இடுகைகள்

நவம்பர் 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நண்பனே விழித்தெழு ...!

படம்
  நண்பனே விழித்தெழு ...!  by கவிப்புயல் இனியவன் on Fri Apr 12, 2013 8:18 pm நண்பனே விழித்தெழு ...!  நண்பனே விழித்தெழு ... இதற்கு மேலும் பதுங்க்காதே ... போராட்டத்தை -நீ சந்தித்தால் தான் உன் வெற்றி உறுதி... போர்வைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தால் போடா நீயொரு மனிதனா என்று உலகம் உன்னை உதறித்தள்ளும் .... சிந்திக்காமல் சிதறிக்கொண்டு உன் திறமையை சிதறடிக்கிறாய் நண்பா .. அழுகிறது உன் திறமையை பார்த்து திறனற்றுப்போன உன் திறமைகள்.... நீ அதைக்கண்டு கொள்ளவில்லை . உன்னிடம்இருக்கும் திறமையை அறிந்தவன்-நான் உயிர் நண்பன் சொல்லுகிறேன் வாழ்க்கையை எதிர்த்து போராடு வாழும் வரை தலைநிமிர்ந்து வாழ்ந்திடு ....!

உன்னை அப்படி அழைப்பது

மனிதா ..? நீ ஒரு வீடு கட்டுவதற்காக ...... எங்களின்பல நூறு ....... இருப்பிடங்களை அழிக்கிறாய் நாங்கள் .... பறந்த்திடுவோம் என்ற .... நம்பிக்கைதான்... சண்டையிடுவதற்கு ..... சக்தியில்லாதவர்கள் .....!!! இனத்தை ..... அழிப்பவனை இனவாதி என்றால் ...... நீ பிற இனத்தையல்லவா ... அழிக்கிறாய் ... உன்னை அப்படி அழைப்பது .. தெரியவில்லை ...? & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்

இயற்கை வள கவிதை

மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன் 

ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ...

உனக்கு ...... நல்ல வாழ்க்கை கிடைக்கும் என நீ  கருதினால் .... உன் நிழலைக்கூட நான் நினைக்க மாட்டேன் ..... ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ... நீ திரும்பி ...... வரவேண்டிய நிலைவந்தால் .... * * * * * * * * * * கவலைப்படாமல் வந்துவிடு ....! உன் உடலையோ உறவையோ நான் விரும்பவில்லை .. நான் வாழ்ந்த காதல் ... வாழ்க்கை எனக்கு தேவை ..! & கவிப்புயல் இனியவன் 

குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

மறப்பதற்காக ..... முயற்சிக்கிறேன் .... நீயோ கவிதையாக வந்து விடுகிறாய் ....!!! மதுவை அருந்தி ..... மறக்க நினைக்கிறேன்... நீயோ போதையாக ...... வந்து விடுகிறாய் ... விஷத்தை எடுத்து .... குடிக்க முயற்சித்தேன் ... உயிராக வந்து தடுக்கிறாய் ... எனக்கு நானே ..... கல்லறைக்குழி வெட்டினேன் .. குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

திரும்பி பார்க்கிறேன் ..

எமனின் ..... பாசக்கயிற்றில் தப்பினார் ... மார்க்கண்டேயர் ....!!! எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்... தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!! யாரவது ஒருவர் காதலில் விழாதவர் .. யாரும் இருந்தால் தயவுசெய்து .. தொடர்புகொள்ளுங்கள் ... அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...? நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...? திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!! * * * * * இறந்த உடலொன்று ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

கானா கவிதை

சிரித்துக்கொண்டு ...... விளையாடினேன் .. சிறுவயதில் உள்ளே வெளியே ... இப்போ ஏக்கத்தோடு ....... பார்க்கிறேன் ... என் இதயத்துக்குள் .... உள்ளே - வரப்போகிறாயா ...? வெளியே- செல்லப்போகிறாயா ...? & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

இடது இதய அறையில் இருந்த ... காதலியை காணவில்லை ... வலது இதய அறையில் தனியாக இருந்து .. அழுதுகொண்டிருக்கிறேன் ....!!! காதலியை கண்டுபிடித்து தாருங்கள் .. என்று கேட்கமாட்டேன் ... அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ... அவள்வரும் வரை அறை காலியாகவே ... இருக்கும் என்று சொல்லி விடுங்கள் .... தயவு செய்து காலியாகத்தானே ... இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ... வரவேண்டாம் ...! அது அவளின் அறை மட்டுமே ....! & நகைசுவை கவிதை (கானா கவிதை ) கவிப்புயல் இனியவன் 

என்னை நீ பிரிந்ததால்...

வானத்தில்..... அமாவாசையன்று .. நட்சத்திரங்கள் அகதிகள் வனத்தில் ..... காடுகள் அழிந்தால் மிருகங்கள் அகதிகள் பூக்கள் ...... வாடி விட்டால்... தேனிக்கள் அகதிகள் என் ..... காதல் தேசத்தில்.... என்னை நீ பிரிந்ததால்... நானும் ஓர் அகதி தான்...!!! & கவிப்புயல் இனியவன் 

சமூக சிந்தனை கவிதைகள்

இன்று ...... குடும்பங்களின் நிலைமை.... குடும்பத்துடன் போசுவதே ........ கிடையாது ......!!! இருந்தால் ....... போல் தனியே இருந்து .... சிரிக்கிறார்கள் ... மௌனமாக ஓரக்கண்ணீர் ..... வடிக்கிறார்கள் .........!!! உரத்த குரலில் திடீரென கத்துகிறார்கள் .... உறவினரை கண்டால் .... வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!! இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது .... தொலைக்காட்சி .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்