இடுகைகள்

செப்டம்பர் 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

கண்களால் ஜாடைசெய்தால் ... காதலில் தவிர்க்க விட்டாள் .... காதலின் வலியென்ன ...? கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!! அவளின் இதயம் என்னிடத்தில் அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....? நான் வாழ்கிறேனே  ...... என் இதயம் அவளிடம் ...!!! நான்  கல்லறையில் இருக்கிறேன் அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்.. வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ... அவளாவது வாழட்டும்  காதலோடு .... எனக்கும் சேர்த்து சில காலம் ..............!

என்னை ஒருமுறை திட்டு.....

ஒருமுறை சிரி உயிரே .... உன் கன்னகுழியின்.... அழகை ரசிப்பதற்கு ....!!! என்னை ஒருமுறை திட்டு ..... உதடுகளின் அசைவை .... அழகை ரசிப்பதற்கு ....!!! என்னை ஒருமுறை ..... முறைத்து பார் உயிரே .... உன் கண்கள் கதகளி.... ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!! ஒரு முறை கோபித்துவிடு..... உன் மௌனத்தின் வரிகளை ... கவிதையாக வடிப்பதற்கு ....!!!

கேள்வி..? பதில்..!!! கவிதை

கேள்வி ....!!! உனக்கு எப்படி ....? இப்படியெல்லாம் .... கவிதை வருகுது ..? காதலிக்கிறாயா ..?  காதலிக்க போகிறாயா ...? காதல் தோல்வியா ..? பதில் ....!!! கவிதை வருகிறது காதலால் .... காதலுக்காக காத்திருந்தேன் ... கவிதை தொடர்ந்து வருகிறது .... புரியவில்லையா ...? என்னானாலும் புரியமுடியவில்லை.... அவளின் காதலை .....!!! 

நீ இங்கே - நான் எங்கே ...?

இங்கே.....!!! துடித்து கொண்டிருக்கும் .... என் இதயத்தில் உன்நினைவுகள் .... பூத்து கொண்டிருக்கிறது ....!!! அங்கே.....? துடிப்பில்லாத உன் இதயத்தில் ..... நான் என்ன பாடுபடுவேனோ ...? ஒருமுறை என்னை நினைத்துவிடு .... உன்னிடம் இருந்து நான் .... வெளியேறுவிடுகிறேன் ....!!! நீபாதி நான்பாதி தான் காதல் ..... நீ வேறுபாதி நான் வேறு பாதியாய் ..... என்றாகிவிட்டது நம் காதலில் ....? நீ இங்கே  இருக்கிறாய்  நான் எங்கே...?

ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை

................................ ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை  ................................. "இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி " ---- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் " ----- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் " ----- "இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் " ----- "இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு " + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

"ஒரு வரியில் காதலும் கவிதையும் "

..............................  "ஒரு வரியில் காதலும் கவிதையும் " ............................. " கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் " ------- " உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு " ------- " காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் " ------- "இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் " ------- "காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது " ------- + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி -02

ஒருவரியில் காதல்கவிதை வரி

.................................... ஒரு வரியில் இதயக்கவிதைகள் ....................................... " என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது " ------- " உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது " ------- " தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் " ------- "கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் " ------- "கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்" ------- + கே இனியவன் கவிதைகள்  ஒருவரியில் காதல்கவிதை வரி