இன்புற்ற என் கண்கள் ...

இன்புற்ற என் கண்கள் ...

அன்று
என்னவனை பார்க்கும் போது
இழைந்து குழைந்து
இன்புற்ற என் கண்கள் ...
இன்பத்தின் உச்சத்தை ...
அனுபவித்தன ....!!!

இன்றோ ....
அழுது அழுது தேய்கின்றன ...
சொல்ல முடியாத சோகத்தை
அனுபவிக்கின்றன ..
இறுதி துளி கண்ணீர் ..
வற்றும் வரை அழுகின்றன ...!!!


திருக்குறள் : 1177
+
கண்விதுப்பழிதல்
+
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 97

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்