செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இனிய வரவேற்பு கவிதை -07

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

பறித்துவிட்டாயே....!!!

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை

முயற்சி கவிதை

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை 

இயற்கையின் அற்புதத்தை பார்

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை

குறுங்கவிதை

மனிதனும்
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!

மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை

தமிழ் மொழி கவிதை

" அ " அன்புக்கு அம்மா 
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன் 
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
தமிழ் மொழி கவிதை

தோல்விகள் அறிவை கூட்டும் ....

பிறக்கும்போதே வாழ்கையை ...
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!

அனுபவங்களே
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை  கவிதை

கண்ணீரால் ஈரமாகியதே ....

தண்ணீரால் என் முகம்
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என்
சுவாசம் உன்  நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை 

கைபேசி கவிதை

உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!

உன்னையும் 
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
கைபேசி கவிதை 02

ஹைக்கூ கவிதை 03

தாயே உலகம்
தாயே உணவு
குழந்தை பருவம்

@@@

தாயே உலகம்
கல்வியே உயர்வு
பள்ளி பருவம்

@@@

தாயே கடவுள்
உழைப்பே உலகம்
இளமைப்பருவம்

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ கவிதை 03

நட்பு ஜொலிக்கும் ....!!!

நட்பு ...
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!

இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு 
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை 02

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உண்மைதான் உயரே ....!!!

என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை 02

இனிய வரவேற்பு கவிதைகள்

ரோடு ஒற்றுமையாய் வாழ்...
ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
னம் என்பது உடலில் இல்லை .....
த்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
தியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

காதல் முதியோர் இல்லத்தில் ....

நானும் அனாதைதானே.....
நீ  விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!

இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என் கவிதையில் அதிகம் ....!!!

நீ
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!

என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

முடியவில்லை உயிரே ....!!!

கிடைத்த நேரம் எல்லாம் .....
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!

உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

கண்ணீர் இல்லை ...!!!

காதல் ....
தோற்றபின் பூக்கள் 
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!

மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!

என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;830

வில்லங்கப்படுகிறேன்....!!!

விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!

நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!

என் 
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;829

இதயம் எங்கே .....?

உன்னில்.... 
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?

உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!

காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;828

உடலை பிரித்துவிட்டாய் ....!!!

உன் பாசம் ...
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!

காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!

பூவுக்கு 
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;827

காதல் வலியை சுமக்கிறேன் ....!!!

காதலியோடு .....
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும் 
இருக்கிறது ....!!!

இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!

உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;826

வியாழன், 30 ஜூலை, 2015

ஆமீக சிந்தனை - நெல் மணி

ஆமீக சிந்தனை - நெல் மணி 
-----------------------------------------

ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு 
உதவுகிறது . 

மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.

ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.

+
சிந்தனை உருவாக்கம் 
கே இனியவன் 
வாழ்க வளமுடன்

காதல் வேண்டாம்

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

அவஸ்தைபடுவது நானே ....!!!

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

முகம் வாடி நிற்கிறது

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

தூக்கி எறியமாட்டேன் .....!!!

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன் - மூன்றுவரி கவிதைகள்

விழிப்பாக இருந்தால்  நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

புதன், 29 ஜூலை, 2015

கலாம் அய்யா மண்ணில் விதைக்கப்படுகிறார்

இளைஞர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
உங்கள் சோம்பல் தன்மையை .... 
புதைத்து விடுவதுதான் .....!!! 


மாணவர்களே ......!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்மா சாந்தியடைய .... 
நீங்கள் செய்யவேண்டியது .... 
ஒவொருவரும் விஞ்ஞானியாக .... 
சமூக சேகவனான மாறுவேன் .... 
திடசந்தர்ப்பம் எடுப்பதுதான் .....!!! 


அரசியல் வாதிகளே ....!!! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் ..... 
அவரின் ஆத்தமா சாந்தியடைய .... 
அவரின் எண்ணங்களை உங்கள் .... 
எண்ணங்களாக மாற்றிவிடுவதே.....!!! 


உலக தாய்மார்களே .....! 
இன்று கலாம் அய்யா .... 
மண்ணில் விதைக்கப்படுகிறார் .... 
அந்த நிமிடத்தில் பிறக்கும் .... 
குழந்தைகள் ஒவ்வொருவரும் ... 
கலாமாக பிறக்கவேண்டும் .... 
பிராத்தனை செய்யுங்கள் .....!!!

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...