இடுகைகள்

டிசம்பர் 4, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல் கவிதை ;758

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல் கவிதை ;757

காதலை வைத்திரு ...!!!

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;756

என்னவளே... என்னவளே ...!!!

அருகில் இருந்தால் தான் .... உண்மை காதல் இல்லை ... என்னவள் தொலைவில் ... இருந்தே என்னை தினம் ... கொல்லுகிறாள்....!!! ************** சிரித்துகொண்டு காதல் ... செய்யாதே அது  சிரிப்போடு ... போய் விடும் - என்னவளோ ... சீறும் பாம்புதான் ....!!! அன்போடு சீறுகிறாள் ..... காதலோடு இருக்கிறேன் ....!!! ************* என்னவளுக்கு .... கடவுள் மீது நம்ம்பிக்கை ... கிடையாது - என்னையே ... கடவுளாக பார்க்கிறாள் ....!!! நான் அவளை தெய்வமாக ... தரிசிக்கிறேன் ....!!! *********** இன்னும் நான் அவளின் ... விழிகளை பார்த்ததில்லை ... தினமும் விழித்திருந்து .... காதலிக்கிறேன் .... என் விழிக்குள் அவள் ....!!!

உழைக்காமல் உண்ணும் ...

வியர்வை சிந்தாத உழைப்பில் .... உயர்வில்லை.... உழைக்காமல் உண்ணும் ... உணவில்  உயிர் சத்தும் இல்லை ...!!! மன்னிக்காத இதயம் இருந்து ... பயனில்லை .... மன்னித்தபின் இதயமாக ... இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!! + + பட்டது மனதில் எட்டியது கவிதை கவிதை எண் 05

முதலில் கவலைப்பட்டேன் ...

என்னை நீ பார்த்தும் ... பார்க்காமல் போகிறாய் ... முதலில் கவலைப்பட்டேன் ... பின்பு சுவார்சித்து கொண்டேன்....!!! என்னுள் உன்னை மறைத்து ... வைத்ததை மறந்து விட்டேன் .... உயிர் என்னிடம் உள்ளபோது ... உடல் ஒரு ஜடம்..சிரிக்காது ...!!! + + பட்டது மனதில் எட்டியது கவிதை கவிதை எண் 04

உன் அழகான முகத்தில் ...

உன் அழகான முகத்தில் ... மயங்கி உன்னிடம் அழகான ... இதயத்தை தேடினேன் .... தோல்வியடைந்தேன் ....!!! இதயத்தின் அழகுக்கும் ... முகத்தின் அழகுக்கும் .... நிச்சயம் அகன்ற இடைவெளி ... இருக்கத்தான் செய்கிறது ....!!! + + பட்டது மனதில் எட்டியது கவிதை கவிதை எண் 03

தாங்க முடியவில்லை ....

என்னை விலக்கிவிடு .... கேவலப்படுத்துவதை.... தாங்க முடியவில்லை .... பிடிக்காது போனால் விலகு ....!!! அன்பின் பழிவாங்கலில் ... இதுவும் ஒரு ரகம் .... பிடிக்காது என்று தெரிந்தும் ... பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!! + + பட்டது மனதில் எட்டியது கவிதை கவிதை எண் 02

பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!

மதுவின் போதையில் ... அழிந்தவனை விட ... மாதுவின் போதையால் ... அழிந்தவர்களே அதிகம் ....!!! மது உள்ளே போகப்போக ... வலிதரும் .... மாது வெளியே செல்ல செல்ல ... வலிதரும் .....!!!

காதலில் வென்றேன் ....

காதலில் வென்றேன் .... வாழ்க்கையை இழந்தேன் .... இழந்தவற்றில் நீயும் .... அடங்குகிறாய் .....!!! சேர்ந்து வாழத்தான் .. காதலித்தேன் ... வெற்றிகரமாய் பிரிந்து வாழ்வதில் வெற்றிபெற்று ... இருக்கிறேன் ..... ஏன்டா காதலில் வெற்றி பெற்றேன் என்கிறது மனசு ....!!!

காதலில் வென்றுபார் வேதனை புரியும் ....!!!

அவள் நடையினிலே ..... ஆயிரம் கவிதைகள் .... அவள் பார்வையிலே ... ஆயிரம் கவிதைகள் .... அவள் சிரிப்பினிலே ... ஆயிரம் கவிதைகள் ... அத்தனையும் காதலின் ஆரம்பத்தில் எழுதினேன் ....!!! அவள் பேசினாள்... பட்டாம் பூச்சிபோல் ... பறந்தேன் ..... அவள் பேசாதிருந்தாள்.... ஈசல்போல் விழுந்து விட்டேன் .... காதலில் வென்றேன் வேதனை ... படுகிறேன் ......!!!