இடுகைகள்

அக்டோபர் 20, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீஎன் மனசை

நீ..... என் மனசை திறந்து விட்டுப் போகிறாய்.....! நான் இங்கே அதற்குள் நினைவுகளை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.....! நீ சின்னதாய் சிரித்து விட்டு .... போகிறாய் .....!!! நான் இங்கே சிதறியதேங்காய் .... ஆகிவிட்டேன் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதை

உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை.... நீயே எல்லோரையும் ஜெயிக்க .... பிறந்திருகிறாய்....!!! உன்னால் .... முடியாது என்பதை யாரோ .... ஒருவன் முயற்சி செய்து வருகிறான் .... முடியாது என்றசொல் உலகில் .... கிடையாது ....!!! கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை 

என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை கண்டவுடன் ... தலை குனிந்து போவதை ... காட்டிலும் ஒருமுறை ... முறைத்தேனும் பாருயிரே...!!! தோழிகளுடன் பேசுகிறாய் ... கண்டவுடன் மௌனமாகிறாய் .... என் முகத்தைப் பார்… என்னை திட்டியாவது என்னுடன் பேசிப் பார்…!!! என்னை அடித்தாவது என்னை தொட்டுப்பார்… அப்படியாவது என் காதல் உனக்குத் தெரியட்டும்.... காதலுக்கு காத்திருத்தல் தேவை ... எதுவரை .......? + கே இனியவன் காதல் சோக கவிதை 

என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...

உன்னை மறுக்கும்  நேரத்தில்.... என்னை மறக்கிறேன் .... உன்னை நினைக்கும் நேரத்தில் ... என்னை மறக்கிறேன் .....!!! என்னை மறக்கிறேன்... உன்னை நினைக்கிறன் .... என்னை நினைக்கும் நேரத்தில் .... உன்னையே நினைத்து என்னை .... மறக்கிறேன் ....!!! உன்னை மறக்க நினைக்கும் .... நேரத்தில் என்னை இழக்கிறேன்.... என்னை மறக்க ஒரு நொடிபோதும் ... உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!! + கே இனியவன் காதல் சோக கவிதை 

கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை

என்னவள் எனக்கு தந்த .... அத்தனை நினைவு பொருட்களும் ..... கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!! என்னையும் அவளையும் .... ஓவியமாய் வரைந்ததை .... கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!! என் காதலை திருப்பி தா .... கேட்டாள் கொடுத்துவிட்டேன் .... வலிகள் நெருஞ்சி முள்போல் .... குத்துகின்றன அவளுக்காக .... காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!! அவளுக்காக எழுதிய அத்தனை ..... கவிதைகளையும், கிழித்து விட்டேன்.... வரிகளை தான் மறக்க முடியவில்லை.......! நினைவில் என்றும் வைத்திருப்பேன் .... ஆயுள் வரை கவிதைக்காக .... ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை 

வலியை வலியால் ....

வலியை வலியால் .... உணரவைக்கமுடியும்.... என்றால் தினமும் கடவுளிடம் வேண்டுவேன் .... தொடர்ந்து நீ வலியை.... தரவேண்டும் என்பேன் ....!!! பணம் இருக்கும் இடத்தில்.... நல்ல குணம் இல்லை .... அது பொய் என்பேன்.... உன்னிடம் நல்ல குணம்.... இருக்கின்றது......!!! + கே இனியவன் காதல் கவிதைகள் 

நினைவுகள் ஓய்வதில்லை...

நினைவுகள்  ஓய்வதில்லை... மன அலைகள் ஓய்வதில்லை...!!! என்னைப் பற்றிய நினைவுகள் உன் மனதிற்குள்ளும்... உன்னைப் பற்றிய நினைவுகள் என் மனதிற்குள்ளும்... காரணமே தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன...!!! அலைகள் ஓய்ந்தாலும் .... காதல் ஓய்வதில்லை ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

பொருளெல்லாம் நீ ....!!!

வளர விட்டேன் காதலை .... மனதில் அதுவே இன்று என்னை மாற்றி சுற்ற வைத்து விட்டது....!!! ஆதரவின்றி அலைகிறேன் .... புரியாமல் தவிக்கிறேன் ....... ஒரு மனதாககண் மூடி .... திறக்கிறேன் காணும் ... பொருளெல்லாம் நீ ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள் 

சுமக்கும் பாக்கியத்தை கொடுத்தாய்

உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் தாய்க்கு கொடுத்தாய் ....!!! உன்னை தோளில்... சுமக்கும் பாக்கியம் தந்தைக்கு கொடுத்தாய் ...!!! உன்னை இதயத்தில் .... சுமக்கும் பாக்கியத்தை ... எனக்கு கொடுத்தாய் .....!!! வாழ்க்கை முழுவதும் .... ஏதோ ஒருவகை சுமை .... காதல் எல்லா சுமைகளின் .... கூட்டு மொத்தம் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

நீயல்லவோ உயிரே ....!!!

நீயல்லவோ உயிரே ....!!! *** பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள் என் உயிர் தாய் ....!!! வாழ்நாள் முழுதும் உன்னை சுமக்க இருக்கும் என்னை என்னவென்று ... அழைப்பாய் உயிரே ...? உயிரை உயிரால் எடுத்து ... என் உயிரை சுமப்பவளே .... தாயின் இன்னொரு பிறப்பு .... நீயல்லவோ உயிரே ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

மரணமே எனக்கு உதவிசெய் ....!!!

மரணமே எனக்கு உதவிசெய் ....!!! சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் காதலோடு கடைசி வரை வாழ துடிக்கிறது மனம்... !!! கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன் மரணமே என்னை நெருங்காதே......!!! சேர்ந்தே வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ... இரண்டும் எனக்கு காதலின் ... பரிசாக அமையட்டும் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்