இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒற்றை வார்த்தையால்

உன் பாத சுவடுகளை ... பூக்களாய் வர்ணித்தேன் .... அதை அள்ளி முகர்ந்தேன் .... அத்தனையும் கனவானது .... ஒற்றை வார்த்தையால் ...!!! நீ நடந்து சென்ற பாதையில் .... பாதத்தை பதிந்து பார்கிறேன் .... முற்களாய் குத்துகின்றன ..... வார்த்தை இதயத்தை தைத்தது ... நினைவுகள் உணர்வுகளை .... தைக்கிறது ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 11

பாடசாலை ... தவணை ஆரம்பிக்கும் போது ... சொல்கிறேன் என்று மீண்டும் .... பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை .... ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!! (கடந்த கவிதையின் இறுதி ) * * * பாடசாலையின் விடுமுறை ,,,, ஜோடிகளுக்கு தண்டனை காலம் .... கைபேசி இல்லை ... முகநூல் இல்லை எதுவுமே இல்லை ....!!! மீண்டும் பாடசாலை ஆரம்பித்தால் ... மட்டுமே பேச முடியும் ,பார்க்க முடியும் .... ஒருநாள் போவது ஒரு ஜென்மம் .... போவதுபோல் நரக வேதனையாய் .... கழிந்துபோகும் ......!!! ஒரு மாதிரி காலம் கடந்தது .... பாடசாலை ஆரம்பமாகியது ..... விடிந்தால் பாடசாலை ஆரம்பம் .... பூவழகன் முகத்தில் பூவின் அழகு .... இரவு முழுவதும் ஏக்கத்துடன் நிறைவு .... கதிரவன் உதித்தான் பூவழகன் மலர்ந்தான் ...!!! பாடசாலை ஆரம்பமாகியது ..... எல்லோரும் வந்துவிட்டார்கள் .... பூவழகியை காணவில்லை .... பூவழகன் வாடிப்போனான் ,,,,, பூவா என் ஆளை காணேல்ல ... என்ற படி வந்தான் வினோத் .... கடுப்பான பூவழகன் எனக்கு ... என்ன தெரியும் என்று சின்ன .... கோபத்தோடு சொன்னான் ..... மச்சி அவள் வந்த்தவுடன் -நீ உதவவும் என்று மீண்டும் .... நினைவூட்டினா

என்னுள் காணாமல் போய்விடுகிறேன்

மழை ... செய்த பாக்கியம் .... உன்னை நனைக்கிறது ... குடை .... செய்த பாக்கியம் ... உன்னை பார்க்கிறது .... நான் சென்ன பாவம் ... செய்தேன் ...? நீ என்னை காணாதது .... போல் செல்லும் நேரமெல்லாம் ... நான் என்னுள் காணாமல் ... போய்விடுகிறேன் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 40

உன்னோடு வர முடியும்

நான் நிஜமாக ..... இல்லையென்றாலும் .... பறவாயில்லை .... நிழலாக இருந்துவிடுகிறேன் .... அப்போதுதான் எப்போதும் ... உன்னோடு வர முடியும் ....!!! உன்னில் ஆயிரம் கண்படுகிறது -என்னால் ... உன் கண்ணை மட்டுமே ... பார்க்க முடியும் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 39

என்னவளே என் கவிதை 38

காதலியின் அழகு...... காதலனுக்கே தெரியும் ... அகத்தின் அழகு முகத்தில் .... தெரிவதுபோல் ....!!! உன்னை .... கோபப்படுத்தினால் தான் ... முறைத்து கூட பார்ப்பாய் ... என்றால் .... உன்னை கோபப்படுத்தியும் பார்க்கபோகிறேன்.....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 38

என்னவளே என் கவிதை 37

இறைவா .... அவள் வரும்போது .... ஒரே ஒருமுறை என்னை ... காற்றாக மாற்றி விடு .... அப்போதென்றாலும்.... ஒருமுறை   அவளை  .... தொட்டு பார்கிறேன் ....!!! மூச்சு காற்றாய் அவளை .... அவஸ்தை படுத்தவேண்டும் ...!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 37

என்னவளே என் கவிதை 36

அழகு ..... உனக்கு பெருமை .... எனக்கு கொடுமை .... காதலுக்கு ஆழமில்லை ... ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் .... தந்துபாரேன் காதலின் ... ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!! இறுதி மூச்சு .... உன்னோடு பேசிக்கொண்டு .... போகவேண்டும் .... உன் நினைத்து போகவேண்டும் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 36

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் ..... ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல்  ...!!! + @@@ + உன்னை மாற என்னை நினை ..... காதலின் தத்துவம் இதுதான் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

பூவும் அழகு அவளும் அழகு .... பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!! + @@@ காதலின் சவக்குழி அவளின் .... சிரிப்பின் கன்னக்குழி .....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

தாயே.. அம்மா... அன்னையே ..!!!

உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு  .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ளைக்கும் தாயாய் இருப்பதால் -தாயே "அன்னையாய் "வணங்குகிறேன் ....!!!

இதயம் இல்லாத மனிதனாய்

அறுந்து இருக்கும் .... இதய நரம்புகளை .... எந்த வைத்தியரும் ... இணைக்கமுடியாது .... என் ஜனனமும் நீ என் மரணமும்  நீ ....!!! பேசிய நீ பேசாமல் இருப்பதுதான் .... என் பிறப்பில் நான் கண்ட ... கடும் தண்டனை .... ஒருவரை பேசாமல் கொல்ல... காதலால் மட்டுமே முடியும் ...!!! இறைவா அடுத்த ஜென்மம் ... ஒன்றிருந்தால் என்னை ... இதயம் இல்லாத மனிதனாய் .... படித்துவிடு ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

உருக்கமான காதல் கவிதைகள்

ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர ... நான் யாரையும் பார்க்க ,,, விருமவில்லை ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்

அதிசயக்குழந்தை -வறுமை

படம்
அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் .... வறுமையை நீக்

கனவாய் கலைந்த காதல் 09

பூவழகன் வகுப்பறையில் .... அவன்தான் வகுப்பு தலைவன் ..... பூவழகி வகுப்பறையில் .... அவள் தான் வகுப்பு தலைவி .... வகுப்பறை போட்டிகள் .... வழமைபோல் இவர்களுக்கும் ... அடிக்கடி சண்டை ஏற்படும் ....!!! காலாண்டு பரீட்சை வந்தது ..... ஒவ்வொருவரும் தமது ஹீரோ ... தன்மையை காட்டவேண்டும் .... பரீட்சை புள்ளியே இதன் கருவி .... பதட்டத்தோடு மண்டபத்தில் .... பூவழகன் இருந்தான்...... ஏதோ உதவி கேட்பதுபோல் .... அருகில் வந்தாள் பூவழகி .....!!! நிச்சயம் பூவழகா நீதான் .... முதல் மாணவனாய் வருவாய் .... அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ... யாரும் பார்க்காத போது மெல்ல ... கையில் கிள்ளிவிட்டு போனாள் ....! அந்த உற்சாகம்சொன்னதுபோல் .... பூவழகன் முதல் மாணவனானான் .... பூவழகி அவள் வகுப்பில் முதல் நிலை ....!!! தவணை விடுமுறை நாள் வந்தது ..... அன்று பூவழகன் எதிர் பாராத ஒரு .... நிகழ்வு நடந்தது ...... பூவழகன் சகவகுப்பு நெருங்கிய .... நண்பன் " வினோத் " பூவழகா .... எனக்கு ஒரு உதவி செய்யணும் .... உன்னால் மட்டும்தான் இது .... முடியும் என்று கூறிய படி .... மௌனமானான் பூவழகனின்.... பதிலுக்கா

கனவாய் கலைந்த காதல் 08

பூவழகி சொன்ன இரு வார்த்தைகள் ..... மௌனம் எனக்கு பிடிசிருக்கு.... பெயரும் பிடித்திருக்கு ..... இதைவிட என்ன வேணும் ...? அப்போ அவளுக்கு என் மீது .... காதல் ஏற்படுகிறதா ...? பூவழகனின் மனதில் ஆயிரம் ... கேள்விகள் .....????????? என் காதாலை  பூவழகி ஏற்பாளா ...? என்னை விட அழகி, பணக்காரி .... படிப்பும் அறிவும் கூட அதிகம் .... ஒன்றை மட்டும் பூவழகி புரிந்து ... கொள்வாள் ஒருநாள் அவளைவிட ... என் காதல் பலமடங்கு உயர்வு .... தனக்குள்ளே பேசிகொண்டான்.... பூவழகன் .....!!! வகுப்பறையில் .... மாணவர் தொகை அதிகரித்தது .... வகுப்பறை இரண்டாகியது .... பூவழகனும் பூவழகியும் வேறு.... இரு வகுப்பாக மாறியது ..... பூவழகனின் கனவுக் காதலை வகுப்பு சுவர் பிரித்து விட்டது ....!!! இப்போதெலாம் .... பூவழகன் பூவழகியை..... பாடசாலை ஆரம்ப நேரம் .... பாடசாலை இடைவேளை நேரம் .... பாடசாலை முடியும் நேரம் .... இடை இடையே இரு வகுப்பை ... சேர்த்து எடுக்கும் போது மட்டுமே .... கண்ணால் பார்ப்பான் மனத்தால் ... காதலிப்பான் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....

மரணிக்கும் காலங்கள்

நீ மௌனமாய் இருக்கும் காலங்கள் நான் ... மரணிக்கும் காலங்கள் ,,,,!!! நீ பேசிய காலம் தான் .... என் பேரின்ப காலம் ,,,,!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மினிக் கவிதைகள்

சண்டை போட்டு பிரிய ... நாம் ஒன்றும் எல்லை .... கோட்டில் இருக்கும் ... எதிரிகள் இல்லை ...!!! சண்டை போடாமல் ... காதலிக்க நாம் ஒன்றும் ... மண் பொம்மையும் இல்லை ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன் நீ  காதலில் தந்த பரிசு  உன்னை நினைக்க ... வைத்ததை விட ... கண்ணீரால் நனைய ... வைத்ததே அதிகம் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

இதயங்கள் வெடித்து சிதறி விடும்

சோகத்தை வெளிக்காட்ட .... கண்ணீர் இல்லாவிடால் ... இதயங்கள்  வெடித்து சிதறி விடும் ....!!! காதல் பிரிவை ... யார் ஏற்படுத்துகிறார்கள் ... என்பது முக்கியமல்ல .... காதலை யார் புரியவில்லை ... என்பதுதான் வேதனை ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

மனதுக்குள் காணும் காட்சி

சிரித்து விட்டு சென்று விட்டாய்.... மற்றவர்கள் என்னை .... பார்த்து சிரிக்க வைத்து ... விடாதே ...!!! உயிராய் காதல் செய் ... என்று சொல்லவில்லை .... உயிரையே வெறுக்கும் ... காதலை செய்து விடாதே ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன் ^^^ பேசிய வார்த்தையை ... காட்டிலும் - மௌனமாய் .... இருப்பதே வலி அதிகம் ...!!! உன்னை பார்த்தபோது ... கண்ட இன்பத்தை விட .... பார்க்காமல் மனதுக்குள் ... காணும் காட்சியே இன்பம் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து காதல் 07

அடுத்த நாள் பாடசாலைக்கு .... பூவழகன் சற்று நேரத்துடன் .... வந்துவிட்டான் - அதிர்ச்சி .... அவளும் வந்துவிட்டாள் .....!!! பூவழகனுக்கு அருகில் தயங்கி ..... தயங்கி வந்தாள் - எல்லோரும் .... என்னோடு பேசினார்கள் ... நீங்க மட்டும் ஏன் பேசல்ல ....? பூவழகன் .... எனக்கு அதிகம் பேசுவது .... பிடிக்காது... பேசவில்லை ..... எனக்கும் அதிகம் பேசுவது .... பிடிக்காது - அதனால் .... உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .... பூவழகன் அதிர்ந்து போனான் ...!!! " உங்களை எனக்கு பிடிசிருக்கு " சொன்ன வார்த்தை உடலில் ... மின்சாரம் பாய்ந்தது போல் ... உறைந்து போனான் பூவழகன் ....!!! உங்க பெயர் என்ன ....? பூவழகன் கேட்டான் ... உங்க பெயரென்னா....? அவள் கேட்டாள் .... என் பெயர் பூவழகன் ...!!! அப்போ என் பெயர் ... எதுவாகவும் இருந்துட்டு போகட்டும் -நீங்க பூவழகி என்று கூப்பிடுங்கள் ... என்று சொன்ன அந்த நேரம் ... அவளது தோழி அவளை .... அழைத்து சென்றுவிடாள் ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 07 வசனக்கவிதை....!!! ^^^

காயப்படுத்தவும் மாட்டேன்

தண்ணீருக்கும் நனைக்குத்தெரியும்... கண்ணீருக்கும் .... நனைக்குத்தெரியும்... காரணங்கள் ஒன்றல்ல ...!!! தீக்கும் எரிக்கதெரியும்.... சூரியனுக்கும் எரிக்கதெரியும்.. ஆறுதல் செய்ய தெரியாது .... கவலை படாதே உன்னை .... காயப்படுத்தவும் மாட்டேன்....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கலங்காத கண்கள் ..

பிரியாத நினைவு.... கலையாத கனவு .... வலிக்காத வலிகள் ... கலங்காத கண்கள் ....!!! தீராத காதல்.... அழியாத அன்பு.... விலகாத  நட்பு.... உயிரான பண்பு.... எல்லாம் உன்னின் ... காண வேண்டும் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

அதிகாலை எழுந்து .... அம்மணமான உடையுடன் .... அம்மாவின் கையை பிடித்தபடி ..... வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,, எல்லாம் சுற்றி திரிந்து .... அக்கா அண்ணா பள்ளி செல்லும் .... போது நானும் போகணும்.... என்று கத்தியழுத அந்த காலம் .... வாழ்வின் " தங்க காலம்  "......!!! பச்சைஅரிசிசோறு வேகும்போது .... அவிந்தது பாதி அவியாதது பாதி .... கஞ்சிக்கு கத்தும் போது .... பொறடாவாரேன் என்று சின்ன .... அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர .... பாதி வாய்க்குள்ளும் மீதி ... வயிற்றில் ஊற்றியும் குடித்த .... அந்த காலம் .... வாழ்வின் " பொற்காலம்  "......!!! பாடசாலையில் சேர்ந்தபோது ..... புத்தகத்தையும் என்னையும் ... தூக்கிகொண்டு சென்ற அம்மா .... சேலையின் தலைப்பை என் தலை .... மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ... வேக வேக வீட்டுக்கு வந்து .... உணவும் ஊட்டிய தாயின் பாசம் .... அந்த காலம் .... வாழ்வின் " வைரம் தந்தகாலம்  "......!!! போட்டி பரீட்சையில் என்னோடு ... கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ... நண்பர்களின் உறுதுணையுடன் .... போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து .... பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி

அதிசயக்குழந்தை - எண்ணம்

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்ப

மின் மினிக் கவிதைகள்

உயிரே .... நீ என்னோடு பேசு .... இல்லை பேசாமல் இரு ... காதலோடு இரு .... அன்பே பேசாவிட்டாலும் .... என் இதயத்தில் இரு ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

என்னவளின் காதல் டயரி 16

உன் ..... இதயத்தில் பெரிய .... காயத்தை ஏற்படுத்தி விட்டேன் .... எப்படி தாங்குவாய் இதயனே,,,,? காலம் எம்மை பிரிகிறது .... காதல் எம்மை கொல்கிறது.... எனக்கு ஒரே ஆசை .... இந்த டயரி எழுதி முடியும் ... நாளில் நானும் ..........? இதயனே -நீ அடிக்கடி பாடும் பாடல் ... " உன்னை நான் பிரிந்தால் .... உனக்கு உன் இறப்பேன் ".... * * * வலிக்குதடா அந்த வரிகள்....!!! ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 16 கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04

ஆதவனுக்கு இரண்டு அண்ணன் இரண்டு அக்கா ஒரு ... தங்கை .......!!! எல்லோருக்கும் சின்ன ... வயது படிக்கும் வயது ..... கூலிக்கு போக முடியாத ..... சின்ன வயது என்றாலும் .... அருகில் உள்ள காட்டுக்கு .... சென்று சுண்டம் கத்தரி .... பறித்து சந்தையில் விற்று .... அதில் வரும் காசில் அரிசி .... அன்றைய வயிற்றை ... நிரப்பும் ....!!! ஆதவனின் நோய் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது - தந்தை சாமி ... ஆதவனுடன் போராடும் சக்தியை.... இழந்து போராடுகிறார் .....!!! அதிர்ச்சி தகவல் ஒன்றை .... சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம் ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை 04 ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 06

பூவழகன் ..... திகைத்து நின்றான் .... தானோ அன்றாடம் சாப்பாடுக்கு .... திண்டாடும் வறுமை இளவரசன் .... அவளோ காரில் வரும் வசதி ... கொண்ட பண  இளவரசி ..... இது நமக்கு சரிவராது ..... ஒதுங்கினான் - பூவழகன்....!!! வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி ..... எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ...... தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் .... எல்லோருக்கும் கை கொடுத்து .... பழகும் திறந்த மனம் - பரந்த மனசு .... பூவழகனோ ஆவலுடன் இருந்தும் .... பேசவில்லை ....!!! பூவழகன் இதயமோ அவள் .... மீது சுற்றி திரிய - கூச்சமும் .... பொறாமையும் மனம் முழுதும் ... ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க .... நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!! எப்போது என்னோடு பேசுவாள் ...? என்ன பேசப்போகிறாள் ....? பூவழகனின் தவறான ஏக்கம் .... புதிய மாணவியுடன் ... பூவழகன் தான் பேசவேண்டும் .... தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ... என்று ஆணழகன் என்ற நினைப்பில் ... காத்திருந்தான் பூவழகன் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 06 வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல்

கனவாய் கலைந்து போன காதல் 05

காலை நேரம் .... பட்டாம் பூச்சிகளும் ... வண்டுகளும் அலையாய் ... வருவதுபோல் பெண் .... பிள்ளைகளும் ஆண் ..... வந்தவண்ணமே .... பாடசாலையில் ....!!! கனவோடு காத்திருக்கும் ... இரவு முழுதும் தூக்கத்தை ... கெடுத்த அந்த பட்டாம் பூச்சி .... சில மணித்தியாலத்தில் .... வந்து விடுவாள் .....!!! காதல் இது தான் ..... முகம் தெரியாது .... பெயர் தெரியாது .... குணம் தெரியாது .... ஆனால் அவளை .... பார்க்கவேண்டும் ... என்று மனம் துடிக்கும் ....! காத்திருந்த அந்த நேரம் ... வந்தது காரில் இருந்து .... இறங்கினால் பூவரசனின் .... கனவு தேவதை ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

காதல் வலி

காதல் வலி ********************** சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை சற்று நேரம் ஊமையாகி என்னை உறையவைப்பாய் முள் வினாடி கம்பி கடிகாரத்தில் ஓடுவதுபோல் உனக்கும் விளங்கும் காதல் வலி....!!!

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை ********************* தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை தனியே உறங்கியதில்லை தனியே வெளியே செல்லவில்லை இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!

காதல் மலர்வு

காதல் மலர்வு *********************** காதல் இறைவன் இணைப்பு ..! விதியும் மதியும் ..... ஏற்படும் பிணைப்பு மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம் இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...! ^ மலர்ந்தது காதல் 

காதல் ஏக்கம்

காதல் ஏக்கம் ****************** மீண்டும் எப்போது சந்திப்போம் மீண்டும் ..? நேற்று நடந்தது விபத்தா ? விளையாட்டா ? தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............! ^ காதல் ஏக்கத்தோடு ....!!

காதல் அரும்பு

காதல் அரும்பு ************************ கூட்டத்தில் நெரிந்து... கொண்டு கூத்தாடி ... போல்நின்றேன் -நீ ... பார்த்த பார்வையில் ... உறைந்து போனேன் -..... அந்த கணமே.... அரும்பியது காதல் ... மொட்டு உன் மீது .... ^ ஊமை காதல் ....!!!

அழகாய் இருகிறாய் ...!!!

நீ சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. அழகாய் இருகிறாய் ...!!! சிறு மழைதுளி தான் முத்தாக மாறும் உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் .......................!!! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..?

ஒருதலைக்காதல் ...!!!

இதயங்கள் கண்ணீரால் கவிதை எழுதினால் .. காதல் தோல்வி....!!! இதயங்கள் சிரித்துக்கொண்டு கவிதை எழுதினால் .. காதல் வெற்றி ....!!! ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ... அழுதுகொண்டும் கவிதை எழுதினால் ஒருதலைக்காதல் ...!!!

உன் உயிர் ...!

காதலும்  விஷம் .... உன்னை .. உடனடியாக கொல்லாது...! மெல்ல இனி சாகும் .. உன் உயிர் ...!

புதிய புதிர் கேள்வி ....?

என் புதிய புதிர் கேள்வி ....? உன்னை நினைக்கும் போது ... கவிதை வருகிறதா ....? கவிதை எழுதும் போது ... உன் நினைவு வருகிறதா ...?

காதலின் ஆழம் அதிகரிக்கும்....!!

நீ என்னை பார்த்து சிரித்த நாட்களில் நான் உன்னை நினைத்து அழுத நாட்கள் .. தான் அதிகம் ..! காதலில் வலியென்பதே இல்லை ... காதலில் வலி என்பது காதலின் நியதி ...!!! காதலில் சுகமும் சோகமும் அதிகரித்தால் தான் .. காதலின் ஆழம்  அதிகரிக்கும்....!!!

ஈழக்கவிதைகள்

எமக்கு தேவையானது இவைதான் ..! வேலியில்லாத வீடு வேண்டும்....! தடையில்லாமல் சுவாசிக்க மூக்கு வேண்டும் ...! பேசுவதற்கு வாய்வேண்டும் ...! இவை எல்லாவற்ரையும் விட ....? என் தேசத்தின் ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...! மண்ணில் பயிர் வளருமா ..? மனிதன் வளர்வானா ,,,? என்று பரிசீலிப்பதற்கு ....!!! கவிப்புயல் இனியவன் ஈழக்கவிதைகள்

காதல் செய் ....!!!

கண்ணில் பட்டு காதல் .... தந்தவளே ..... கண்ணீரோடு இருக்க .... காதல் வேண்டாம் ... கண்ணாய் இருக்க ... காதல் செய் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மௌனமாயிருந்து கொல்வதே

நீ கிடைப்பாயா ....? ஏங்கிய மனம் -இப்போ விட்டு விடுவாயா என்றும் .... ஏங்கிதுடிகிறது ....!!! கிடைத்த பின் காதல் .... கிடைக்க முன் காதல் .... ஏக்கத்தோடு வாழும் .... வாழ்கையே காதல் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வாழ்க்கை ஹைக்கூ

விவாகரத்து உறுதி உறவும் உறுதி பிள்ளைகளை பார்க்கலாம் ^ சமுதாயஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

வீட்டோடு மாப்பிள்ளை

திருமணமாகாத தங்கைகள் அவசர திருமணம் அண்ணன் வீட்டோடு மாப்பிள்ளை ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

வாசல் பூட்டு

யாமிருக்க பயமேன் கந்தன் திருவாசகம் கோயில் வாசல் பூட்டு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

மின்னல்

கரும் முகில் மேகம் புகை படம் எடுத்தது மின்னல் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 02

திருமண வங்கி கடன் பிள்ளை கழுத்தில் தாலி தந்தை கழுத்தில் கயிறு ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

பெற்றோருக்கு பொறுப்பு மகளுக்கு வெறுப்பு முறைமாமன் திருமணம் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

இனியவன் சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை காயம் ஏற்படவில்லை முகநூல் நட்பு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

ஹைக்கூ கவிதை

அடைக்கப்பட்ட அறை செயற்கை சுவாசம் கவலையில் தொட்டி மீன் ^ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் 

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03

ஆதவனின் தந்தை சாமி ... தினக்கூலி அன்று உழைத்தால் ... அன்று உணவு என்ற வாழ்கை ... இதுதான் தொழில் என்று இல்லை .... எந்த வேலை கிடைக்குமோ .... அந்த தொழிலை செய்வார் ....!!! ஆதவனுக்கு அடுத்த ஒரு ... தங்கை அவளுக்கும் இவனுக்கும் .... இரண்டு வயது வேறுபாடுதான் .... தங்கைக்கு திடீரென பெரும் .... நோய் - கடவுளின் சோதனை ... ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!! இருவரையும் ஒரே வைத்தியசாலை .. ஆதவன் தந்தை வைத்தியசாலை ... மேல்மாடியில் ஆதவனையும் .... கீழ் மாடியில் ஆதவனின் தாய் ... தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!! உழைப்புகள் இரண்டும் முடங்கின ... வீட்டில் அடுப்படியில் பூனை ... நிம்மதியாய் தூங்கியது ....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 04

புதிய சினேகிதி நாளை .... வரப்போகிறாள் .... எப்படி இருப்பாளோ ...? எந்தளவு படித்தாளோ...? வெளியூர் என்பதால் .... அழகாகவும் இருப்பாள்.... சுமாரான என்னோடு ... பேசுவாளா .....? இத்தனை மனவோட்டத்துடன் .... பூவழகனின் இரவு .... விடியாமல் இருண்டு ... துடித்துகொண்டிருந்தது ...!!! பொழுது விடிந்தது .... தன்னுடன் இருக்கும் ஆடையை ... இயன்றவரை அழகு படுத்தி .... பழைய துவிசக்கர வண்டியில் .... பாடசாலை நோக்கி சென்றான்  ... பூவழகன்........!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

நினைவு மட்டுமே

திரும்பி பார்க்கிறேன் அலைந்து பார்க்கிறேன் எங்கும் நீ நிற்பதுபோல்.... உணர்கிறேன் ....!!! உன் விழிகள் இன்னும்.... என் விழிகளுக்குள்... ஊடுருவிக்கொண்டே .... இருக்கிறது .....!!! நிஜம் என்று பார்கிறேன் அது வெறும் நினைவு மட்டுமே....!!! ^ காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

காதலால் செய்யுங்கள் ...!!!

அன்பு - காதலின் - பிறப்பு ஆசை -  காதலின் - வெளிப்பாடு இன்பம் - காதலின் - பெறுபேறு ஈர்ப்பு - காதலின் - மூலதனம் உயிர்- காதலின் - இறுதி ஊடல் - காதலின் - நாடகம் எண்ணம் - காதலின் - கனவு ஏளனம் - காதலின் - எதிரி ஒற்றுமை - காதலின் - நேர்மை ஓர்மம் - காதலின் - உறுதி காதலின் - திருமணம் - ஒளடதம் ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!

அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து ---------------- அழகான வர்ணம் பூசிய ..... ஒரு வீட்டின் வெளிப்புற .... சுவரில் அதியக்குழந்தை.... கிறுக்கி விளையாடி.... கொண்டிருந்தான்.......!!! டேய் சுவரை அசிங்க படுத்தாதே.... என்று கொஞ்சம் கோபத்தோடு ... ஆசான் என்ற போர்வையில் .... அவனை அதட்டினேன் ....!!! சிரித்த படியே ..... சொன்னான் - ஆசானே .... நீங்கள் தானே சுவர் இருந்தால் ..... சித்திரம் வரையலாம் என்றீர்கள் .... நான் அதைதானே செய்கிறேன் ...!!! குழந்தாய் ... அந்த சுவர் என்றது .... உடம்பை குறிக்குமடா.... ஆரோக்கியம் இருந்தாலே .... சாதிக்கலாம் என்பதாகும் .....!!! ஆசானே .... உடம்பும் ஒரு கலவைதானே .... அது இருக்கட்டும் ஆசானே .... உணர்வுகளின் ஓசை மொழி .... ஓசையின் பரிமாணம் பாஷை.... பாசையின் அலங்காக வடிவம் .... எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ... அதேயே  செய்தேன் ஆசானே .... கிறுக்கியது தவறு இல்லை .... உங்களுக்கு புதிய சுவர் ... என்பதுதானே கவலை .... மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 08

காதல் - இரு - வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல  பரம்பரை கடத்தியுமல்ல  ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை  நாம் காதலாய் இருக்க வேண்டும்  ^ ----- தவித்து கொண்டிருப்பதும் காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு  ^ --- காதலி பிரிந்தால் சோகம்  காதல் பிரிந்தால் மரணம்  ^ ----- இரக்க காதலுக்கு அருகில் இரு  ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு  ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள்  காதலில் தோல்வியை தழுவுவர்  ^ ----- காதலித்து திருமணம் செய்த பெற்றோர்  பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர்  ^ ---- காதலை காதலியை உயிராகப்பார்  உயிர் பிரியும் வரை காதல் இருக்கும்  ^ ----- உயிர் இல்லாததால் உடலும்  காதல் இல்லாத உயிரும் ஒன்றே  ^ ---- அறிவோடு காதல் செய் வெற்றி  அறிவில்லாதகாதல் தோல்வி  ^ -----

காதல் - இரு - வாசகங்கள் 03

இரக்க காதலுக்கு அருகில் இரு ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள் காதலில் தோல்வியை தழுவுவர் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் - இரு - வாசகங்கள் 02

தவித்து கொண்டிருப்பதும்  காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு ^ --- காதலி பிரிந்தால் சோகம் காதல் பிரிந்தால் மரணம் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் " இரு " வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02

தந்தை தாய் உட்பட .... குடும்ப உறுப்பினர் பத்து .... ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து.... பிறந்த நாளில் இருந்து .... ஒருவாரம் வரை கடும் மழை .... அருகில் இருந்த ஆறு உடைக்கும் ... ஆபத்தான நிலையில் .... ஆற்றுக்கு அருகே ஆதவன் .... குடிசை வீடு .......!!! ஆதவன் தந்தை சாமி .... சாமி ஆறு உடைக்கபோகுது .... சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து .... வெளியே வா என்ற அயலவர் ..... அவசர குரல் கேட்க - ஆதவனை .... ஒரு துணியால் சுற்றிய படி .... வெளியே சாமி குடும்பம் .... வந்த போது  சில நிமிடத்தில்.... அந்த மண் குடிசை இடித்து .... விழுந்தது ......!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன் 

கனவாய் கலைந்து போன காதல் 03

பூவழகன் .... பரீட்சை முடிவுகள் ... அந்தளவுக்கு சிறப்பில்லை .... இதனால் இவனை எல்லோரும் .... விவேகம் அற்றவன் என்றே.... கருதினர் - அது கூட உண்மை ....!!! பூவழகனின்.... ஒரு சிறப்பு இருப்பதை ... அழகாக பாவிப்பது .... இல்லாதவற்றை நினைத்து .... ஏங்குவதில்லை ...... தினமும் அழகாக உடுத்து .... வருவான் ஆனால் அவை .... புதியதல்ல .....!!! இந்த காலத்தில் தான் .... பூவழகன் படிக்க சென்ற .... பாடசாலைக்கு வெளிமாவட்ட .... பெண் ஒருத்தி புதிய மாணவியாய் .... வரப்போகிறாள் அந்த செய்தியுடன்..... இந்த நாள் பாடசாலை நாளும் .... முடிவுக்கு வந்தது ....!!!  ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

தோல்வியால் கவிஞர் ஆகிறோம்

வாழ்க்கை  .... அடைமழை காதல் .... வழிந்தோடும் ... வெள்ளம் .....!!! காற்றை போல் நீ எப்போது வருவாய் ... எங்கே முடிவாய் ....? காதலித்ததால் .... கவிஞராவதில்லை .... காதல் தோல்வியால் .... கவிஞர் ஆகிறோம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 960

கண்மணி நீ .....!!!

என் கண்ணீரில் ... பூத்த கண்மணி .. நீ .....!!! உன் காதலோடு காணாமல் .... போன ஆண்மகன் நான் ....!!! குளம் வற்றியபின் .... கொத்த காத்திருக்கும்... மீன் கொத்தி பறவை ... நீ ......!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 959

தண்டிக்கிறேன்

உன்னை நினைத்து ... நினைத்து -நான் அனாதையாகினேன்....!!! நீ என் கண்ணீர் துளியில் நீச்சல் அடிக்கிறாய் ....!!! உன்னை .... என்னை கேட்காமல் ... காதலித்த  இதயத்தை.... நீ தந்த வலிகளால்... தண்டிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 958

நீ ஆழ்கடல் காதல்

நீ ஆழ்கடல் காதல் .... அதில் தத்தளிக்கும் .... சிறு ஓடம் நான் ....!!! துப்பாக்கியால் .... காயப்படுவதும் .... உன் " கண்" படுவதும் .... ஒன்றுதான் ....!!! நீ கனவாய் இருக்கபார் .... இல்லையேல் தூக்கமாக .... வந்துவிடு ... இல்லையென்றால் ... காதலில் என்னபயன்...?  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 957

கல் எறியாதே

நீ..... காதல் வீட்டில் இருந்து ... கல் எறியாதே .....!!! என்னை காயப்படுத்தி ..... உன்னால் வாழமுடியும் .... என்றால் இன்னும் நல்லா ... காயப்படுத்து ....!!! நான் ..நீ ...காதல் ஒரு முச்சந்தி .... சந்தித்தே ஆகவேண்டும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 956

நட்பென்றால் இதுதான் நண்பா

நட்பென்றால் இதுதான் நண்பா ---------------- நட்பு உலகின் தோற்றத்திலிருந்து ..... படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....! காவியங்கள் காப்பியங்கள் கதைகள் .... இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் .... மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா .... நான் சொல்லிவிடப்போகிறேன் ....? எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!! புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....? புனித பைபிளில் சொல்லாத நட்பா ....? மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....? இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...? நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...? சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை .... விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...? முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....? பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!! மனைவியிடம் எதையும் மறைக்காமல் ..... பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று .... புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் .... " குடும்ப நட்பின் தலைவன் " ....!!! அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் .... இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ... உள்ளத்தால் வேதனை படும் உயிர் .... " உறவு நட்புக்கு தலைவன் ".....!!!

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

வறுமை எல்லோருக்கும் பொதுமை  ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனுக்கு முழு உண்மை .....!!! ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 02

பூவழகன் .... ஒரு கிராமிய இளைஞன் .... நவ நாகரீகம்  தெரியாதவன் .... அதிகம் பேசாதவன் ..... பெரும் படிப்பு என்றுமில்லை .... படிப்பு இல்லையென்றுமில்லை .... ஆனால் வறுமை என்றால் .... நன்கு தெரிந்தவன் ....!!! கிராம புறத்தில் சாதாரண .... படிப்பை முடித்து நகர்புறம் ..... உயர் கல்விக்காய் போகிறான் ..... நகர புறத்தில் இருபால் பாடசாலை ..... பொதுவாகவே பெண்கள் என்றால் .... பூவழகனுக்கு ஒருவித பயம் ..... பாடசாலையோ கலவன் ..... புதிய முகங்கள் நகர்புற பெண்கள் .... பூவழகனை காட்டிலும் உசார் ....!!! முதல் நாள் பாடசாலை வாழ்க்கை ..... கிராம புறத்திலிருந்து நகர்புறம் ..... இடம்மாறிய பதட்டம் ,பயம் .... பூவழகனை சுற்றி நண்பர்கள் .... குசலம் விசாரிப்பதில் மும்மரம் .... பயத்தோடும் அசட்டை துணிவோடும் ... அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன் 

வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில்  .... எல்லாவற்றையும் ... பெற்று .... எல்லாவற்றையும் .... இழக்கிறோம் .....!!! சேர்ந்து வாழ .... காதல் செய்து .... தனித்தனியாய் ... பிரிந்திருக்கிறோம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^ பறவாயில்லை .... காதல் பரிசாய் .... வலிகள் என்றாலும் .... தந்தாய் ....!!! பரிசாய் .... கிடைத்தவற்றை .... பக்குவமாய் .... சுமக்கிறேன் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை  கவிப்புயல் இனியவன்