செய்ய வேண்டும் .....!!! & மூன்று வரி கவிதை 07 கவிப்புயல் இனியவன்

இப்போ கண்ணீர் வருகிறதே

நினைத்த நொடியில் காதல் ...... இப்போ ... கண்ணீர் வருகிறதே ....!!! இதயத்தில் ... வசிப்பதற்காக காதல் .... வரக்கூடாது .... இதயமாக வாழ்வதுக்கு .... காதல் வேண்டும் ....!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கவலை படுகிறாய் ....!!!

நீ என்னை ..... மறக்க வில்லை அதுதான் உண்மை ....!!! நீ மறந்திருந்தால்  .... கவிதைகளை ..... விரும்பமாட்டாய்..... என் நினைவுகள் ஒரு ... ஓரத்தில் இருப்பதால் ... தான் என்னை நினைத்து .... கவலை படுகிறாய் ....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன் 

முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!

என் ஞாபங்களையும் ... நினைவுகளையும் .... தூக்கி எறிந்துவிட்டு ... நீ செல்ல முடியாது ....!!! அது உன் உடலோடும் ... உயிரோடும் கலந்திருக்கும் .... இரத்தமும் சதையும் .... முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

உண்மை காதல் .....!!!

உருவம் தெரியாத உயிருக்கு .... உயிர் கொடுத்து பிரசவிப்பது.... உண்மை காதல் .....!!! & மூன்று வரி கவிதை 05 கவிப்புயல் இனியவன்

உனக்கு தெரியாதா ...?

நினைவுகள் தாங்க முடியாமல் ... கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது .. இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...? & மூன்று வரி கவிதை  03 கவிப்புயல் இனியவன்

சுகமும் வலியும்....!!!

காதல் பூவுக்குள்  தேன்போலவும்  ... கண்ணுக்குள்  கண்ணீராகவும் .... இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன்

காதலித்துக்கொண்டிருங்கள்...!

உயிரோடும் மரணத்தோடும் மாறி மாறி வாழவிரும்புபவர்கள் காதலித்துக்கொண்டிருங்கள்...! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன் 

காதலை வளர்க்கிறேன்....!!!

இறந்த காலம் சில ... வேளை இனிமையாகும் . இறந்த காதலும் சில ... வேளை இனிமையாகும் ....!!! தண்ணீர் ஊற்றி .... செடியை வளர்க்கிறேன். கண்ணீர் விட்டு .... காதலை  வளர்க்கிறேன்....!!! நீ அதிசயப்பிறவு .... காதலின் தொடக்கத்திலும் ... இறுதியிலும் சிரித்த ... முகத்தோடு செல்கிறாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AE 1015

காதலின் முடிவு இருள் ....!!!

நான் காதலில் ... கனவு காண்கிறேன் ... நீ தூக்கத்தில் கனவு காண்கிறாய் ....!!! ஈசலின் வாழ்வும் .... ஒருசில மணிநேரம் ... காதலின் இன்பமும் .... ஒருசில மணிநேரம் ....!!! பகலின் முடிவு இருள் .... காதல் இதயத்தின் அருள் ... காதலின் முடிவு இருள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AD 1014

அவளால் மட்டுமே காயப்படவேண்டும் ....

என்னை அவள் காயப்படுத்தி.... விட்டாள் என்று கவலை ... படவில்லை .....!!! என்னை அவளை தவிர யார் ....? காயப்படுத்தமுடியும் ...? அவளால் மட்டுமே நான் ... காயப்படவேண்டும் .... அதுவே இறுதியாகவும் .... இருக்கவேண்டும் ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கனவில் கூடவா வதைக்கிறாய்......?

விழித்திருக்கும் போது.... அழுதால் பரவாயில்லை .... உன் நினைவுகள் என்னை .... வதைக்கலாம் ....!!! தூக்கத்தில் கூட கண்ணில் ஓரமாய் சிறு ... துளிகள் வழிகிறது .... கனவில் கூடவா என்னை .... வதைக்கிறாய்......? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

எதற்காக என்றே தெரியவில்லை ...?

எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... எங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

காதல் ...... கனவோடு ஆரம்பித்து ..... கண்ணீரால் கழுவப்பட்டு .... நினைவுகளோடு போராடி .... தூண்டில் மீன் போல் .... துடித்துக்கொண்டு ...... இருக்கிறது ....!!! ஒன்றை உனக்கு சொல்வேன் .... நான் காயப்படலாம் ..... நீயும் காயப்படலாம் ..... காதல் காயப்படாது .... காதல் காலத்தால் .... அழிய முடியாதது ......!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் எஸ் எம் எஸ்

அத்து மீறிய குடியேற்றம்.... உன்னுள்  நானும் .... என்னுள் நீயும் ..... ரகசியமாய் வாழ்கிறோம் .... விரைவில் ..... வாழ்துவிடுவோமா ....? & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை

என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013

நமக்குள் நாமே காதல் செய்வோம் ....

அடுத்த .... ஜென்மத்தில் .... காதலிபப்தற்காக .... இந்த ஜென்மத்தில் .... வலிகளை தருகிறாள்....!!! கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....!!! காதலுக்காக ... நமக்குள்  நாமே .... காதல் செய்வோம் .... காதல் என்றாலும் .... இன்புறட்டும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AB 1012

அவள் வலியை சுமக்கிறேன் .....!!!

காதலித்தால் .... மனிதனாகலாம் .... அவள் காதலோடு .... இருந்தால் ....!!! நானும் ...... பாவத்தை .... சுமக்கும் சிலுவை .... நாதன் தான் ..... அவள் வலியை .... சுமக்கிறேன் .....!!! அவளிடம் .... காதல் நிறைந்து .... இருக்கிறது ... அவள் வீட்டில் .... காசு நிறைந்திருகிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AA 1011

காதல் எஸ் எம் எஸ்

உண்மை காதலின் ... அடையாளம் .... அடிக்கடி சண்டையும் .... நொடிப்பொழுதில் .... சமாதானமும்  வருவது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

காதல் எஸ் எம் எஸ்

நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!! ---- ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! ஆ ருயிரே என்று அழைத்துப்பார் .... ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ... ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் .... ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!! & " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

உலகையே வெறுத்து விடாதே ....!!!

எப்போதோ .... எவனே நட்பில் செய்த .... துரோகத்துக்காக ..... எல்லா நட்பையும் .... ஒதுக்கிவிடாதே .....!!! இந்த உலகில் உண்மை .... நட்பை அள்ளி வழங்க .... உயிரையே தரவிருக்கும் .... உன்னத நட்பு நிறைய .... காத்திருக்கிறது ..... உண்மை நட்பை இழந்து .... உலகையே வெறுத்து விடாதே ....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01

சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் .... தோற்கின்ற போதேல்லாம் ..... சொல்லப்படும் நியாயங்கள் ... சரியாத்தான் இருக்கும் ....!!! காதல் .... நியாயப்படுத்தி நியாயம் ... தேடும் விடயமல்ல .... நியமான விடயம் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காயமும் கண்ணீரும் ....

எனக்கும் ..... காதலுக்கும் ... காயத்துக்கும் .... நேர் மறை தொடர்பு .... இருக்கிறது ..... காதல் அதிகரிக்கும் ... போதெல்லாம் ... காயங்களும்  அதிகரிக்கின்றன.....!!!  காதல் அதிகரிக்கும் ... போதெலாம் .... கண்ணீரும் அதிகரிக்கிறது .... காதல் என்றால் .... காயமும் கண்ணீரும் .... இருக்கத்தான் செய்யும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ )  ...!!! ------ அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள் யார் எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!! " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

நினைத்துப்பார் ...!!!

எனக்கு ஒரே ஒரு .... உதவி செய்வாயா ...? எனக்காக ஒருமுறை .... தனியே இருந்து .... என் நினைவுகளை ... நினைத்துப்பார் ...!!! உன் கண்ணில் .... நீர் அருவியொன்று .... நிச்சயம் ஓடும் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ வாழ்ந்தாலும் ....

என்னை ...... வெறுப்பதுதான் .... உனக்கு இன்பம் என்றால் .... உன் வெறுப்பை கூட .... ஏற்றுக்கொள்வேன் .....!!! எங்கே நீ வாழ்ந்தாலும் .... எத்தனை காலம் ஆனாலும் .... என் நினைவுகள் ...... உன்னை ... ஒட்டியபடியே வாழ்வாய் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

உன் மீது வைத்த ... காதலுக்கு எனக்கு சொன்ன .... வார்த்தை -நீ வேண்டாம் ... போய் விடு ......!!! உன்னை விட்டு ... நான் விலகுகிறேன் ... என்னை போல் உன்னை .... நேசிப்பவர் யாரும் .... இருக்க மாட்டார்கள் ... என்பதை நிச்சயம் .... உணர்வாய் .....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

வலி உனக்கே புரியவில்லை...!

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

தேர்தல்

தேர்தல் ----------- மெய்யும் பொய்யும் .... தேர்தலில் போட்டியிட்டன .... மெய்யின் ஆதரவாளர்கள் .... மிகக்குறைவு -பொய்யின் ... ஆதரவாளர்களோ ..... குவிந்து செறிந்து பரந்து ... காணப்பட்டன .....!!! பொய்யின் தேர்தல் ... பிரச்சாரத்தில் பேச்சுகள் .... தூள் பறந்தது கைதட்டல் .... வானை பிழந்து சென்றன .... ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ... எங்களுக்கு வேண்டும் ..... நீங்கள் இல்லாத ஆட்சி ..... எங்களுக்கு வேண்டவே வேண்டாம் .... என்று கோஷமிட்டனர்.....! மெய்யின் பிரச்சாரத்தில்.... ஆங்காங்கே ஒருசிலர் ......!!! தேர்தல் முடிவு வெளியானது ..... பொய் கட்சி அமோக வெற்றி ... மெய் கட்சியினர் கட்டு பணத்தை ... இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் .... பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் .... மெய் கட்சி தலைவர் சிறையில் .... அடைக்கப்பட்டார் ......!!! பொய்களே அரச கொள்கையானது .... லஞ்சமே தேசிய தொழிலானது .... உண்மை பேசியோர் சிறையில் .... அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ... கொடுக்க மறுத்தோர் நாக்கு .... அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ... பொய்பேசியோர் வீடுகளில் .... உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!

காதல் தோல்வி கவிதைகள்

படம்
ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்விக்கவிதைகள்

உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல் எனக்கு மட்டும் ... கா "தள்" ஆகிவிட்டது ....!!! காதல் எனக்கு மட்டும் கா " டல் " ஆகிவிட்டது ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நேரம் இருக்கும் போது .... நினைத்து பார்பதற்கு ..... நான் உன் கைகடிகாரம் ... இல்லை ........!!! உன்னை நினைக்கும் .... நேரமே என் நேரம் .... என் மணிக்கூட்டில் .... மணிமுள்ளும் - நீ நிமிட முள்ளும் -நீ ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கனவுகளால் காயப்படுத்துகிறாய் ....!!!

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காத்திருப்பேன் காலம் வரை .

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

வலிகளை சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

ஓரத்தில் அழுதுகொண்டிருகிறது

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் என்னோடு இருக்கிறது

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

காதல் சோகக்கவிதைகள்

படம்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

தந்தை சுமந்த சுமை

உழைப்பின் வலியும் வியர்வையும் நினைவு படுத்தி  வலிக்கிறது   தந்தை சுமந்த சுமை ^ மே தின ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

தொழிலாளி வியர்வை

எல்லா உணவிலும் கலந்திருக்கும்  உப்புச்சுவை தொழிலாளி வியர்வை ^ மே தின வாழ்த்துக்கள் கவிப்புயல் இனியவன்