இடுகைகள்

செப்டம்பர் 21, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீன சிந்தனை கவிதை

ஜாவா என்பார்கள் .... மாயா என்பார்கள் .... கணனியில் காலத்துக்கு .... காலம் மாறிக்கொண்டே .... போகிறது அதன் குணம் ....!!! காதலில் ..... இன்று ஒன்று நாளை ஓன்று ..... என்று வாழ்பவன் .... காதலிக்கவில்லை ...... காதலை தவறாக புரிந்தவன் ....!!! காதல் என்பது .... வன்பொருள் கணனிபகுதி ..... நினைவுகளும் கனவுகளும் .... மென் பொருள் கணனி பகுதி ....!!! + கே இனியவன்  நவீன சிந்தனை கவிதை  தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

ஈமெயில் வந்தவுடன் ...... தந்தி செயலிழந்தது...... நம் காதலும் அதேபோல் ..... வசதியான இடம் வந்தது ..... நான் செயழிலந்தேன் ....!!! என்னதான் ஈமெயில் .... அனுப்பினாலும் .... கடிதம்.. தந்தி எழுதும் ... சுகம் ஈமெயிலில் .... வரவே வராது .....!!! நீயும் உணர்வாய் ..... என்ன வசதி வந்தாலும் ..... என் முதல் காதல் .... மூச்சுவரை இருக்கும் ....!!! + கே இனியவன்  நவீன சிந்தனை கவிதை  தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

நீ மௌனமாய் இரு

அதிசயம் ... உன் பட்டமர இதயத்தில் ..... நான் இன்னும் இருக்கிறேன் ....!!! எனக்கு வேலை ..... உன்னிடம் காதலை .... எதிர்பார்க்கும் .... கவிதைக்காரன் .....!!! என்னை  மயானமாக்கி விட்டு .... நீ மௌனமாய் இரு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 860

நான் காடுசென்று விடுவேன்

மறதியை மறந்து விட்டேன் .... உன்னை மறக்கமுடியாமல் .... தவிக்கிறேன் .....!!! நான்  வெறும் கூடு ...... நீ  எனக்காக மூச்சு விடு .... இல்லையேல் நான் .... காடுசென்று விடுவேன் .....!!! காதல் ஒரு சுதந்திரம் .... எப்போதும் காதலிக்கலாம் .... அர்த்தமற்ற சுதந்திரத்தால் ..... சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 859

என்வாழ்வும் அமாவாசை ....!!!

நீ  எனாக்காக .... பிறந்தவள் ..... நான்  உனக்காக .... இறப்பவன் .....!!! எனக்கு .... நன்றாக புரிகிறது .... நம் காதல் தோற்கும் .... உன்னிடம் காதல் .... காணாமல் போய்விட்டதே ....!!! நிலா வராத நாள் .... அமாவாசை ..... உன்னில் காதல் வராத ..... என்வாழ்வும் அமாவாசை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 858

காதலை எப்போதுபுரிவேனோ

நீ  சிலநேரங்களில் .... ஆச்சரிய குறி.... சிலநேரங்களில் .... முற்றுபுள்ளி.....!!! உன்னை புரியவே .... ஆயுள் போதாது .... உன் காதலை .... எப்போதுதான் .... புரிவேனோ...? விட்டு கொடுத்தால் .... தோல்விவரும் .... நீ என்னை விட்டு சென்ற .... நொடியில் உணர்ந்தேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 857

காதல் இல்லாத இடத்தில் வாழ்வோம்

நான்  எழுதும் கவிதைக்கும் ..... உனக்கு ஒரு வேறுபாடும் .... இருப்பத்தில்லை ..... சோகம்தான் .....!!! அழகில்  தொடங்கிய காதல்  அழுகையில் முடிந்தது ..... என் இதயம் இப்போ .... துடிப்பதெல்லாம் ..... கண்ணீர் விடத்தான் ......!!! வா உயிரே ..... காதல் இல்லாத இடத்தில் .... வாழ்வோம் ..... உனக்கு அந்த சூழல் ..... இன்பமாய் இருக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 856