இடுகைகள்

மார்ச் 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மல்லிகையே ....!!!

காதல் மல்லிகையே ....!!! --- உன்னை பற்றிய.... எண்ணங்கள் எப்போதும் ... மல்லிகையின் மணம்.....! நினைக்கும் போதெல்லாம் .... நறுமணமாய் இருகிறாய் ....!!! உன்னையே நீ உன் கூந்தலில் சூடுகிறாய்.... உன் கூந்தலாய் மாற ... துடிக்கிறது இதயம் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 03

காதல் தாமரையே ....!!!

காதல் தாமரையே ....!!! ---- தாமரைபோல் ... இதழ்களாய் விரிந்திருக்கும் .... முக அழகியே ..... தாமரையின் நடுவில் ..... இறுக்கமாய் குவிந்திருக்கும் .... இதழ்கள் போல் உன்னை .... இதயத்தில் இருக்கமாய் .... வைத்திருக்கிறேன் ....!!! தாமரையில் தண்ணீர்போல் .... என்னை காதலித்து விடாதே ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 02

காதல் ரோஜாவே

நீ ரோஜாவின் இதழாய் .... இருந்துவிடு -இல்லையேல் ... முள்ளாய் இருந்துவிடு .... உன்னை செடியாய் ... நான் தாங்கியிருப்பேன் ...!!! உதிர்ந்து விழுவதா ...? முள்ளாய் குத்துவதா ...? நீ எடுக்கும் தீர்மானம் .... என்றும் இதய ரோஜா .... நீயேதான் ரோஜாத்தி....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 01

பூக்களால் காதல் செய்கிறேன்

பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான்  ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

இட்ட முட்டை சுடுகிறது  எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்  ஏக்கத்தோடு பார்த்தது கோழி  ^^^  கடத்தல்காரன் கையில் பணம்  வன அதிகாரிகள் பாராமுகம்  ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்  ^^^  காடழிப்பு  ஆற்று நீர் ஆவியானது  புலம்பெயரும் அகதியானது கொக்கு  ^^^  குடும்ப தலைவர் மரணம்  ஒன்பது பிள்ளைகளும் ஓலம்  கருத்தடை செய்த நாய் சாபம்  ^^^  சட்டம் ஒரு இருட்டறை  கருவறை இருட்டறை  சிசு மர்மக்கொலை  ^^^^^  வியர்வை சிந்தாமல் வேண்டாம்  வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்  ஊதியம்  @  கண் வரைதல் ஓவிய போட்டி  முதல் பரிசு பெற்றான் மாணவன்  பார்வையற்ற மாற்றுத்திறனாளி  @  தொட்டிக்குள் இலை குவிகிறது  தூய்மையானது சாப்பாட்டுக்கடை  ஏழை வயிறு நிரம்பியது  @  பூமி உருண்டை  அதுதான் சிறிதாக இருக்கிறது  தொட்டிக்குள் மீன்  @  வெற்றி கிடைக்குவரை  கட்சி மீது விசுவாசமாய் இரு  தேர்தல் ராஜ தந்திரம்  @@@