இடுகைகள்

அக்டோபர் 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா..... கை பிடித்தபடி அருகில் தங்கை...... குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்..... ஆனாலும் இதயம் முழுதும் வலி..... உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!! ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்...... ஆயிரம் மின் அரட்டை நொடியில்...... ஓசை கேட்காத பல நூறு குரல்கள்...... பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்...... இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ... உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் .... உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!! அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்..... முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே .... யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ...... இதயத்தை இழந்தவர்களை தவிர ...??? + கே இனியவன் காதல் சோக கவிதை

உனக்காக என் உயிர்

அழுகை பிடிக்கும் எனக்கு ... வேதனைகள் நீ தந்ததால்....!!! வலிகள் பிடிக்கும் எனக்கு காயங்கள் உன்னால் வந்ததால் ....!!! தோற்க பிடிக்கும் எனக்கு வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!! எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!! இதென்ன... மரணம் கூட பிடிக்கும் எனக்கு உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

பட்டமரம் தழைப்பதில்லை ....

மரத்தடியில் இருந்து பேசிய .... வார்த்தைகள் -இலை உதிர் காலம் .... வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!! மரநிழலில்...... நிற்கும்போது நீ எனக்கு ..... கூறும் ஆறுதல் வார்த்தைகள்..... நினைவு வருகிறது ....!!! பட்டமரம் தழைப்பதில்லை  .... கெட்ட மனம் நேசிப்பதில்லை .... பட்டமரம் விறகாகும் .... கெட்ட மனம் விரக்தியாகும் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

யாரையுமே நேசிக்காது ...♥

உண்மையான அன்பை எவ்வளவு வேண்டுமானாலும் காயப் படுத்து ...!! அது உன்னை மறுபடியும் நேசிக்கும் ...♥ ஏமாற்றி விடாதே .. ♥ அது மறுபடியும் யாரையுமே நேசிக்காது ...♥ + கே இனியவன் காதல் சோக கவிதை

தாயே உனக்கு முன்

தாயே.... உனக்கு முன் ....... நான் இறந்தால் ..... என் கல்லறையில்...... உன் பெயரை எழுதி வை கல்லறையில் இருந்து ..... உன்னை நினைப்பதற்கு அல்ல மீண்டும் உனக்கே மகனாய் .... பிறப்பதற்காக .....!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )

எப்படி சென்றாய் ...?

கண்ணில் விழுந்து இதயத்திற்கு வந்தாய் .... இதயத்தில் இருந்து.... எப்படி சென்றாய் ...? நான் இறப்பதற்கு முன் .... உன் காதலை தந்துவிடு .... இல்லையேல் இறந்தபின்னும் .... உன் நினைவில் வாழுவேன் .... வேண்டாம் உயிரே .... உயிரோடு படும் வேதனையை .... உனக்கு தர மாட்டேன் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

காதலுக்கு தெரியும் ....

தாய்க்கு தெரியும் .... குழந்தையை பெற்றெடுத்த வலி ....!! தந்தைக்கு புரியும் .... குழந்தையை தோளில் சுமந்த வலி ....!! நண்பனுக்கு தெரியும் .... பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!! உனக்கு தெரியும் .... உன் காதலை நான் சுமக்கும் வலி .....!! காதலுக்கு தெரியும் .... உன்னால் நான் படும் வலி ......!! மற்றவை எல்லாவற்றிலும் வலி மட்டுமே இருக்கும் ..... காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை