இடுகைகள்

நவம்பர் 9, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

என் காதல் வலிகளை.... வார்த்தையால் தர .... முடியவில்லை .....!!! வரிகளாய் தருகிறேன் ....!!! நீ அதை கவிதை என்கிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நீ என்னை எத்தனை முறை .... அடிக்கடி பார்த்திருகிறாய்....? நான் எத்தனைமுறை உன்னை ... பார்த்து கண்சிமிடினேன் ....? வானத்து நட்சத்திரங்கள் .... தான் பதில் சொல்லனும்...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

ஏமாற்றம் அதிகம் ....!!!

ஒரு.... தலை காதலில் .... ஏக்கம் அதிகம் .... இரு...... தலை காதலில் .... ஏமாற்றம் அதிகம் ....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

கனவில் காண விரும்பவில்லை

உன்னை கனவில் காண ..... விரும்பவில்லை உயிரே .... கனவுபோல் களைந்து .... விடகூடாது என்பதால் ....!!! நினைவிலும்  வாழ விரும்பவில்லை ..... தூக்கத்தில் நீ தொலைந்து .... விடுவாய் என்பதற்காக ..... உயிரே உன்னை உயிராய் .... காதல் செய்யவே தவிக்கிறேன் .... உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 15 கவிப்புயல் இனியவன்

உணர்வு தெரியும் உயிரே

உன்  வருகைக்காக தினமும் .... காத்திருக்கிறேன் .... நீ வந்தாயா ..? என்னை .... கடந்து சென்றாயா ,,,,,? யார்கண்டது ....? நிச்சயம் என்னை - நீ  கடந்து சென்றிருக்க மாட்டாய் .... கடந்து சென்றிருந்தால் ..... இதயத்தில் ஒரு பாரம் .... ஏற்பட்டிருக்கும் ..... முகம் தெரியாவிட்டால் என்ன ....? மூச்சுகாற்றின் உணர்வு .... தெரியும் உயிரே ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 14 கவிப்புயல் இனியவன்

மூச்சு உள்ளவரை வாழ்வேன்

ஒருமுறை .... காதல் செய் உயிரே .... மறு ஜென்மம் வரை ... உன்னையே காதல் .. செய்வேன் ......!!! என்னை நிழலாக .... ஏற்றுகொள் உன்னையே .... பின்தொடர்ந்து வருவேன் .... என்னை மூச்சாக ஏற்றுக்கொள் .... உன் மூச்சு உள்ளவரை .... வாழ்வேன் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 13 கவிப்புயல் இனியவன்

உயிரை உருக்குகிறேன்.....!!!

என் கவிதையை ... பார்ப்பவர்கள் என்னை .... காதல் பித்தன் என்கிறார்கள் .... சொல்லிவிட்டு போகட்டும் ... காதலை வார்த்தையாய் .... பார்கிறார்கள் - நான் காதலை .... வாழ்கையே பார்கிறேன் ....!!! எல்லோருக்கும் ..... ஒருநாள் நல்ல பதில் உண்டு .... உன் பதிலில் தான் உண்டு .... உயிரே உன்னை நினைத்து .... உயிரை உருக்குகிறேன்.....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 12 கவிப்புயல் இனியவன்

என்னை ஒருமுறை தேடிவா ....!!!

என் மூச்சு காற்றே .... எனக்கு ஒரு உதவி செய் .... என்னவளின் மூச்சோடு .... கலந்து என்னவளின் இதயத்தில் .... என்னை ஒருமுறை தேடிவா ....!!! முகம் தெரியாமல் காதலிக்கிறேன்.... முகவரி தெரியாமல் அலைகிறேன் .... காதல்  எனக்கு தொழிலில்லை .... காதலே எனக்கு வாழ்கை ......!!! நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் .... விரைவில் வருவாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 10 கவிப்புயல் இனியவன்