இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று  நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன் 

தொழிலாளர் தினக் கவிதை

தொழிலாளர்  தினக் கவிதை ^^^^^ உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....! தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....! நோக்கம் நிறைவேறும்வரை ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......! @ கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................காதல்........................!!! காதல் ஒரு வழி பாதை ...... நினைக்க தெரியும் மறக்க தெரியாது....! ----- உன்னோடு வாழவும் துடிக்கிறேன்.... மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....! ----- உதடு சிரிக்கிறது ... இதயமோ அழுகிறது ......! ----- காற்றிருந்தால்  பட்டம் பறக்கும் காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....! ----- காதலில் நினைவுகள் முற்கள் கனவுகள் வாசனைமலர்கள் ....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

மழை

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................மழை.........................!!! வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை வானம் கதறி அழுதாள் - அடைமழை |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் ||||||| விவசாயியின் நண்பன் - மழை வியாபாரியின் எதிரி -மழை |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழையில் நனைந்ததும் மறையாது IIIIII இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

நான் என்ன செய்வது....?

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017 

சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள் ........கனவாகும் ........நீ ........காட்சியானாய் ........நான் !........கனவில் வாழ்கிறேன் ........நீ ........கனவாய் போனல் ........கண்ணீராய் .!.......மாறிவிடுவேன் ........கண்ணுக்குள் ........விழுந்த நீ ........காட்சியாவவே. ........இருந்துவிடு !........தூசியாக மாறிவிடாதே .........உன்னை .........சரிபாதியாக .........பார்க்கிறேன் .........நீ என்னை !.........சரிபாதியாக்கி விடாதே கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08

காதல் சோகத்திலும் சுகம் தரும்

ஒரு நாளில் ஒரு ....... வார்த்தையாவது பேசிவிடு........ இல்லையேல் என்னை ........ கொன்ற பாவத்துக்கு...... ஆளாகிவிடுவாய்.....................! நீ பேசாமல் இருக்கும்..... ஒவ்வொரு நொடியும்..... நான் பேச்சை இழக்கும்..... நொடிகள் என்பதை..... மறந்துவிடாதே.........! ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 29 .04.2017

காதலில் தோற்ற இதயம்.....

காதலில் தோற்ற இதயம்..... மெழுகுதிரி போன்றது...... பிறர் முன்னால் சிரித்து..... தன்னை வருத்தும்.......! இதோ தெருவில் வாடிக்கிடக்கிறது...... நீ தூக்கியெறிந்த பூச்செண்டு...... பாவம் அதை நான் பறித்து.... உனக்கு தந்து அதன் இன்பதை..... பிரித்துவிட்டேன்..........! இரண்டு மலைகளுக்கு..... நடுவே வடியும் நீர்போல்..... உன் நினைவுக்கும் கனவுக்கும்..... நடுவில் நான் அழுகிறேன்.......! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 198

தரிசனத்துக்காககாத்திருக்கிறேன்

படம்
உன்னை..... ஓவியமாய் வரைய..... துரிகையை எடுக்கிறேன்.... வெட்கப்படுகிறது.... இளமை அழகைபார்த்து....! நீ கருவறையில் இருக்கும்.... தெய்வம்- திரைசேலையால்.... மறைக்கப்பட்டுருக்கிறாய்..... தரிசனத்துக்காக...... காத்திருக்கிறேன்............! நீ ஆடையை உலத்த..... கொடியில் போட்டிருப்பது.... உன் ஆடைகள் அல்ல..... மேனியின் மெல்லிய தோல்....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

அழகின் மந்திரவாதி நீ.....!

படம்
காதல் ..... ஒரு ஆள் கொல்லி விஷம்..... தலைக்கு ஏறினால்...... இறங்காது................! நீ..... மொட்டு அருகில் வந்தால்.... பூக்களாய் மலர்கிறது...... காய்கள் அருகே வந்தால்...... கனிகளாய் மாறுகிறது..... அழகின் மந்திரவாதி நீ.....! பிறர் வெளிச்சுவாசம்..... மற்றவர்களுக்கு நஞ்சு..... உன் வெளிச்சுவாசம்..... எனக்கு அமிர்தம்......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

உன்னை எப்போது பார்தேனோ...... அப்போதே என் இதய..... நரம்புகள் அறுந்து விட்டது.....! முள் மேல் விழுந்த.... சேலையாய் கிழிகிறேன்.... நீயோ கண்ணடியின்..... விம்பம் போல் வலிக்காமல்..... பார்த்தும் பார்க்காதது போல்..... விலகி செல்கிறாய்.........! நீ நடந்து வரும் பாதையில்.... மிதிபட்ட புல் எல்லாம்..... பூக்களாய் மலர்கிறது..........! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

இரண்டு சிகரங்கள்..... அருகருகே இருப்பது..... பொருந்துவதமற்றது..... பொருந்துகிறது....... உன் இமை அழகில்..... மட்டும் தானே அன்பே....! இப்போதுதான் புரிந்தது...... உதட்டை ஏன் இதழ்...... என்கிறார்கள்........? நீ பேசும் போது........ ரோஜாவின் ஒவ்வொரு..... இதழ்களும் விரிவதுபோல்....! நீ அசைந்து அசைந்து வருகிறாய் ..... இசைந்து இசைந்து வருகிறது...... கவிதை........... உன் ஒரு சொல் உனக்கு...... நீர் துளி எனக்கு கவிதையின்..... சமுத்திரம்...................! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன்  காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் - ஈழதமிழ்

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்..... கண்ணை மூடிக்கொண்டும்..... கனவு காணும் அபூர்வ சக்தி..... காதலருக்கே உண்டு...............! அணைத்து கொண்டு இருப்பது....... காதலுக்கு இன்பம்.......... நினைத்து கொண்டிருப்பது....... காதலுக்கு சொர்க்கம்......! & சின்ன சின்ன கவிதைகள் 13 கவிப்புயல் இனியவன்

இதயம் மட்டுமே அறியும்....!

உன் ...... கண் சொல்கிறது..... என் மேல் உள்ள காதலை..... நீ முகம் திருப்பினால்.......... மறைந்து விடாது காதல்.....! நீ கண் இமைக்கும் நேரத்தில்.... நான் காணாமல் போய்....... விடுவேனோ என்பதற்காய்...... நீ படும் வேதனையை என்...... இதயம் மட்டுமே அறியும்....! & சின்ன சின்ன கவிதைகள் 12 கவிப்புயல் இனியவன்

காதல் காவியங்களே.........!

காதலின் சின்னம்...... கல்லறையாக இருக்கிறது..... கல்லறைக்கு பின்னரும்............ காலத்தால்  நிலைத்திருப்பதால்......! நிலையில்லாத உயிருக்கு....... நிலையான இடத்தை கொடுப்பது..... காதல் காவியங்களே.........! & சின்ன சின்ன கவிதைகள் 11 கவிப்புயல் இனியவன்

காதல் தராசு ......

உன் ........ காதலுக்கு நன்றி........... என்னை விட்டு பிரிந்தாலும்............. நீ தந்த காதல் என்னோடு..... இருப்பதால் தான் நான்....... உயிரோடு இருகிறேன்.............! ஒரே ஒரு மாற்றம் ........ பனித்துளிபோல் சில்...... என்றிருந்த என் இதயத்தை..... பாலவனமாக்கிவிட்டாய்........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 196 $ உடலால் நீ என்னை..... பிரிந்தாலும்....... இதயத்தில் பத்திரமாய்...... இருகிறாய்........... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! காதலில் சேர்ந்து..... வாழ்பவர்களும் ...... பிரிந்து வாழ்பவர்களும்..... சமமாய் இருப்பதால்.... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 197

அதிசயக்குழந்தை - அன்பு

அதிசயக்குழந்தை - அன்பு ------------------- அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! என்னடா உளருகிறாய்.....? என்று கேட்டேன் அவனிடம்.... ஆசான் எனும் தோறணையில்...... ஆமாம் ஆசானே எதுவும்..... அளவோடு இருக்கனும்..... இல்லையேல் அதுவே நஞ்சு.........! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........ பிள்ளைகள் மீது அதிக பாசம்..... எதிர்பார்பை கூட்டும்...... நிறைவேறாதபோது குடும்ப..... சண்டையாக மாறுகிறது........! துணைமீது அதிக காதல்...... கோழையாக்கிவிடுகிறது...... சுயசிந்தனையை இழக்க வைக்கிறது...... தன்மானத்தை இழக்கவைக்கிறது....... தனிமையாகினால் முதுமையை..... துயரமடைய வைக்கிறது.................! சமூக அக்கறை அதிகமானால்........ அதிக பதவி ஆசை வருகிறது...... பதவி வரும் போது எல்லவற்றையும்.... கண் மறைக்கிறது........! அப்போ எதையும் விரும்ப கூடாது என்கிறாயா.......? இல்லை இல்லை ஆசானே....... எல்லவற்றையும் விரும்புங்கள்..... எல்லாம் உங்களால் தான் ...... நடைபெறுகிறது என்பதை மட்டும்....

கவலைபடுகிறாய்...

முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....! & சின்ன சின்ன கவிதைகள் 10 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...! & சின்ன சின்ன கவிதைகள் 09 கவிப்புயல் இனியவன்

பேச வைத்துவிட்டாய் .....!

போடா..... உனக்கு....... காதலிக்க கூட  .. தெரியாது என்று ... நண்பர்கள்........ இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....! & சின்ன சின்ன கவிதைகள் 08 கவிப்புயல் இனியவன்

இன்பம் தந்த காதலை ....!

இழந்தது ...... கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம் தந்த காதலை ....! & சின்ன சின்ன கவிதைகள் 07 கவிப்புயல் இனியவன்

என்னவளும் தான் ....!

தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலோடு இருக்கும்.... என்னவளும் தான் ....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!

பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன் & சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சின்ன சின்ன கவிதைகள்

என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடவேமாட்டாய் ...! &&& உன் .... வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை..... பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு .......! &&& ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு..... முதுமையில் தெரியும்..... ஒவ்வொரு தோல் சுருக்கமும்.... ஒவ்வொரு கடின தியாகத்தை..... எடுத்து காட்டும்.......! எனக்கு நினைவுள்ளவரை..... கோயிலில் அவர் சுவாமி..... சுமந்ததே இல்லை ஆனால்..... என்னை தோளில் சுமக்காத..... நாளே இல்லை.........................! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்..... அழுகை மூலம் குழந்தையின்..... நோயையும் பசியையும்..... கண்டறியும் ஞானி தாய்......! பொதுவாக......... வெட்டினால் உறவு பிரியும்.... தொப்பில் கொடியை வெட்டிய..... பின்னரே உறவு பெருகும்.......! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில் காயம் வந்தாலும் காயத்தின் வலி காலத்தால் மறையாமல் இருக்க காரணம் காதலை காதலித்தது தான் ....! நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 195

என்னை காதலிக்கிறாய் .........!

நீ ............. என்னை தவிர ............ என் நண்பர்களுடன் ................ பேசுகிறாய்................ அப்படிஎன்றால் - நீ ..... என்னை காதலிக்கிறாய் .........! உன்னோடு வாழவேண்டும் ....... என்பதல்ல காதல்........... உனக்காவவே வாழுவதுதான்........... காதல்............................! நீ வாசிப்பதற்காக .......... கவிதையை பார்க்கிறாய்....... உன்னை சுவாசிப்பதால் ...... கவிதை வருகிறது.......................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 194

அன்றே இறந்துவிட்டேன்..........!

என் இதயத்தை பந்தை..... விளையாடுவதுபோல்...... எறிந்து விளையாடுகிறாய்..... கவலைபடவில்லை..... தொலைத்து விடுவாயோ...... என்று பயப்பிடுகிறேன்........! உயிரே நீ என்னை கண்டுவிட்டு காணாததுபோல் சென்றாயே..... அன்றே இறந்துவிட்டேன்..........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 193

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்....... உயிராற்றளுக்கும் நலம்...... உன் மெளன யுத்தம் என் ....... உடலை அழிக்கிறது............. உயிரையும் கொல்கிறது...... ! உன்னை மறக்கும் எண்ணம் எந்த நொடியிலும் இல்லை உன்னை மறந்தால் அந்த நொடி  முதல் நான் மனிதன் இல்லை .........................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 192