இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை

உண்மையை சொன்னால் .... உன்னை பற்றிய கவிதைதான் ... உன் அசைவுகளை வரிகலாக்குகிறேன்.... உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி .... உரைக்கபோகிறேன்.... உன் உதடுகள் பேசத்தேவையில்லை ... அசைந்தாலே போதும் .... நான் ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை 

அன்புள்ள காதலே .....!!!

காதலே ... நான் உன்னை பிரியாதவரை ... நீ என்னை பிரியாது இரு .... இல்லையேல் நான் உலகை .... பிரியும் வரையாவது  நீ பிரியாமல் இரு ....!!! @@@@@ காதலே .... காயப்படாமல் இரு ... காயப்படாமல் இருந்தால் ... காதலே இல்லை என்கிறது ... காதல் ....!!!

அன்புள்ள காதலே .....!!!

உன்னை வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் - நெருப்பின் ..... மேல் விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ...!!! @@@@@@@ காதலிக்க முன் கற்று கொள்ளுங்கள் ... காதல் நிலையானது ... காதலி நிகழ்தகவானது ...!!!

உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!

அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...!!! ஆ  ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!! இ  இனியவளே இன்பரசியே .... இதயத்தில் இடம் பிடித்தவளே ... இரண்டர என்னோடு வாழ்பவளே ... இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!!! ஈ  ஈரவிழி ஈஸ்வரியே ... ஈன்ற தாய் போல் என்னை ... ஈரத்துடன் காப்பவளே .... ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!! உ  உயிரே உமையவளே .... உயிராய் நினைப்பவளே... உயிரில் கலந்தவளே ... உலகம் கவரும் காதலர் நாம் ...!!! ஊ  ஊன் உறக்கம் இன்றி என்னை ... ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ... ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ... ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!! எ  என் இதய எழில் அரசியே ... எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்  எதிர்காலமாகிவிட்டாய் -நீ  எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!! ஏ ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ... ஏற்றமடைய வைத்தவளே .... ஏற்ற துணையாய் வந்தவளே ... ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!! ஐ  ஐம்பொன் சிலை அழகியே .... ஐம்பொறியையும் அடக்கியவளே... ஐயம் இன்றி வாழ்வும் நாம்  ஐவகை நிலத்தை ஆழ்வோம்....

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டை .... பெற்றெடுத்த என் தாய்க்கு .... வாழ்த்துக்கு பயன்படுத்த .... பிறக்கும் புத்தாண்டுதான் ...,. பெருமை கொள்ள வேண்டும் ... தாயே என் வாழ்த்துக்கள் ...!!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ என்னை வழிநடத்தும் .... தந்தையே பிறக்கும் புத்தாண்டு ... புதிய வழிகளை பிறப்பிக்கும் ... பிறப்புக்கு காரணமான தந்தையே ... உங்கள் வாழ்த்தை பெறுவதற்காக  தந்தையே என் வாழ்த்துக்கள் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ ஆண்டு தோறும் ஆயிரம் ஆயிரம் .... அர்த்தமுள்ள கருத்துக்களை ... அழகாக என்னுள் விதைத்த ... என் உயிர் ஆசானே - உம்மிடம்  இருந்து ஆண்டுக்கு ஆண்டு ... வாழ்த்துக்களை பெற்றேன் ... நானும் ஒருமுறையே வாழ்த்த... ஆசைப்படுகிறேன் குருவே .... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ புத்தாண்டென்றால் கொண்டாட்டம்....  கொண்டாட்டம் என்றால் நட்புதான்... நண்பா நான் வாழ்த்தாவிட்டாலும்..... என்னை வாழ்த்த மறக்காதவனே.... வாழ்துகிறேனடா உனக்கு முன் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ உணவின்றி உயிர் வாழமுடியாது ... உறவின்றி ஊரில் வாழமுடியாது ... உன்னதமான உறவுகளுக்கும் .... அருகில் உள்ள அயலவருக்கும்

சிறு வரியில் சமுதாய கவிதை

பாம்பை ... கண்டால் படையும் ... நடுங்கும் என்கிறார்கள் ... பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ... பார்ப்பவனுக்கு பாம்பு .... பாம்பாட்டிக்கு தொழில் ...!!! + சிறு வரியில் சமுதாய கவிதை

சிறு வரியில் சமுதாய கவிதை

மண்ணை பொன்னாக மதித்து ...  மண்ணை பெண்ணாக மதித்து ....  மண்ணை உயிராக மதித்து ...  மண்ணை பொன்னாக்க விதைத்தான் ...  கடன் வட்டி தொல்லை அவனை ...  மண்ணுக்குள் கொண்டு சென்று ....  விட்டதே ....!!!  +  சிறு வரியில் சமுதாய கவிதை

சிறு வரியில் சமுதாய கவிதை

வீடு  முழுதும் நறுமணம் .... இருந்தாலும் - சிறுதுளி...  துர்நாற்றம்  வீட்டையே ... கெடுத்து விடும் ....!!! நீ எவ்வளவு நல்லவனாக ... இருந்தாலும் - கெட்ட நட்பு .... உன்னையும் கெடுத்தே தீரும் ...!!! + சிறு வரியில் சமுதாய கவிதை

உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... கண்ணால் பேசியவை வரிகளாய்  ... வலிகளாய்  பிறக்கின்றன ....!!! என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடமாட்டாய் ...!!! உன் பார்வைக்கு அஞ்சி ... நீ அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்...!!! + கே இனியவன் கஸல் கவிதை ;763

காதல் வலியுடன் இனிமை ...!!!

என் இதயத்தை - நீ களிமண்ணாக நினைக்கிறாயோ...? அதுதான் நீ இப்படியெல்லாம் ... இதயத்தை பிசைந்து பார்கிறாய் ...!!! நீ எப்படி வேண்டுமென்றாலும் ... இதயத்தை பிசைந்து கொள் .. எனக்கு சிறு கவலை -உனக்கு கை வலிக்குமே என்றுதான் ...!!! நீயும் வலியை சுமந்து பார் .. காதல் வலியுடன் இனிமை ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -05

நான் காதலோடு இருக்கிறேன் ...

காதல் சோகத்தை மறக்க .... வைக்கவேண்டும் - நீயோ ... அடிக்கடி சோதித்து பார்கிறாய் .... காதல் ஒன்றும் அளவுகோல் ... கருவியல்ல - அளவிட முடியாத ... உணர்வு ....!!! நீ என்னை எவ்வளவு ... வேண்டுமானாலும் சித்திரவதை ... செய்துகொண்டே இரு .... தோற்கப்போவது -நீதான் நான் காதலோடு இருக்கிறேன் ... நீயோ காதலிப்பதோடு இருக்கிறாய் ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -04

சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!

நன்மை தீமை ... இன்பம் துன்பம் .... அனைத்தும் சொல்வதும் ... கேட்பதும்  காதல் தான் ....!!! உயிரே இவற்றில் இலாப ... நட்டம் பார்க்காதே .... காதல் தோற்றுவிடும் .... நீ பிரிந்து விட்டாய் என்றால் ... தீமையையும் துன்பத்தையும் ... சுமையாக எடுத்துவிட்டாய் ...!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -03

காதல் இரு சுவை கொண்டது ...

காதல் உள்ள இதயமே .... துடித்து கொண்டு இருக்கும் .... காதலை இழந்த இதயம் ... துடிதுடித்துக்கொண்டு இருக்கும் ....!!! காதலோடு வாழ்பவர்கள் .... சாதனையோடு வாழ்கிறார்கள் .... காதலை இழந்து வாழ்பவர்கள் ... சாத்தானோடு வாழ்கிறார்கள் ....!!! காதல் இரு சுவை கொண்டது ... காதல் இருக்கும் போது இனிக்கும் ... இல்லாதபோது கசக்கும் ....!!! + காதல் வலிக்கிறது கவிதை எண் -02

காதல் வலிக்குது

உன் ஒவ்வொரு பார்வைக்கும் ... ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ... உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ... ஒவ்வொரு கருணை இருந்தது ....!!! இப்போ ..... நான் அருகில் வரும் போது .... எங்கேயோ பார்க்கிறாய் .... நான் காதலோடு பேசுகிறேன் ... நீயோ காரணமில்லாமல் ... பேசுகிறாய் ....!!! இதயம் மட்டும் வலிக்கவில்லை ... காதலும் வலிக்கிறது ...!!!

கே இனியவன் ஹைக்கூகள்

நாம்  பிரிந்து வாழ்கிறோம்  இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்  தண்டவாளம்  @@@ தீயில் எரிகிறேன்  சாம்பலகமாட்டேன்  மெழுகுதிரி  @@@ கண்ணீர் வருகிறது  கவிதை வருகிறது  வலி  @@@ பிணியில் பணி செய்தவர்  பிணியிலும் பணி செய்தவர்  அன்னை திரேசா  @@@ சிறகடித்து பறக்குறது  சிறு கருவியால் பிறக்கிறது  கற்பனை  + கே இனியவன் ஹைக்கூகள் எண்ண தொகுப்பு - 02

அகராதி தமிழ் காதல் கவிதை

ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ... ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே .... ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்.... ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ... ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!! ஈகம் போல் உடல் அழகு .... ஈசன் போல் முக அழகு .... ஈடுகொடுக்க முடியாமல் ... ஈசன் யான் துடிக்கிறேன் .... ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!! ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை .... ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ... ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் .... ஈங்கு போற்றும் உன்னத காதல் ... ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!! + ஈர்மை ; இனிமை ,பெருமை  ஈரந்தி ; காலை மாலை  ஈகம் ; சந்தனமரம்  ஈங்கு ; இவ்வுலகம்  ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை  + கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கே இனியவன்

அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை

இல்லறம் என்பது இன்பசுகம் .... இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் .... இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு .... இதயத்திலும் இல்லறத்திலும் ... இசைமகள் குடியிருப்பாள் .....!!! இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ... இடர்களை தோற்ற எண்ணாதீர் .... இஷ்ட தேவனை தினமும் நினை .... இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ... இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை .... இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் .... இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ... இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்... இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ... இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!! + இங்கிதம் - இன்பம்  இட்டறுதி ; வறுமை  இன்பன் ; கணவன்  இல்லக்கிழத்தி ;மனைவி  கவிதை ; அகராதி தமிழ்  வாழ்க்கை கவிதை  கவிஞர் ; கே இனியவன்

எமக்காக சுமப்பவரே

படம்
எமக்காக பாவங்களை சுமப்பவரே .... போதும் ஆண்டவரே நீங்கள் ... சுமந்தது ....!!! சிலுவையில் உம்மை ... சித்திரவதை செய்தபோதும் சிரித்துக்கொண்டே எமக்காய் ... சித்திரவதையை ஏற்றவரே.... சித்தம் அறிந்து சொல்கிறேன் ... எமக்காக நீர் படும் சித்திரவதை ... போதும் ஆண்டவரே போதும் ....!!! அண்டத்தில் வாழும் மாந்தரின் ... அறிவுக்கண்ணை திறந்துவிடும் ... அவரவர் பாவங்களை அவரவரே ... சுமக்கவிடும் - எமக்காக நீவீர் சுமப்பதால் இன்னும் பாவங்கள் ... பெருகிக்கொண்டே செல்கிறது ....!!! ஒவொருவரின் பாவத்துக்கும் ... அவர்கள் சிலுவை சுமக்கனும் ... சித்திரவதை படவேண்டும் ... நீவீர் எமக்காக பட்டதுயரை ... அவரவர் சுமக்கனும் - பாவத்தின் ... வலியை அவரவர் உடனுக்குடன் ... புரியவேண்டும் ...!!! உயிர் வேறு உடல் வேறாய்... பேரண்டத்தின் சக்தியால் பெற்றவரே ... நீ பெற்ற வலியை நாம் பார்த்த போது .... எம் உயிர் வலித்தது - காரணம் .. உடல் உயிர் ஒன்றாய் வாழ்கிறோம் .... ஆண்டவரே சுத்த அறிவை தாரும் .... எம்மையும் உடல் வேறு உயிர் வேறாய் .. தொழிற்படவையும் ......!!! மனித பகுத்தறிவு சிறப்பாக .... தொழிற்

கே இனியவன் சென்ரியூக்கள்

சுவருக்குள்  சண்டை பரகசியமாகிறது தொலைகாட்சி நிகழ்சி $$$ குழந்தையால் முடியாது தாத்தாவால் முடியாது புஸ்பம் $$$ உயிரில்லை பேசிகொண்டிருக்கும் தொலைக்காட்சி $$$ பலதிருமணம் சட்டம் தடுக்காது திரைப்படம் $$$ கடவுளே பாதுகாத்திடு கோயிலில் வேண்டுதல் வாசலில் புதுச்செருப்பு $$$ கே இனியவன்  சென்ரியூக்கள்

கே இனியவன் ஹைக்கூகள்

தகுதி இல்லை விழுந்து விட்டேன் பதவி கிடைத்தது @@@ நான் பணக்காரன் பாலில் குளிப்பேன் சுவாமி சிலை @@@ நான் இரட்டை பிறவி உருவத்தில் வேறுபாடில்லை முன் கண்ணாடி @@@ சின்ன உரசல் உடல் சூடாகியது தீக்குச்சி @@@ அழகில் கிள்ளினேன் மயங்கி விழுத்தது மலர் + கே இனியவன் ஹைக்கூகள் 

அப்படியே என்னுள் இருகிறாய் ...

நீ எப்படி என்னிடம் வந்தாயோ .... அப்படியே என்னுள் இருகிறாய் ... நான் உனக்கும் சேர்த்து மூச்சு ... விடுகிறேன் .....!!! எத்தனை முறை - நீ சிரிக்கிறாயோ -அத்தனை .. முறை நான் உன் கன்னகுழிக்குள் ... புதைந்து விடுகிறேன் ....!!! நாள் முழுதும் பல வேதனை ... ஒரு முறை உன் அழைப்பு ... தொலைபேசி ஓசை- துடைத்து .. விடும் வேதனையை ....!!! + இதயம் தொடும்காதல் கவிதை

இதயம் தொடும்காதல் கவிதை

எனக்கும் காதலி இருக்கிறாள் .... ஊர் அறிய செய்தவள் - நீ உன் காதலுக்கு நன்றி ... உன் நினைவுகளோடு ... நான் வாழவைத்ததற்கு ..... உன் காதலுக்கு நன்றி ... பிறப்பின் ஆனந்தத்தை .... உணரசெய்தவளே - நீ காதலியில்லை -காதல் பிரபஞ்சம் ......!!!

காதல் ஒரு பூச்சியம்

காதல் ஒரு பூச்சியம் காதலித்தவர் சேர்ந்தால் காதல் பூச்சியமாகி விடும் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ... கண்ணீரால் கருகும் ... வாழ்க்கை வேண்டாம் ...!!! @@@@@ கண்ணீருக்குதான் ... சிந்தவும் தெரியும் .... சிந்திக்கவும் தெரியும் ....!!! @@@@@ எல்லா இடத்திலும் ... உண்மை பேசியவனும் ... துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'

ஒரு சிந்தனை கவிதை

நான் அரசியல் வாதியாவேன் .... அடுத்த வேளை உணவுக்கு ... போராடினாலும் என்  கர்வம் ... விட்டு கொடுக்கமாட்டேன் இறந்தாலும்..இறப்பேன் என் வறட்டு கர்வத்தை விடவே மாட்டேன் .....!!! இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டு ... நல்லவனாக நடிக்க நாள் தோறும் ... ஒவ்வொரு வேடம் போடுவேன் ... முட்டாள்கள் நான் உண்மையானவன் ... என்று ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள் .... சிலகாலத்தில் குறுக்கு வழியால் .... பணம் சம்பாதிப்பேன் - அதில் ஒரு பகுதியை சமூக தொண்டு செய்வேன் ...!!! சமூக சிப்பி.. சமூக பற்றாளன் ... சமூகத்தில் பிரதி நிதி என்று ... சமூகம் பட்டம் தரும் -அதுவே ...... அரசியலுக்கான அடிப்படைத்தகுதி ... அரசியல் வாதி ஆவேன் - அப்போதான் சொன்னதை செய்யதேவையில்லாத ... சமூக தொண்டன் ஆவேன் .....!!! உண்மை அரசியல் வாதிகளை ... ஏளனம் செய்வேன் .வாழதெரியாத .. பச்சோந்திகள் என்பேன் .....! இறப்பேன் எனக்கு சிலை வரும் .... இறந்தபின்னும் சமூக தொண்டனாக ... என் சார்பு மக்களுக்கு தலைவனாக ... வாழ்ந்து கொண்டிருப்பேன் ......!!!    

காட்சியும் கவிதையும் 02

படம்
தெய்வத்தை நாம் தான் ... வணங்கவேண்டும் ... தெய்வம் எங்களை வணங்க ... கூடாது ....!!! தாயே நீங்கள் ... இருகரம் கூப்பி நிற்கும் ... போது அடிவயிறுவரை ... வலிக்கிறது ...!!! எந்த தாயும் ... கரம் கூப்பி வரம் கேட்க ... வைக்காதீர் - அது எமக்கு ... சாபம் ....!!!

காட்சியும் கவிதையும் - 01

படம்
நாம்  நடை பழகும் போது ...  எமக்கு ஊன்று கோல்...  நம் தாய் - நடை இடறி ...  நாம் விழுந்தாலும்...  தன்னையே நிந்திப்பார் ...  தாய் .....!!!  தாயே ....  நீங்கள் நடை இடறும் போது...  நாங்கள் தானே உமக்கு ...  ஊன்று கோல் - எதற்காக  இந்த பட்டவயத்தில் ஏன்...  இந்த பட்ட தடி ...?  தாயே புரிகிறது ...  உங்கள் சிந்தனை ...  பிள்ளையை சுமந்த நீங்கள் ...  பிள்ளைக்கு சுமையாய் இருக்க ...  விரும்பவில்லை போலும் ...!!!

என் தனிமை ....!!!

தனிமையில் இருந்து ... என்னையே நினைத்தேன் ... தனிமை இனிமையாக இருந்தது ...!!! இப்போ ... தனிமையில் இருந்து .. உன்னை நினைக்கிறேன் ... கொடுமையாக இருக்கிறது ... என் தனிமை ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

என் வலி புரியும் உயிரே ....!!!

பிரிந்து விட்டோம் என்று ... நீ எப்படி சொல்வாய் ....? பிரித்தெடுக்க உன் நினைவுகள் ... என் இதயத்தில் பசையால்... ஒட்டப்படவில்லை ....!!! நீ தந்த நினைவுகள் ... உனக்கு கடுகாய் இருக்கலாம் ... எனக்கு அது கருங்கல் ...!!!  + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

அழைப்பிதல் தருகிறாய் ....!!!

காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன் திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

காதல் மரமாக ...

காதல் மரமாக ... தோன்றுவதில்லை ..... தளிராகதான் தோன்றும் ...!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

நம்காதல் ....!!!

கருங்கல்லில் .... ஆணி அடிப்பது போல் .... நம்காதல் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

( SMS ) கவிதை

காதலில் ஓடி விளையாடியது நீ தடக்கி விழுந்தது - நான் + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

உன் நினைவு ....!!!

தொலைவில்  இருக்கும் .... போது அனலாய்கொதிக்குது ... உன் நினைவு ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

இதயமில்லை

உன்னை நான் காதல் செய்ய முடியாது உன்னிடம் இதயமில்லை + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

கண்ணீரும் நீ

காதல் கண்ணில் கருவளையமும் நீ கரு விழியும் நீ கண்ணீரும் நீ + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

காதல் இல்லை

காதல் சொல்லுகிறாய் கண் அழகாக இருக்கிறது இதயத்தில் காதல் இல்லை + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

மறந்து விடாதே ....!!!

கண்ணுக்குள்.... கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

முக கண்ணைவிட .. இதய கண் தான்... உன்னை அதிகளவு ... பார்த்திருக்கிறது ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை 

பிரிவை தாங்க முடியவில்லை ....!!!

என் முகத்தை ... தண்ணீரால் கழுவ -நீ விரும்பவில்லை போல் ... தினமும் கண்ணீரால் .... கழுவவைக்கிறாய் ....!!! உன்னை தவிர வேறு.... நினைவுகள் இருந்தால் .... விதம் விதமாய் அழகு ... காட்டுவேன் - என்னை விட உன்னை விரும்பியதால் ... பிரிவை தாங்க முடியவில்லை ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

உன் பிரிவும் மௌனமும் ...!!!

என் கவிதை எல்லாம் .... வலியாகவும் அழகாகவும் ... என்கிறார்களே - அவர்களுக்கு  தெரியப்போகிறதா .....? அழகுக்கு காரணம் .... உன் முகமும் நினைவும் ... வலிக்கு காரணம் ... உன் பிரிவும் மௌனமும் ...!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

நீ பிரிந்து போன .... நினைவுகளை நினைக்கிறேன்... கண்ணில் கண்ணீராக வருகிறது ... எண்ணங்களில் கவிதையாக ... வருகிறாய் .....!!! உன்னால் நான் நல்ல ... ஒரு பட்டம் பெற்று விட்டேன் ... காதல் பைத்தியம் .... சொல்பவர்கள் பாவம் .... இழந்த காதலை மதிக்க ... தெரியாதவர்கள் ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

அதுவே என் காதலி ...!!!

நீ என்னை காதலிக்காமல் .... இருந்துவிட்டு போ .... எனக்கு ஒரு கவலையும் ... இல்லை .....!!! என்னை காதலித்த ... காலத்தில்  கவிதையையும் ... காதலித்தாய் - எப்போதும் ... கவிதையையும் காதலி ... அதுவே என் காதலி ...!!! + இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!

காதல் விண்ணப்பம் ....!!!

என்னவளே ஒருமுறை  சொல் என்னை காதலிக்கிறேன்  என்று - அன்றிலிருந்து ... என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!! நான் எழுதுவது கவிதை  என்று நினைக்காதே .... உன்னிடம் நான் கேட்கும் ... காதல் விண்ணப்பம் ....!!! + இதயத்தில் காதலியில்லை  காதல் இருக்கிறது ....!!!