இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கிய கவிப்பேரரசு

கவிப்புயல் இனியவன்அவர்களுக்கு 🌹🌹🌹 ஒன்று மட்டும் சத்தியம் உண்மையான உங்களின் திறமைகளை என் மனதிலே எடைபோட்டு மனமுவந்து உங்களுக்குத் அந்தப் பட்டத்தை தர வேண்டுமென்று விரும்பி கொடுத்தது 7000 கவிதைகள்மேலும்  ஒவ்வொரு வகையிலும் ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதி இருப்பது மூன்றில் இரண்டு பங்கு உங்களின் சொந்த வாழ்க்கையை தமிழுக்காக அர்ப்பணித்து இருக்கிறீர்கள் அது கிட்டத்தட்ட தமிழுக்காக 36 வருடங்களுக்கு குறையாமல் வைத்திருக்கிறீர்கள் நிறைய பட்டங்களை வாங்கி இருக்கிறீர்கள் வயதில் முதிர்ந்த நான் இந்தப் பட்டத்தை தங்களுக்கு தருவது நீங்கள் 100 விழுக்காடு அல்ல ஆயிரம் விழுக்காடுகள்  தகுதியானவர் என்பது சத்தியமான உண்மை தமிழ்நாட்டில் நீங்கள் இருந்திருந்தால் நமது பாசத்துக்குரிய கண்ணதாசன் ஐயாவுக்கும் வாலிஐயா  வைரமுத்து ஐயா அவர்களின் வாரிசாக வலம் வந்திருப்பீர்கள் சத்தியமாக நான் முகஸ்துதி பாடுகிற  ஆளில்லை உங்களுடைய உயரம்  உழைப்பு போல இமயம் தொடும் வாழ்க வளமுடன் @ கோவை கோமகன்  (வயது 78)  திரைப்படத்துறை

கவிப்புயலின் மரபுவழிக்கவிதை

படம்
  தலைப்பு : புரிதல் இல்லா நட்பு  என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன்  இதயத்தால் நீசெப்பு // என்னில்  தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// தீண்டத்தகா வார்த்தைகளால் தெறித்தது வன்மை// தூண்டில்  மீன்போல் துடிக்கிறது தனிமை// நீண்டநற் பயணத்தில் நினைவுகளே இனிமை// வேண்டுமுன் உறவேயென்  வெற்றிக்கு மேன்மை// @  கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் மரபு வழிக் கவிதை

 என்றும் ஏழைக்கு   இயன்றதைக்  கொடு//  இன்றே வாழ்க்கையில்  இடர்களைத் தடுத்திடு //  தோன்றும் ஊழ்வினை  துன்பத்தை அழித்துவிடு//  சொன்னதைக் கேட்டு  சுகவாழ்வைத்  தெரிந்தெடு //  தீவினை அறுவதற்கு  தியானம் நன்குசெய்//  தவிக்கும் உயிர்களுக்கு  தானம் ஒன்றேமெய் //  செயல்வினை அறுப்பின்  சித்தனாய்ப் போயிடுவாய்//  பயவினை தீர்ப்பதற்கு  பரமன் ஒருவனேதாய் //