வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கண்ணே பேசிப்பழகு

கண்ணே பேசிப்பழகு
மௌனம் அழகுதான்
காதலுக்கு அது உயிர்
கொல்லி -எத்தனை
முயற்சிகள் உனக்காக
நீயும் எனக்காக  .....!!!

நண்பர்கள் மத்தியில்
நான் நிற்கையில்
ஓரக்கண்ணல் பார்த்தாய்
மெல்லிய சிரிப்பு சிரித்தாய்
அன்றே செத்தவன் நான் ...!!!

உனக்கு பிடித்தது அறிந்தேன்
உனக்காக நான்
விரும்பாத்தை-எல்லாம்
செய்கிறேன் .
நண்பர்கள் மத்தியில் கிண்டல்
பெற்றோர் மத்தியில் திட்டு
அத்தனையும் உனக்காக
செய்கிறேன் ...!!!

தோழியிடம் என்னை பிடித்திருக்கு
என்று சொன்ன நீ
ஏன் என்னிடம் சொல்லுகிறாயில்லை
கண்ணே பேசிப்பழகு -என்
உயிர் போகிறது .....!!!                        

ஒரு நாள் காதலா ....?

என்ன நடந்தது உனக்கு
நேற்று சிரித்தாய்
இன்று முறைக்கிறாய்
ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?

கண்ணிலே காந்தத்தையும் ...

கண்ணிலே காந்தத்தையும் ...
கண்ணிமையிலே....
குண்டூசியையும் .....
வைத்திருந்தவளே ...!!!

காந்த கண்ணால் கவர்ந்து
கண்ணிமைத்தபோது
குண்டூசியால்
குற்றி விட்டாய் ...!!!