இடுகைகள்

அக்டோபர் 8, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்பத்துப்பால் கவிதை எண் - 100

இன்பத்துப்பால்  கவிதை எண் - 100 என் இதயம் படும் வேதனையை ... அடிமேல் அடிவிழும் பறைபோல் துடி துடித்து .. என் கண்கள் ஆற்றாய் பெருக்கேடுகின்றன ....!!! நான் படும் வேதனையை .. மறைக்கவும் முடியவில்லை .. மறைத்தாலும் என் தோழிகள் '' நம்பபோவதுமில்லை ..... காதலின் வலி எல்லா .. பெண்களுக்கும் புரியும் ...!!! திருக்குறள் : 1180 + கண்விதுப்பழிதல் + மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கவிதை எண் - 100

காதல் கண்களை தவிர ....!!!

காதல் கண்களை தவிர ....!!! என்னவன் வராததால் என் கண்கள் .. தூங்கவே  இல்லை ... வந்தபின் அவனையே .. பார்க்கப்போகும் கண்கள் .. தூங்க போவதுமில்லை ...!!! அவன் ...!!! இருந்தாலும் துன்பம் ... இல்லாவிட்டாலும் துன்பம் ... இரட்டை வலியை .... காதல் கண்களை தவிர .... வேறு அனுபவிக்குமோ ...? திருக்குறள் : 1179 + கண்விதுப்பழிதல் + வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 99

இதயத்தால் விரும்பாமல்...!!!

இதயத்தால் விரும்பாமல்...!!! என்னவனே .....!!! இதயத்தால் என்னை .. விரும்பாமல் வார்த்தையால் .. விரும்பியவனே - நீர் என்றாலும் நல்லாயிரு ....!!! என் கண்களோ ... உன்னை காணாமல் ... ஏங்கி ஏங்கி தவிப்பதை ... தூக்கமின்றி தவிக்கின்றன ... என்னவனே ஒருமுறை வாராயோ ....!!! திருக்குறள் : 1178 + கண்விதுப்பழிதல் + பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 98

இன்புற்ற என் கண்கள் ...

இன்புற்ற என் கண்கள் ... அன்று என்னவனை பார்க்கும் போது இழைந்து குழைந்து இன்புற்ற என் கண்கள் ... இன்பத்தின் உச்சத்தை ... அனுபவித்தன ....!!! இன்றோ .... அழுது அழுது தேய்கின்றன ... சொல்ல முடியாத சோகத்தை அனுபவிக்கின்றன .. இறுதி துளி கண்ணீர் .. வற்றும் வரை அழுகின்றன ...!!! திருக்குறள் : 1177 + கண்விதுப்பழிதல் + உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 97

காரணமான கண்களே ......!!!

காரணமான கண்களே ......!!! பூக்கள்  வாடுவதுபோல் ... என் கண்களும் வாடுகின்றன ... என் காதல் நோய்க்கு  காரணமான கண்களே ......!!! நான்  வாடுவதுபோல் .. என் கண்களும் வாடுகின்றன ... ஒருவகையில் எனக்கு  இன்பம் தான் - என்னை வாட  வைத்த கண்கள் வாடுவதால் ...!!! திருக்குறள் : 1176 + கண்விதுப்பழிதல் + ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்  தாஅம் இதற்பட் டது. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96

கஸல் கவிதை என்றால் என்ன ..?

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் இதுவரை 750 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. நன்றி நன்றி @@@@ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!!

கஸல் கவிதை

இந்த  ஜென்மம் போதும் ... அடுத்த ஜென்மம் வரை ... நீ தந்த வலியை சுமக்க .....!!! பூப்போல் மென்மையாய் .. இருந்தாய் அதுதான் ... வாடியும் விட்டாய் ....!!! எப்படி உயிரே ..? கடும் மழையில் அடிபட்ட  கற் குறுணிகள் போல் ... உன் நினைவுகள் ஒரு  நொடியில் மறைந்து  விட்டன .......!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 734

கஸல் கவிதை

எதிர் பார்ப்பு வெற்றி  பெற்றால் சந்தோசம்  நம் வாழ்வில் பொய்ப்பித்து  விட்டது .....!!! காலை சூரியனாய் இருக்காமல் மாலை .. சூரியனாய் இருக்கிறாய் ....!!! என்  அனைத்து உடமையும்  உனக்கு தான் - காதலை  தரமாடேன் அதை நீ  வைத்திருக்க மாட்டாய் ....!!! + + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 735

நான் கண்ட இறைவன்

தன்னிடம் கொடுப்பதற்கு  ஒன்றும் இல்லாத போதும்  ஒரு சில நொடி நான்  எதைஎண்டாலும் கொடுக்க  வேண்டும் என்று துடிக்கும்  இதயத்துக்குள் இறைவன்  இருக்கிறான் - அவன் .....!!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

என்னை  யாரென்று தெரியாமல் ... உடல் வலியோ உள வலியோ .. வரும் போது எனக்கு உதவிய ... மனிதம் ------------- !!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

மனிதன் வேறு  மனிதம் வேறு பிறருக்காக தன்னை  அர்பணித்து அறநெறியோடு வாழும் மனிதன் -மனிதம்  அந்த மனிதம் ...........!!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

தன்னிடம் கொடுப்பதற்கு  ஒன்றும் இல்லாத போதும்  ஒரு சில நொடி நான்  எதைஎண்டாலும் கொடுக்க  வேண்டும் என்று துடிக்கும்  இதயத்துக்குள் இறைவன்  இருக்கிறான் - அவன் .....!!! + நான் கண்ட இறைவன்  

நான் கண்ட இறைவன்

குழந்தையின் சிரிப்பிலும்  முதுமையின் ஏக்கத்திலும்  இறைவன் இருக்கிறான்  இதை உணர்ந்து முதுமை  மனிதன் எல்லோரையும்  தன் பெற்றோர் என்று அன்பு  காட்டுபவன் ....!!! + நான் கண்ட இறைவன்