இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவனே என் கள்வனே 07

உன் வரவுக்காக ஏங்கி..... கண் வழியே பாதை...... அமைத்து  தெருவையே....... அமைத்து விட்டேன்.........!!! நீயோ...... வருவதாய் இல்லை......... என் தூரபார்வையில்..... கோளாறு வந்தால் - நீ தான் அதற்கு காரணம்.... வைத்தியரிடம் முறையிடுவேன்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 07 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 06

எத்தனை காலம்..... உன் நினைவுகளை..... சுமந்து கொண்டு வாழ்வது,.....? அதற்குஎல்லை இல்லையா...? வருகிறாய் பார்கிறாய்...... பேச துடிக்கிறாய்...... போசாமல் போய் விடுகிறாய்..... மது கோப்பைக்குள்........ விழுந்த புழுவாய் துடிகிறேன்.... என்னவனே என் மன்னவனே.....!!! ^^^ என்னவனே என் கள்வனே 06 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

மனம் ஆசைபடுகிறது......!!!

என் ....... குயில் குரலால்..... உன்னை அழைத்து...... கழுகு கண்ணால் ..... உன்னை கொன்று..... துடிக்க விடனும் என்று .... மனம் ஆசைபடுகிறது......!!! பாவம் - நீ நடைபிணமாய் ........... வாழ்ந்துவிடுவாய்...... என்பதற்காக உன்னை.... விட்டு விடுகிறேன்........ என்னவனே...........................!!! ^^^ என்னவனே என் கள்வனே 05 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 04

உன் முகம் பார்க்க..... ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்... கண்ணீர் வர வழைத்தவனே..... உனக்கு அது சிறு துளி..... எனக்கு அது இதயத்தின்..... மொத்த வலி...................!!! வேறு வழியில்லாமல்..... இமைகளை மூடுகிறேன்....... என் ஏக்கத்தை புரிந்து..... கனவிலேனும் வருவாயா...? ^^^ என்னவனே என் கள்வனே 04 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன் 

புதைத்துவிட்டேன் உன்னில்....!!!

மழை பெய்யும் போது..... இரு கரத்தை குவித்து...... உள்ளங்கையில் மழை..... துளியை ஏந்தும்போது.... இதயத்தில் ஒரு இன்பம்.... தோன்றுமே அதேபோல்..... உன்னை யாரென்று..... தெரியாமல் இருந்த நொடியில்..... நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!! என்னவனே என்னை..... புதைத்துவிட்டேன் உன்னில்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 03 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது ---------------------------------------------- வியப்பாக இருக்கிறதா....? அதிர்ச்சியாக இருக்கிறதா.....? இதுதான் உண்மை.................... இனி ஒரு மெரினா புரட்சி....... தோன்றவே தோன்றாது..............!!! மெரினா போராட்டம் ஒரு....... இயற்கை இயக்கத்தால்...... தோன்றியது........................... தலைவன் இல்லை....... தோற்றியவனும் இல்லை..... முடித்து வைத்தவனும் இல்லை....... அது இயற்கை இயக்கத்தால்..... தோன்றிய அற்புத போராட்டம்....!!! எப்படி இணந்தார்கள்.....? யார் இணைத்தார்கள்....... எப்படி இப்படி ஒரு மாபெரும்..... சக்தி திரண்டது..........? எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு....... எத்தனை சமூக ஊடகம்..... பங்களிப்பு செய்தாலும் ...... அதற்கும் மேலாக ஒரு சக்தி..... இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!! இன்று அதே ஊடகங்கள் இருகின்றன..... நாளையும் இருக்கத்தான் போகிறது....... எந்த காலத்திலும் மெரினாபோல்......... ஒரு போராட்டம் இனி எப்போதும்.... தோன்ற போவதுமில்லை....... தோற்றிவிகக்வும் முடியாது...... மெரினா போராட்டம் ஒரு...... இயற்கை இயக்கத்தால

என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!

இலைகள் அற்ற மரகிளையில்....... ஒரு வண்ணாத்தி பூச்சியை..... கற்பனை செய்து பார்...... எத்தனை அழகோ அழகு..... அப்படிதானடா - நீ வெறுமை கொண்ட என்..... இதயத்தில் வந்தமர்ந்து...... என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 02 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே

என்னை சுற்றி ஈசல் பறக்கிறது......... மெல்லியதாய்மின்னல்...... சின்னதாய் ஒரு இடி...... மழை வரப்போகிறது....... என்னவனே உன்னில்..... இருந்து காதல் மழை..... பொழியப்போகிறது....... வனாந்தரமாய் இருந்த..... இதயத்தை சோலையாக்க..... வந்துவிடடா..............!!! ^^^ என்னவனே என் கள்வனே 01 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

இருவரி திருவரி கவிதை

சிரித்தது நீ ... துன்பப்படுவது நான் ...!!! @ கவிதை ஓடத்துக்கு .... நீ தான் துடுப்பு...........!!! @ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!! @ பார்த்தாலே ஆயிரம் கவிதை.... சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!! @ நடை பழக்கினாள் தாய் ...... உடை பழக்கினாய் ....நீ....!!! @ என் மனதின் உன் பாசம் .. என் மரணம் வரை பேசும்.....!!! @ கனவிலே எல்லா ...... காதலியும் உலக அழகி........!!! @ பார்ப்பவர் கண்ணுக்கு நீ ...... தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!! @ இதயத்தில் இருப்பவளே ....... துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!! @ கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!! @ எஸ் ம் எஸ் கவிதைகள் இருவரி திருவரி கவிதை & கவிப்புயல் இனியவன்

எல்லாமே காதல் காதல்

காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல்  ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன் 

எல்லாமே காதல் காதல்

காதல் இருக்கும் ............ வரைதான் வாழ்க்கை .... இருக்கும் ...........!!! துடிக்காத இதயமும் ..... காதல் இல்லாத இதயமும்.... ஒன்றுதான்........!!! காதல்  ..... அடிப்படை உணர்வு .... தயங்காமல் காதல் செய் ......!!! காதல் .... ஒரு சொல் அல்ல .... உலகின் அனைத்து ..... மொழியின் அகராதி.......!!! காதல் செய் .... உள்ளம் மாசு படாது .... ஒளி வீசும்..........................!!! தனக்கான ........... காதலை தெரிவு செய்பவன் ... அதிஸ்ரசாலி .................!!! இறைவனின்........... பெரிய கொடை காதல் .... பெரிய கொலையும் காதல் ..........!!! மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!! திருடிய பின்னும் ..... சந்தோசமாக இருப்பவர்கள்.... காதலர்............!!! காதலை தவிர ............ கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்.......... உள்ளம் காதலால் ............ பாதிக்கப்பட்டுள்ளது...!!! & உங்கள் காதல் கவிஞர் கவிப்புயல் இனியவன் 

காதலில் தோற்கிறார்கள் ...!!!

உன் வீட்டுக்கு வந்த.... எனக்கு - நீ .......... கடித்து வைத்த லட்டை......... எடுத்து சாப்பிட்டேன் ..... தூரத்தில் நின்று துள்ளி.... குதித்த நிகழ்வை...... எப்படி மறப்பேன் அன்பே ....!!! நம் முதல் சந்திப்பில்..... மௌனமாய் நீ இருந்தாய்..... அதுதான் காதலில் மொழி..... என்பதை இப்போதுதான்...... புரிந்துகொண்டேன் ....!!! காதலில் மௌனத்தை பலவீனமென  நினைப்பவர்கள் காதலில் தோற்கிறார்கள் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை மனதை சிறையில் .....

சுகத்தை பகிர...... காதல் வேண்டாம்..... சுதந்திரமாக காதல்..... செய்யகாதல் வேண்டும் ....!!! எழுதிய ......... கவிதை இடையில் நின்று...... விட்டது ...!!! மீண்டும் உயிர் கொடுத்தது நீ தந்த வலியால் வந்த..... வரிகள்.. ...!!! உன்னை மனதை சிறையில் ..... வைத்த குற்றத்துக்காக ..... பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் ..... கவிதை வாயிலாக ........!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 191

கவிதை எழுதும்போது....

கவிதை எழுதும்போது.... மனதில் ஒரு முடிவு.... எடுப்பேன் -இந்த கவிதையில்... உன்னை பற்றி எழுதவே.... கூடாது என்று -எப்படியும்.... கடைசி வரியில்....... வந்துவிடுகிறாய் ...!!! & கவிப்புயல் இனியவன் 

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த திருமணம் ------------------------------------- சிறுவயதில் பேசிவைத்த பெருவயது திருமணம் பருவவயதுவரை -பள்ளி தோழிகளின் கிண்டலும் கேலியும் சின்ன இன்பத்தை தந்ததது மறுப்பதத்கில்லை கல்லூரி வயதில் கண்ணில் பட்டான் -காளை ஒருவன் -கண்மூடி திறக்கமுன் காதல் விதை வந்துவிட்டதும் உண்மைதான் -என்றாலும் உறவுகளின் எதிர்பார்ப்பு பெற்றவர்களின் நம்பிக்கை காதல் விதைக்கு சுடுநீர் ஊற்றி விட்டேன் .....!!! திருமணம் முடிந்தது குழந்தைகள் பிறந்தன இன்பமான குடும்பவாழ்க்கை அமைதியாக ஓடுகிறது .... என் பிள்ளைக்கு முறைமாமன் எனக்குப்போல் முறைகேட்டு சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை ஆரம்பித்தார் - வைத்து விட்டேன் முற்றுப்புள்ளி .....!!! பெற்றோரே உறவுகளே ... சிறுவயதில் பேசிவைக்கும் திருமண முறையை தயவு செய்து நிறுத்திவைப்போம் ...!!! உறவுகள் பிரியக்கூடாது உடமைகள் பிரியக்கூடாது என்பதற்காக உறவுத்திருமணம் வேண்டாம் -அது உளத்துக்கும் உடலுக்கும் கேடு சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!! ********************************************************** (மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளி

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ... என்னவள் அருகில்... வரும் போது நீங்கள்...... சுவாசிக்க கூடாது..... அவள் வெளி சுவாசம் கூட.... எனக்கு தான் சொந்தம் ,,,,!!! ஏய் பூக்களே.... உங்களுக்கு பூக்கத்தான்.... தெரியுமோ ...? சிரிக்கத்தெரியாதோ ...? என்னவள் உங்கள் முன் சிரிக்கும் போது சிரித்து பழகுங்கள் ......!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் மூச்சு காற்று .....

காற்று உருவம் .... இல்லை -ஆனால்.... உன் மூச்சு உருவம் ... தெரிகிறது ....!!! நீ வரும் முன்னரே ...... உன் மூச்சு காற்று ..... என்னிடம் வருகிறது ....!!! கடல் தொடும்..... தொடுவானம் போல்...... நீ இருக்கிறாய் -நான்....... உன்னை தொடும் எண்ணத்தில் மன.... கப்பலில் அலைகிறேன் ....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ.தான் வரவேண்டும் ...!!!

கண்ணீர் ..... விடும் கண்களுக்கு..... தெரிகிறது காதலின் வலி...... காதல் ..... கொண்ட உனக்கு..... என் தெரியவில்லை... காதலின் வலி ....!!! ஒவ்வொரு மனிதனும் என்றோ ஒரு நாள் பிறந்து யாரோ ஒருவரிடம் தொலைந்து விடுவது தான் காதல் ....!!! நான் .... கண்திறக்கும் நேரம்... யாரும் இருக்கட்டும்.... நான் எப்போதும் கண்.... மூடும் போதும் நீ..... தான் வரவேண்டும் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!

உன் கண்ணில் நானும் ..... என்கண்ணில் நீயும்...... இருப்பது தான் காதல் .....!!! இப்போ ..... உன் தலைகுனிவு .......!!! என்னை சஞ்சலப்படுத்துதே ....!!! பார்ப்பவர்களுக்கு .... நாம் காதலர் -காதல்.... உன்னை விட்டு பிரிந்து... வருவதை நான் அறிவேன்......!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நான் கருகி விடுகிறேன் ....!!!

நான் விடுவது ........ கண்ணீர் அல்ல ............... காதலின் பெறுபேறு...........!!! எனக்கு உன் வலிகள் .... வலிப்பதில்லை இதயம்.... புண்ணாகி போனதால்......!!! பூக்களால் .... கவிதை எழுதுகிறேன் ..... நெருப்பாய் பார்க்கிறாய் ..... நான் கருகி விடுகிறேன் ....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

காதல் இதய ரேகை .........!!!

நீ சொல்லும் ..... வார்த்தை ஆயுள் ரேகை ..... நீ தரும் காதல் இதய ரேகை .........!!! உன்னை கண்டேன் என்னை கொன்றேன் ....!!! உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை .....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

அவள்மௌனமானாள்....

அவள்..... மௌனமானாள்.... இதயம் .... மௌன அஞ்சலி...... ஆகியது .......!!! நியத்திலும் .... கனவிலும் வராமல் ..... மரணத்தில் வருவதாய் .... இருக்கிறாயா .....? & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

பெரும் பாக்கியம் ..............!!!

காதல் ........... கிடைப்பது பாக்கியம்............... காதலி ................ கிடைத்ததும் பாக்கியம் .............. நீ ................... இரண்டுமாய் கிடைத்தது............. பெரும் பாக்கியம் ..............!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

முடிந்தால் உன் இதயத்தை.....

இப் பிறப்புக்கு ....... எனக்கு கிடைத்த ..... பாவ விமோசனம் நீ.....!!! என்னை பார்த்ததும்...... முகம் திருப்புகிறாய்........ முடிந்தால் உன் இதயத்தை..... திருப்பு...................!!! நான் விடும் மூச்சு..... உன்னை சுடும் என்று..... சந்தோசப்படவில்லை.... சுட்டு விடுமோ என்று..... பயப்பிடுகிறேன்...............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 09

நீயோ குறுங்கதை......

காதலில் நான் நாவல்... நீயோ குறுங்கதை...... என்றாலும் சுவையாக..... இருக்கதானே செய்கிறது....!!! எனக்கு தெரியும்.... நம் காதல் தோற்கும்.... என்றாலும் காதல் .... செய்தேன் நினைவோடு..... வாழ்வதற்கு...........!!! நினைவுகள் உனக்கு..... குப்பையாக இருக்கலாம்..... நான் குப்பை தொட்டியாக..... இருந்து விட்டு போகிறேன்....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 08

காதலின் காதல் .........!!!

காதலித்துப்பார் ......... பகலில் நிலாதெரியும்....... காதலில் தோற்றுப்பார் ...... இரவில் சூரியன் தெரியும் ..!!! காதலில் இதயத்தில் ..... வருவது முக்கியம் இல்லை .. நிலையாக இருப்பதே ..... காதலின் காதல் .........!!! உன்னை ........... அடையாளம் கண்டேன் ... என் அடையாளத்தை ............ தேடுகிறேன் ..!!! & கவிப்புயல் இனியவன்

நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!

நீ ........... என்னை .............. காதலிப்பாய் என்றால்........... நான் என்னை உருக்க தயார்............. ஆனால் உருக்கி விடாதே ...!!! காதல் ஒரு சேலை.......... அளவாக இருந்தால் அழகு......... அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!! நான் காதல் விளக்கு......... காதல் திரி காதல் நெய்...... நீ வெளிச்சமாக இரு போதும்.....!!! & கவிப்புயல் இனியவன்

வேதனைப்படுத்தாதே....!

எதற்காக ..... காதலித்தாய்.... பிரிந்தாய்...... ஏக்கத்துடன் ..... ஏமாற்றத்துடன் .... வாழ்கிறேன் ......!!! நீ எப்படியும்............ வேதனை படுத்து........ உனக்கு புரியவில்லை இதயத்தில் - நீ... உன்னையே -நீ ..... வேதனைப்படுத்தாதே....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 190

என்னை இழக்கின்றேன் .....!!!

தேடித்தேடி ...... வார்த்தைகளை .... தொகுத்து கவிதையும் .... கடிதமும் குறுங்செய்தியும் .... அனுப்பினேன் -இப்போ .... தேடவைத்துவிட்டாய்.... வார்த்தையை அல்ல ..... என் காதலை ........? நீ உண்ணும் அழகை .... உண்ணாமல் ரசிக்கிறேன் .... உறங்கும் அழகை .... உறங்காமல் ரசிக்கிறேன் .... ரசித்து ரசித்து என்னை ... இழக்கின்றேன் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 189

வாத்தை.போல் ஆக்கி விட்டாயே ...!!!

தோகை .................. விரித்து ஆடுகின்ற ..... மயிலைப்போல் இருந்த .... நம் காதலை - கழுத்தில் ... பிடித்து தூக்கும்- வாத்தை.... போல் ஆக்கி விட்டாயே ...!!! எல்லாவற்றையும் .... இழக்கவைத்துவிட்டாய் ... தலை வணங்குகிறேன் ..... என் காதலையும் ..... உயிரையும் விட்டு .... வைத்துவிட்டாய் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 188

கற்று கொண்டேன் ....!!!

கவிதை எழுதுகிறேன் சிரிப்பு வருகிறது அழுகையும் வருகிறது ....!!! நீ வலிதந்ததை .... நினைத்து சிரிப்பேன் .... நீ இன்பம் தந்ததை.... நினைத்துஅழுவேன் ...... காதலில் வலி நிலையானது என்பதால் சிரித்து கொண்டே ..... இருக்க கற்று கொண்டேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 187

இது குழந்தை தொழில் இல்லையா..?

இது குழந்தை தொழில் இல்லையா..? ------------------------------------ பட்டாசு தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! தீப்பெட்டி தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! குழந்தை தொழில் சட்டபடிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்.....!!! சினிமாவிலும் சின்ன திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தை தொழில் இல்லையா....? உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தை தொழில் குற்றமா.....? உளத்தில் காயம் வந்தால்........ குழந்தை தொழில் குற்றமில்லையா....? அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... ஏன் இன்னும் புரியவில்லை....? புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்............. எல்லமே பணம் செய்யும் மாயை...

விழிப்புணர்வு கவிதைகள்

படம்
சமூக தளங்கள் ........ சமூகத்தை சீர் படுத்தும் ...... தளங்களாக இருக்கவேண்டும் ..... சீரழிக்கும் தளங்களாக....... மாறிவிடக் கூடாது ......!!! இராணுவ  புரட்சி மூலம்..... ஆட்சியை மாற்ற இருந்தவர்களை..... சமூகதள தகவல் மூலம் மக்கள்..... புரட்சி வெடித்து இராணுவ புரட்சி..... தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள..... செய்தி பரிமாற்றம் உதவியதை..... யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!! தலைவன் இல்லாமல் தம் இன..... பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்..... போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...... போராட்டம் சமூக தள பரிமாற்றம்..... உலகையே திரும்பி பார்க்கவைத்து...... உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை..... படைத்தது சமூக தள ஆயுதம்........!!! மறுபுறத்தில் வேதனையான ....... சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்......... நடைபெற்றுகொண்டிருப்பதும் ........ மறுப்பதற்கில்லை......... தனிப்பட்ட பகைமைக்கும்......... விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்...... பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!! எங்கோ நடைபெற்ற நிகழ்வை....... திரித்து கூறுதல் பொருத்தமற்ற...... ஊகங்களை மக்கள் மத்தியில்...... பரப்புதல் ஒருவகை

துரோகம்கொடுமை.....!!!

காதலுக்கு இளமை......!!! அனுபவத்துக்கு ..... முதுமை.....!!! பண்பாட்டுக்கு பழமை.....!!! நட்புக்கு  ...... தோழமை......!!! முன்னேற்றத்துக்கு ..... திறமை......!!! அளவான சொத்து...... இனிமை.....!!! காதலில் தோற்றவன் ..... தனிமை......!!! நம்பிக்கை துரோகம்..... கொடுமை.....!!! வாழ்க்கையின் இன்பம் துன்பம் வழமை.....!!! & கவிப்புயல் இனியவன் 

நீ எங்கிருக்கிறாய் ...?

உன்னையே   பார்பேன்... உன்னை மட்டுமே பார்ப்பேன்...... உன் கண்களை மட்டுமே .... பார்ப்பேன்......!!! உன்னை பார்க்காமல் ..... என் கண் யாரையும் ...... பார்க்கமாட்டேன் .......!!! உயிரே சொல் தயவு செய்து சொல் நீ எங்கிருக்கிறாய் ...? & கவிப்புயல் இனியவன் 

காதலும் மெழுகு திரியும்

காதல் இதயமும் .... மெழுகு திரியும் ...... ஒன்றுதான் ......!!! தனக்காக வாழாமல் பிறருக்காக எரிகிறது மெழுகு திரி....!!! தனக்காக வாழாமல்.... உனக்காக உருகுகிறேன் ... என்கிறார்கள் காதலர் ....!!! மெழுகு திரி எண்ணெய்யால் உருகுகிறது .... காதலர் எண்ணத்தால் ..... உருகுகிறார் ........!!! & கவிப்புயல் இனியவன் 

புற்று நோயாளர் தினம்

ஏன் மனிதா என்னை ..... கொஞ்சம் கொஞ்சமாய் ... கொல்லுகிறாய் ...... கெஞ்சி கேட்டு அழுகிறது .... சிகரெட் .......!!! நீ கொஞ்சம் கொஞ்சமாய் ..... இறப்பதற்காக என்னை ..... ஒத்திகை பார்க்கிறாயா ....? உன் நுரையீரலை காட்டு .... நானே நேரடியாய் வந்து ..... கொண்று விடுகிறேன் ....!!! & இன்று புற்று நோயாளர் தினம் கவிப்புயல் இனியவன் 

என்னை விலக்குகிறாய்........!!!

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07

கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

வீசும் காற்றில் .... மரம் அசைகிறது ..... அழகாக இருக்கிறது .... மரத்தின் வலி ..... யாருக்கு புரியும் ......!!! கல்லில் கூட ஈரம் .... இருப்பதால் பாசி ..... படர்கிறது ..... உன் இதயம் கல் கூட ..... இல்லையே .......!!! கண்ணீரில் வேறுபாடு ..... இருப்பதே இல்லை ..... மனதின் வலிதான்....... கண்ணீரை வேறுபடுத்தும் ....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

அகத்தால் பிரிவது ....

மற்றவர்களுக்கு ...... நம் காதல் தோல்வியாக ,..... தெரியலாம் ...... உனக்கும் எனக்கும் ..... புரியும் நம் காதல் ..... வலிமை .......... முகத்தல் நாம் பிரிந்து ...... வாழ்கிறோம் ...... அகத்தால் பிரிவது .... மரணத்தில் மட்டும் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 186

முள்ளாய் குத்துகிறது.....!!!

நீ அருகில் இருக்கும்..... நொடிகள் எல்லாம் ..... என்கடிகார முற்கள் ...... நெருஞ்சி முற்கள்..... என்னை விட்டு பிரிய.... போகிறாய் என்றதும்..... முள்ளாய் குத்துகிறது.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்