இடுகைகள்

செப்டம்பர் 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளதடி உன் முகம்.....

மயில் இறகின் மத்தியில்..... காணும் வளையம் போல்..... உள்ளதடி உன் முகம்..... வருடிய காற்றில் அசையும்.... இறகு....... போல் என் மனம் ...!!! ^^^ காதல் மூன்று எழுத்து பிரிவு மூன்று எழுத்து எதை தெரிவு செய்யப்போகிறாய் ...? ^^^ கவிப்புயல் இனியவன் 

காதலித்துப்பார் -நீயும்

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள் பக்குவமானது -உன் முதல் பார்வையில் என் முதல் காதலில் ...!!! --- கண்ணுக்கு தெரியாத காதல் என்பதால் தானோ கண்ணீரை என்னை விட்டு பிரிகிறாய் ....!!! --- காதல் என்னும் நீரோடையில் காகித கப்பலாய் தத்தளிக்கிறேன் கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!! --- காதலித்துப்பார் -நீயும் என்னைப்போல் பிசத்துவாய் ....!!! & கவிப்புயல் இனியவன் 

கவிதையின் வாழ்க்கை ......!!!

காற்றோடு போராடுவது பஞ்சின் வாழ்க்கை .....!!! நினைவோடு போராடுவது காதலின் வாழ்க்கை ....!!! பசியோடு போராடுவது ஏழையின் வாழ்க்கை ....!!! பூனையுடன் போராடுவது எலியின் வாழ்க்கை....!!! கடனோடு போராடுவது விவசாயியின் வாழ்க்கை....!!! சூரியனோடு போராடுவது பூவின் வாழ்க்கை ......!!! சூரிய ஒளியோடு போராடுவது பனித்துளியின் வாழ்க்கை ....!!! தமிழோடு போராடுவது கவிதையின் வாழ்க்கை ......!!! & கவிப்புயல் இனியவன் கவிதை