இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனியே உறங்கிவிடுவேன் ....!!!

இதுவரை நான் .... தனியாக இருந்ததில்லை .... உன்னோடு உன் நினைவோடு ... மட்டுமே வாழ்கிறேன் ..... ஒரு வேளை நான் தனியே .... வாழ நேரிட்டால் ..... தனியே உறங்கிவிடுவேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

அம்மா கவிதை

இன்றும் உச்சியில் ... தண்ணீரை ஊற்றும் ... நொடிபொழுதில் ....!!! அன்று ..... உச்சியில் தண்ணீர் ... ஊற்ற நான் வீறுட்டு... கத்தியது நினைவுக்கு  வருகிறது  அம்மா ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்  அம்மா கவிதை  கவிப்புயல் இனியவன்

நினைவுகள்அழகு ....

அருகில் நீ ... இருக்கையில் .... பேச்சு அழகு ..... தொலைவில் நீ இருக்கையில் .... நினைவுகள்அழகு .... இரண்டும் அழகாகும் .... போதெல்லாம் .... என் கவிதை அழகு ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

பொய் இருந்ததே இல்லை ....!!!

கவிதையில் .... சிலவேளைகளில் .... பொய்யான உவமைகள் .... சேர்ப்பேன் ..... உன் மீது உள்ள காதலில் .... எப்போதும் .... பொய் இருந்ததே இல்லை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

நான் பார்க்கணும் ....!!!

எனக்கொரு ஆசை ... ஒருநிமிடமாவது .... நீ ..................... எனக்காக வாழ்வதை .... நான் பார்க்கணும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்       (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

என்னால் முடியவில்லை .....!!!

என்னவள் கோபப்பட்டாள்... என் கோபத்தை விட்டேன் .... என்னவள் ஆசைபட்டாள்.... என் ஆசைகளை விட்டேன் .... என்னை  விட்டு விட்டாள்..... என்னால் முடியவில்லை .....!!! + கவிப்புயல் இனியவன் 

பிரிந்தது ஏதோ உண்மை

நாம் ...... பிரிந்தது ஏதோ..... உண்மைதான் ...... உன் முகம் புகைப்படமாய் ..... உன் நினைவுகள் திரைப்படமாய் .... உன் கனவுகள் ஒளிதிரையாய்.... வந்துகொண்டே இருக்குதடி ....!!! + கவிப்புயல் இனியவன் 

காதலில் கருகி விட்டேன்

பார்வையில்..... நெருப்பாய் இருந்தாள்.... பேசுவதில் தீயாய் இருந்தாள் .... கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் .... அன்பில் அழகான......... சுடராய் இருந்தாள் .... அவள் காதலில் நான் ..... கருகி விட்டேன் .............................!!! + கவிப்புயல் இனியவன் 

வெந்நீராய் கொதிக்கிறது .....

உன்னை ...... நினைக்கும் போதெல்லாம் .... பன்னீராய் ..... மணக்கும் நினைவுகள் .... உன் பிரிவை நினைக்கும் போது .... வெந்நீராய் கொதிக்கிறது ..... கண்ணீரால் ..... சமன் செய்வேன் ....!!! + கவிப்புயல் இனியவன் 

ஜென்மத்தில் முடியாது .....!!!

ஐய்ம்பூதங்களின் கருத்தை .... ஐவகை நிலத்தை என்னால் .... ஐந்து வரியில் விளக்கிடுவேன் .... நண்பா நட்பை பற்றி என்னால் .... ஜென்மத்தில் முடியாது .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்

நன்றாக இன்னும் காயப்படுத்து ......

என்னை நன்றாக காயப்படுத்து ..... உனக்கு அதில் இன்பமென்றால் .... நன்றாக இன்னும் காயப்படுத்து ...... உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...? உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

கவிதை கண்ணீர் விடும்

நீ அன்பாய் பேசும் போது...... என் கவிதை அழகாய் இருக்கும் ..... நீ சோகத்தோடு பேசும்போது .... என் கவிதை கண்ணீர் விடும் ...... என் கவிதையே நீ தான் உயிரே ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்

காதலின் அடையாளமாய் ......!!!

நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் ..... கண்கள் உன்னைமட்டும்  பார்க்கட்டும் ..... உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் ..... நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் ..... உண்மை காதலின் அடையாளமாய் ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்

காதல் சிரிக்கிறது ......!!!

நாம்  பிரிந்துவிட்டோம் .... நீ நினைவுகளை மறந்து .... நான்நினைவுகளை மறந்து ..... வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் ..... காதல் சிரிக்கிறது ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ண கவிதைகள் 03

எனக்கும் சேர்த்து காற்றை ..... உள்வாங்கி சுவாசிப்பதும் ..... விருப்பம் இல்லாவிட்டாலும்   .... எனக்காக உண்பதும் ... தாயே உன்னைத்தவிர யார் ...? & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை  கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ண கவிதைகள் 02

நான் எதை பேசினானும் ...... அமைதியாய் இருந்து கேட்டு .... நான் அமைதியாய் இருக்கும் .... வேளையில் என் பலவீனத்தை .... விளங்குபவன் என் நண்பன் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்

பஞ்ச வர்ண கவிதைகள்

உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள்  வர்ணம் - காதல் தோல்வி  கவிப்புயல் இனியவன்

உயிரை வதைக்கிறாய் .....!!!

மின்னலை பார்த்தால் ..... கண் கெட்டுவிடும் .... என்  கண்ணில் நீ .... பட்டாய்     நான் ....... பட்டுவிட்டேன் ....!!! மதுவை விட போதை நீ ..... மது உயிரை குடிக்கும் .... நீயோ............ உயிரை வதைக்கிறாய் .....!!! காதலை ..... ஆரம்பித்ததும் நீ .... முடித்ததும் நீ ...... நான் என்ன பாவம் .... செய்தேன் ......? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1042

கண்ணீரில் முடியும் ....!!!

காதல் ஒரு .... மந்திர உலகம் ..... சிரிப்பில் தோன்றி .... கண்ணீரில் முடியும் ....!!! பேசாமல் இருந்தபோது .... காதல் இனித்தது .... பேசினாய் - காதல் ..... வெறுத்து விட்டது ......!!! உன்னை கண்ணில் ..... தேடுகிறேன் .... நீ கண்ணீரில் வந்து ..... போகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1041

எப்படி போடுகிறாய் வேஷம்

கடல் ...... கரையில் இருந்து .... அக்கரையை பார்க்கும் .... போது நிலமும் வானமும் .... முத்தமிடும் ..... நம் காதலை போலவே ..... எல்லாம் மாயை ......!!! பூவில் ..... இருக்கும் தேனும் ..... பூவின் கீழ் இருக்கும் .... முள்ளும் நீதான் ..... எப்படி போடுகிறாய் .... வேஷம் ......? கடல் கரையில் .... தோன்றிய நம் காதல் .... அலைபோல் வந்து வந்து .... போகிறது .......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1040

நாளிதழை திறந்து பார்த்தால்.....

மாட்டு.... வண்டியில் போன சுகம்.... மாருதியில் இல்லையடா ....!!! பாட்டி .... சொன்ன நம் ஊரைப்போல்..... பட்டணம் இல்லையடா ....!!! நாட்டு ..... நடப்பு எல்லாவற்றையும்... நாழிகையில் சொல்லும் தாத்தா... நாளிதழை திறந்து பார்த்தால்..... நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!! தெருவோர தாக சாந்தி.... தேர் திருவிழாவை.... சிறப்படையும் வைக்கும்.... இப்போ -தெருவுக்கு தெரு.... கோயில் வந்ததால்..... தெருவோரத்தை காணோமடா ...!!! சமுதாய முன்னேற்றம்..... ஒரு சாண் ஏறினால்... சமூக சீரழிவு முழம் கணக்கில்..... ஏறுதடா .......!!! ^ சமூக புலம்பல் கவிப்புயல் இனியவன்

கவிதை கற்பனை தரும்....!!!

காதல் இனிமைதரும்... இனிமை நினைவு தரும்....!!! காதல் பிரிவு வலிதரும்.... வலிகள் வரிகள் தரும்......!!! வரிகள் கவிதை தரும்.... கவிதை கற்பனை தரும்....!!! கற்பனை புதுமைதரும்..... புதுமை இளமைதரும் ...!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

மனிதனின் எண்ணங்களின்

உடல் முழுதும் நீரை..... வைத்திருக்கும் - இளநீர்.... இனிக்கிறது ....!!! உடல் முழுதும் நீரை ..... வைத்திருக்கும் - மனிதன்.... கண்ணீர் உவர்க்கிறது ....!!! மனிதனின் எண்ணங்களின் .... வண்ணங்கள் ..... காரணமாய் இருக்குமோ ....? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன் 

இதயத்துக்கு ஒரு கவிதை

இதயம் வலித்தால் கண்ணீர்.......!!! இதயம் சிலுத்தால் .... சிரிப்பு..........!!! இதயம் சிந்தித்தால் .... கவிதை........!!! இதயம் சிறுக்கினால் ஓவியம் .......!!! இதயம்  முணுமுணுத்தால் வார்த்தை......!!! இதயம் காண்பது..... கனவு......!!! இதயம் தூங்குவது..... மௌனம்......!!! இதயம் அழுவது ..... பிரிவு.......!!! இதயம் இறப்பது.... தோல்வி.....!!! இதயமே நீயாக இருப்பது.... காதல்.......!!! ^ இதயத்துக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன்  

மனசுக்கு ஒரு கவிதை

குழந்தை பருவத்தில் எதை சொன்னாலும் மறுக்கும் மனசு ....!!! இளமை பருவத்தில் காதலி எதை சொன்னாலும் தாங்கும் மனசு ...!!! முதுமை பருவத்தில்.. எதைசொன்னாலும்.... வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனசு .....!!! ^ மனசுக்கு ஒரு  கவிதை கவிப்புயல் இனியவன் 

தன்னம்பிக்கை கவிதை

வளைந்து நிற்பது ... தோல்விக்கு மட்டும் .... காரணமல்ல ... உயிருக்கும் ஆபத்து ....!!! பயம் ........ உயிராற்றலை கெடுக்கும்..... உயிர் கொல்லி ...!!! பயந்தால்...... விரைவில் இறப்பாய் ... நோய்வாய் படுவாய் ....!!! பயம் ..... தோல்விக்கு மட்டுமல்ல ... உன் உயிருக்கும் ..... காலன் ....!!! நிமிர்ந்து நில் ...... துணிந்து நில் .... உயிராற்றல் பெருகும்.... தன்னம்பிக்கை வளரும்.... வெற்றி நிச்சயம் ....!!! ^ தன்னம்பிக்கை கவிதை  கவிப்புயல் இனியவன்

சமத்துவம் தானாகதோன்றும் ....!!!

எனக்கே வேண்டும் ... எல்லாம்  வேண்டும் ... நினைப்பே -இன்றைய... பொருளாதார சமத்துவ.... இன்மைக்கு காரணம் ....!!! எனக்கும் வேண்டும் .. எல்லோருக்கும் வேண்டும்... என்று நினைத்தால் பொருளாதார சமத்துவம் தானாகதோன்றும் ....!!! வறிய நாடு... செல்வந்த நாடு..... வருமான கோடுதான் ... காரணம் - அதை தீர்மானித்தது .. மனித எண்ண கோடு என்ற .... ஆசைக்கோடு தான் ....!!! நாடு விருத்தியடைய .. வருமான விருத்தி மட்டுமல்ல...... மனித எண்ணவிருத்தி தான்..... மிக அவசியம் .... எனக்கும் வேண்டும் என்பது .... முயற்சி...........!!! எல்லோருக்கும் வேண்டும் என்பது .... தியாகம்..........!!! முயற்சியும் வேண்டும் ..... தியாகமும் வேண்டும் .....!!! ^ பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன் 

வாழ்க்கை தத்துவ கவிதை

பசுவிடம் சாந்தம் உண்டு..... யானையிடம் பொறுமையுண்டு .... நரியிடம் பகிரும் பண்புண்டு ..... புலியிடம் வீரமுண்டு ..... சிறுத்தையிடம் வேகம் உண்டு ..... நாயிடம் நன்றியுண்டு ..... குரங்கிடம் கொள்கையுண்டு .... சிங்கத்திடம் ஆளுமையுண்டு .... குதிரையிடம் வலிமையுண்டு .... மானிடம் அழகு உண்டு ..... முயலிடம் மென்மையுண்டு..... பூனையிடம் தூய்மை உண்டு .....!!! & இத்தகைய குணத்தை இழக்கும் .... மனிதா - எப்படி சொல்வாய் ..... இன்னொருவனை பார்த்து ..... நீ மிருகமடா  என்று .....? ^ வாழ்க்கை தத்துவ கவிதை கவிப்புயல் இனியவன்

என்ன உலகமடா

வெள்ளை வேட்டி கட்டி .. கழுத்தில் சங்கிலி போட்டு ... சட்டை பைக்குள் -பணம் தெரியும் படி வைத்து .... போகிறவரை -எல்லோரும் கும்பிடுறாங்க ..சாமி என்கிறாங்க ...!!! ஞானத்தில் பழுத்து .... அதிகமாக பேசாமல் ... ஊத்தை துணியுடன் ... ஞான பார்வையுடன் ... என் அருகில் ஒருவர் .... நிற்கிறார் -அவர் கேட்காமல்... காசை போடுகிறார்கள் ... பிச்சையாக ...!!! என்ன உலகமடா ... புறத்தோற்றத்தை... பார்த்து எவ்வளவு .... காலம் தான் ஏமாறும்.... இந்த உலகம் ...!!! ^ வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ  ------ அ ன்பை நாடினேன் .. ஆ வலோடு காத்திருந்தேன்.. இ ன்பத்தை தந்தாவள்.... ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!! உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை .. ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌.... எ ல்லாம் செய்ததும் - நீ ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!! ஐ ந்து பொறிகளும்தன்.... ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌..... ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் .... ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்.... அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!! ^ காதல் கவிதை  கவிப்புயல் இனியவன் 

திருமண வாழ்த்து மடல்கள் 01

நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..... உள்ளன்போடு உன்னதமாய் வாழ ..... உழைத்த உழைப்புக்குள் இன்பமாய் .... உற்ற உயிர் நண்பனை உளமார ..... வாழ்த்துகிறேன் ...........................................!!! பரம்பரைக்கு இரு வாரிசை ...... பார்போற்றும் வகையில் படைத்திடு ..... பட்டறிவோடு திறம்பட வாழ்ந்திடு..... பெற்ற  துணைவியை நேசித்திடு ..... என்றும் உனக்கு உற்ற நண்பனாய் ..... தோள

காதலுக்கு எந்த விதியும் பொருந்தாது .........!!!

இறந்தபின் .... நரகத்துக்கு ..... போகத்தேவையில்லை ..... அன்பாய் பழகிய ..... உறவை பிரித்துப்பார் ..... தினமும் நரகத்தில் .... வாழ்வாய் .........!!! என்னில் தான் தப்பு ..... சிறுவயதில் இருந்து ..... நான் விரும்புவதெல்லாம் .... கிடைக்கவேண்டும் என்று .... ஆசைப்பட்டதுக்கு ...... காதலுக்கு எந்த விதியும் .... பொருந்தாது .........!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

தெரியாமல் காதலித்தோம் .....

யாரென்று விபரம் .... தெரியாமல் காதலித்தோம் ..... விபரம் தெரிந்தபின் .... பிரிந்தோம் ......!!! ஒருவரை பிரிந்தபின் .... தனியே இருந்து அழும்... வலியிருக்கிறதே..... மரணவலியை சுமக்கும் .... வலிக்கு ஒப்பானது .....!!! நான் .... தனியே இருந்து அழும்.... வலியை ஒருமுறையேனும் .... பார்த்துவிடாதே ......!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன் 

கிராமத்து காதலில் அழகோ அழகு

நீண்ட நாட்களின் .... பின் ஊருக்கு போனேன் .... என் காதல் பட்டு .... போனதுபோல்.... நாங்கள் கூடி கதைத்த .... மரமும் பட்டு போயிருந்தது ....!!! என்றாலும் ..... நாம் இருவரும் கஸ்ரப்பட்டு .... மரத்தில் எழுதிய எங்கள் .... இணைந்த பெயர் மட்டும் ..... அழியாமல் இருந்தது .... கிராமத்து காதலில் இது .... அழகோ அழகு .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!! பிறந்தபோது .... அழுதவலி வலி புரியவில்லை ..... பிரிந்தபோது .... அழுதவலி வலி முடிவதில்லை ....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை  துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!

அதிகாலையில் துயில் எழுவதற்கு ஆசைப்படு.....! துயில் எழுந்தபின் குளிக்க‌ ஆசைப்படு.........! குளித்தபின் காபி குடிக்க‌ ...... ஆசைப்படு....! அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...! உடுத்த‌ உடையை அசுத்தமாக்காமல் ஆசைப்படு...! நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....! நேரம் தவராமல் ...... வேலை செய்ய‌ ஆசைப்படு .....! மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....! மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...! மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...! பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....! ^ நல்லவற்றுக்கு ஆசைப்படு கவிப்புயல் இனியவன்

உன்னிடம் இருந்து தப்புவது ...?

எத்தனை முறைதான் .. உன்னிடம் இருந்து தப்புவது ...? சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!! கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!! கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!! எத்தனை முறைதான் -காதல் குற்றவாளியாவது ...? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

இறந்துகொண்டிருக்கிறோம்

தெரு ..... வெளிச்சம் பச்சை ... வாகனம் நகர்கிறது  ...!!! தொடரூந்தில் காப்பாளர் .. பச்சைக்கொடி ... தொடரூந்து செல்கிறது ...!!! எங்கள் நிறமே  பச்சை ... நாங்கள் மட்டும் இறந்துகொண்டிருக்கிறோம் மரங்களின் கண்ணீர் கதை ...!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

காதலன் நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தாய் வயிற்றில் .... சுமக்கிறார் .....!!! தந்தை முதுகில் .... சுமக்கிறார் .......!!! மாணவன் .... தோளில் சுமக்கிறான்....!!! காதலன் நெஞ்சில் சுமக்கிறான் .....!!! தொழிலாளி மூடையை சுமக்கிறான்  ....!!! நாட்டு கடனை மக்கள் ... வரியாக சுமக்கின்றனர் ....!!! காட்டுக்கு .... கூடு போகும் போது ... நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் பல இரசனை கவிதை

எதிர் ..... காலத்தை யோசி ... நிகழ்காலத்தை நேசி ..... அதிகளவு நுகராதே ..... அளவுக்கு அதிகமாய் ..... ஆசைப்படாதே .....!!! உணவு வாழ்க்கைக்கு தேவை..... உணவே வாழ்க்கையாய் .... வரத்தேவையில்லை ..... அதிக உணவு அடுத்தவர் ..... உணவை பறிக்கிறது .....!!! சூழல் அக்கறையின்மையும் ... அழிக்கப்போவது உன்னையும் உன் பரம்பரையை... !!! பட்டறிந்த ...... பலர் சொன்னாலும் ... கற்றறிந்த மேதைகள்....... சொன்னாலும் ... கட்டறுத்த மாடுகளாய் ... ஏனிந்த சமுதாயம் ....? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கை .... என்பது ஓட்டம் தான் .... வெறுமனையே ஓடாதே ... நாயும் அதை செய்கிறது .... நம்பிக்கையுடன் ஓடு ...!!! குறிக்கோளுடன் ஓடு ,....!!! இலக்கோடு ஓடு...!!! விழுத்தாலும் ஓடு ...!!! ஓடும் ... போது திரும்பிப்பார் .... ஓடிய பாதை சரியா ...? ஓடிய வேகம் சரியா ...? ஓடிய முறை சரியா ...? இலக்கை நோக்கி முறையாக ஓடு ஓடு ஓடு ... வெற்றி உன் நுனி விரலில் ...! ^ தன்னம்பிக்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!

உயிர் ... கொண்டு எழுதுகிறேன் .. உயிர் .... துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!! நான் ..... இன்பமாக இருக்கும் போது .. நாடி .... நரம்பை வரிகளாக்கி...... எழுதுகிறேன்....!!! நான் .... துன்ப படும் போது ... நாள நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்.......!!! நிகழ்கால நினைவுகளை .. இதயத்தின் ஓசைகொண்டு .. எழுதுகிறேன்.....!!! கடந்த கால நொடிகளை .. சுடும் மூச்சின் துளிகளை... கொண்டு எழுதுகிறேன்.....!!! நான் ... இறக்கும்  வரை... கவிதை எழுதுவேன்... நான் இறந்தபின்னும்... கவிதை எழுதுவான்.... என் நண்பன் ...!!! கவிஞனுக்குத்தான் ..... இறப்பு உண்டு ..!!! கவிதைக்கு இல்லையே ...!!! ^ கவிப்புயல் இனியவன் 

அதிலும் ஒரு சுகம்

உன் .... இமையெனும் முள்பட்டு.. என் ...... கண்ணெனும் ரோஜா... கலங்கியது .... அதிலும் ஒரு சுகம்.. இருக்கத்தான் ... செய்கிறது கண்ணே...!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

கல்லூரியில் கலாய்ப்பது .. காலத்துக்கும் அழியாது ... காதலின் தொடக்க இடம் ... சுகம்தான் அந்த இடம் ... சொர்க்கத்தை காண ...... ஒரே இடம் ..........!!! சண்டையிடுவோம் ... சமாதானப்படுவோம் ... சட்டையை கூட ...... மாறிப்போடுவோம் ... சஞ்சலப்படாது மனம் ...!!! கூத்தடிப்போம் .. கும்மாளம் செய்வோம் .. கூடிச்சாப்பிடுவோம் ... தனியே ஒருவன் வந்தால் செத்தான் சேகர் ...!!! விடுமுறை என்றால் பள்ளி .. பருவம் சந்தோசப்படும் கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!! கொடிய துன்பம் கல்லூரியின் .... கடைசிநாள் ...!!! ^ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே கவிப்புயல் இனியவன் 

நினைவை மறக்க முடியவில்லை !!!

உனை பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை !!! உனை நினைக்கும் போது கவிதையாக வருகிறது !!! உனை வெறுத்ததாக சொன்னாலும் .. மனம் என்னை வெறுக்கிறதே தவிர .... உன்னை வெறுக்கிதில்லை .. உனை மறக்க முயன்றும் என்னால் உன் உருவம் மறைகிறது .. நினைவை மறக்க முடியவில்லை !!! விழிக்குள் பதிந்து இருக்கும் உன்..... உருவத்தை கண்ணீரால் கூட ... அழிக்க முடியவில்லை ... கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன் கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை நினைக்க விரும்புகிறேன் ...!!! ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் .. முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

விழியில் மை அழகு ...!!!

என்னவளின் ..... இடையில் மடிப்பு அழகு ... நடையில் சுவடு அழகு ... சடையில் பூ அழகு ... விழியில் மை அழகு ...!!! பேச்சில் வார்த்தை அழகு ... மூச்சில் காற்றழகு .. பார்வையில் வீச்சழகு! சொல்லழகு... பல்லழகு... உள்ளம் அழகு... புருவ வில்லழகு....!!! காலழகு... மேலழகு... கண்ணழகு... மெய் அழகு,..... அவளை வர்ணிக்கும் கவிதை அவளைவிட ... அழகு ............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

மனைவிக்கு ஒரு கவிதை

ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை ஏமாற்றிவிடு ...!!!

போலியாக  காதலிப்பதை விடு ... நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன் *** அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ... அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன்

நீ ஆசைப்படுகிறாயா ...?

உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் .... நட்சத்திரங்கள் ஆசைப்படும் முகில்கள் ஆசைப்படும் பூக்கள் ஆசைப்படும் ... நிலவும் ஆசைப்படும் ...!!! * * அதுவெல்லாம் இருக்கட்டும் ... என்னைப்பார்க்க நீ ஆசைப்படுகிறாயா ...? ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

இனியவன் காதல் வெண்பா

புள்ளிக்கோலமே ************************* எட்டு புள்ளிவைத்து நீபோட்ட   முற்றத்து கோலம் உள்ளுக்குள் கிள்ளிவைத்துச் சென்றாய்   அடிமனதை!- தாமரையே நாளை வருவாயா கோலமிட   நானிருப்பேன் கால் கடுக்க காலை வரும்வரையில்காத்து. ^ காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

சிறந்த பயிற்சி காதல்

சிரிப்பதற்கும் .... அழுவதற்கும் ... சிறந்த பயிற்சி .... காதல் ................!!! துணிந்து .... செல் வெற்றி .... என்கிறது உலகம் .... காதலை தூக்கி .... எறிகிறது...........!!! நான் ... முறிந்து விழுந்த மரத்தில் ... ஈரம் உள்ளவரை ..... துளிர் விடுவேன் .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1039

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

வறுமையில் வாழ்ந்த .... காலத்தில் பசியுடன் .... போராடினேன் .... என்றே இதுவரை .... நினைத்திருந்தேன் ....!!! தன்னம்பிக்கையுடனும் ..... அடுத்த இலக்கையும் .... வறுமையோடு ..... போராடினேன் என்பது ..... வசதி வந்தபோது ..... உணர்ந்தேன் ...............!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்

இதயத்தை காயப்படுத்தி விட்டாய்

எல்லோரும் தூக்கி எறிந்தபோது..... காயம் வந்தது தங்கினேன் .... நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை ^ நீ ஆயிரம் முறை நிராகரி .... நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் .... உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை

இதயத்தை காயப்படுத்தி விட்டாய்

எல்லோரும் தூக்கி எறிந்தபோது..... காயம் வந்தது தங்கினேன் .... நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை ^ நீ ஆயிரம் முறை நிராகரி .... நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் .... உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை