இடுகைகள்

மே 16, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகையே அலங்கரிப்பேன் ...!

அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...! ஆ ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ....! இ இனியவளே இன்பரசியே .... இதயத்தில் இடம் பிடித்தவளே ... இரண்டர என்னோடு வாழ்பவளே ... இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...! ஈ ஈரவிழி ஈஸ்வரியே ... ஈன்ற தாய் போல் என்னை ... ஈரத்துடன் காப்பவளே .... ஈரேழு ஜென்மம் நீதானடி .....! உ உயிரே உமையவளே .... உயிராய் நினைப்பவளே... உயிரில் கலந்தவளே ... உலகம் கவரும் காதலர் நாம் ...! ஊ ஊன் உறக்கம் இன்றி என்னை ... ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ... ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ... ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....! எ என் இதய எழில் அரசியே ... எதிர் பாராமல் என்னை சந்தித்தாய் எதிர்காலமாகிவிட்டாய் -நீ எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...! ஏ ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ... ஏற்றமடைய வைத்தவளே .... ஏற்ற துணையாய் வந்தவளே ... ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....! ஐ ஐம்பொன் சிலை அழகியே .... ஐம்பொறியையும் அடக்கியவளே... ஐயம் இன்றி வாழ்வும் நாம்