இடுகைகள்

டிசம்பர் 21, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னில் இருக்கும் என்னை பார்

மரமொன்றில் ... நீ சாய்ந்து இருகிறாய் .... மரத்தில் இதயம் குதூகலம் ... அடைவதை பார்கிறேன் .... என் இதயம் ஓலமிடுவதையும் .... பார்கிறேன் .... உன் இதயம் எப்போது .... உன்னில் இருக்கும் என்னை ... பார்க்கப்போகிறது .....? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 30

நானோ உன் நிழல்

நீ என்னை .... பின் தொடராதே என்கிறாய் .... உன் பார்வையால் முறைக்கிறாய்  நானோ உன் நிழல் என்பதை ... அறியாமல் வாழ்கிறாய் ....!!! நீ என்னை தொடராவிட்டாலும் ... நான் உன்னை தொடர்வேன் .... நிழலாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 29

வருகையை உணர்கிறேன் உயிரே

என் ..... வீட்டோரம் வரபோகிறாய் ... என்பதை உணர்கிறேன் உயிரே .... முற்றத்து பூக்கள் அழகு பெறுகிறது .... பட்டாம் பூச்சிகள் ஆயத்தமாகிறது .... உன்னை அழைத்து வர ..... இருத்தும் என்னபயன் -ஒரு முறை ... என் வீட்டை திரும்பிபார்க்கிறாய் .... இல்லையே.....??? ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 28

பூவுக்கு புரியும் பூவில் குணம் ....!!!

உன்னை தெருவோரத்தில் .... கண்டுவிட்டு பேசாமல் வரும் ... ஒவ்வோரு முறையும் -ஆறுதல் .... சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!! கவலை படாதே மன்னவா .... மனமிரங்குவாள் விரைவில் ... என்கிறது .....!!! பூவுக்கு புரியும் தானே..... ஒரு பூவில் குணம் ....!!! ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 27

உன்னோடு பேச -நீ

உன்னோடு பேச -நீ  வாய்ப்பு தருகிறாயில்லை... உன்னருகே வரும் தோழியோடு .... கதைத்தால் முறைக்கிறாய் .... உன்னருகே காவலுக்கு வரும் ... தங்கையுடன் பேசினால் ... அவளையும் மிரட்டுகிறாய் .... அப்போ உன்னோடு பேசும் ... சந்தர்ப்பம் தான் எது ....?  ++ கவிப்புயல் இனியவன்  என்னவளே என் கவிதை 26

நண்பனே சொர்க்கம்

நண்பனே சொர்க்கம் ----- சொர்க்கத்தில் வீடு தருகிறேன் சொந்தமாய் வாகனம் தருகிறேன் வீட்டருகில் இன்னும் பல .. வசதிகள் தருகிறேன் .. என்று இறைவன் கேட்டால் கூட ... அருகில் என் நண்பன் வீடே ... இருக்கணும் என்பேன் .....!!! இல்லையேல் ... பக்கத்தில் நண்பனோடு ... இருப்பதே சொர்க்கம் ... என்பேன் .....!!!

விவேகமே நண்பன்

விவேகமே நண்பன் -------------- ஒரு வேகத்தில் அன்பை வைத்தேன் .... காதல் வந்தது .... விவேகத்தில் அன்பு ... வைத்தேன் நண்பன் ... கிடைத்தான் .....!!! வேகம் ... தடுமாற்றத்தை தந்தது .... விவேகம் ... வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!

உயிர் காத்தான் நண்பன்

உயிர் காத்தான் நண்பன் ---- வெள்ளத்தில் தத்தளித்தேன் ...  வீடு வாசலை இழந்தேன் ...  சொத்துக்கள் மாயமாகின...  சொந்தங்கள் துடி துடித்தன ....  பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...  பாடையில் போயிருப்பேன் ......!!!  உயிர் காப்பான் உற்றதோழன் ...  உணர்ந்தேன் உயிர் நண்பா ....  உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...  உயிர் நண்பன் என்பேன் ....  முகம் பாராமல் முகவரி ...  தெரியாமல் உதவிய நட்புகளே ...  உங்களுக்கு  வானமும் வையகமும் ...  மாற்றல் அரிது .....!!!

Sms கவிதை

Sms கவிதை  நீ காதலோடு விட்ட  மூச்சை காற்றில்  தேடி அழைக்கிறேன் ....!!! @@@ Sms கவிதை உன் கண்ணுக்கு  மயங்கி காதல் செய்தேன்  இப்போ உன்னை கண்டே  மறைகிறேன் ....!!!

முள் இதய தோட்டம்

முள் இதய தோட்டம் ------------- இதயத்துக்குள் .... முள் வளரும் தோட்டத்தை .... பார்க்கப்போகிறாயா .....? ஒருமுறை -என் இதயத்துக்குள் வந்துபார் .....!!!

இரட்டை பூ

இரட்டை பூ ------------- நீ காதல் பரிசாய் .... தந்த ரோஜா செடி ... இரட்டை பூ பூத்திருக்கு .... நானும் நீயும் ... எப்போது இரட்டை பூ ... ஆவேம்.....?

எத்தனை முறை ஏமாறுவது

எத்தனை முறை ஏமாறுவது -------------- நாளை சொல்கிறேன் ....  நாளை சொல்கிறேன் .....  என்று சொல்லிக்கொண்டே ...  போகிறாய் ....  எத்தனை முறைதான் ...  ஏமாறுவது .....?

பிறந்து மரிக்கிறேன்

பிறந்து மரிக்கிறேன் --- எல்லோரும் ... கற்பதில் பிறந்து .... கல்லறையில் ... முடிகிறார்கள் ..... நான் மட்டும் ... உன் பார்வையில் ... பிறந்து மரிக்கிறேன் ...!!!

மன ஆறுதலுக்காக

மன ஆறுதலுக்காக ---------- உனக்காக ....  எத்தனை நாள் ...  ஏங்கினேன் ...  எனக்காக ...  நீயும் ஏங்கினாய் ..  என் மன ஆறுதலுக்கு  சொல்லேன் .....!!!

எப்போது வருவாய்

எப்போது வருவாய் கனவுகாய்  காத்திருக்கிறேன்  அப்போது இனிமையாய்  வருவாயோ ...!!!  உன் அழகால்  இதயம் முழுக்க  காயப்பட்டிருக்கிறேன் ....!!!