இடுகைகள்

டிசம்பர் 7, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் நினைவால்துடிக்கிறேன்........!

காற்றுக்கு வாசனை இல்லை....  நீ வரும் போது..... உணர்கிறேன் காற்றில்..... வாசனையை ....! நீருக்கு ....... நிறம் இல்லை.... நீ ........ நீராடும் போது..... பார்கிறேன் அதன் நிறத்தை .....! ஒரு...... முறை என்னை..... பார்த்துவிடு.... ஒரு....... வார்த்தை என்னோடு.... பேசிவிடு - உயிரே உன் நினைவால்..... துடிக்கிறேன்........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள்

இதயம் கவரும் கவிதைகள்

தாயே உன்...... நினைவு போதெல்லாம் இதயம் துடிக்கவில்லை..... இதயம் வெடிக்கிறது...... நரம்புகள் இரத்தத்தை..... கடத்தவில்லை ...... உன்  உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....! இறைவா ........! படைப்பது உன்..... தொழில் என்றால் ....... எனக்காக  படைப்பை...... செய்தருளிவீராக....... மீண்டும் என் தாயை...... எனக்கு தாயாக படைத்தருளுவீராக.....! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன்